Pages

Sunday 5 August 2012

துருக்கி இஸ்லாமிய (...?) வாதிகளின் வித்தியாச மானதொரு போராட்ட உபாயம் 2007; By; Muslim Cleric MAM Mansoor (Plus*)

1/துருக்கி போலி இஸ்லாமிய (.....?) வாதிகளின் வித்தியாசமானதொரு
மதுபான (..?) -  இஸ்லாமிய (...?) அரசியல் போராட்ட உபாயம்; (In below picture, Former Isreal Prime Minister (Left)  - The enemy of Islam, Muslims & Gazans. The Stature (Middle) on the wall, Musthafa Kamal- British Agent & Spy ...etc..Says; M. R. Mohamed)





Brothers and sisters who support ergodan and the Turkish government.... how do you explain this sort of cosyness (taking of instructions) from America? Perhaps erdogan and his foreign minister are giving aid to the poor people of New Orleans, America? Honestly, how can this sort of thing be justified?see below picture

 2/
NB: Please do not trust this article fully, as there are many Wrong - Dangerous - UnIslamic ideas and concepts in this article. This article is just information for further Islamic & Academic research! Says; M.R. Mohamed, The Theoretician of Sri Lanka Think Tank – UK & The SCHOOL of Political & Economic Thoughts-Sri Lanka

3/
முஸ்லிம் உம்மா என்பது ஒரு சர்வதேச சமூகம். இன்னொரு வகையில் சொன்னால் நன்மையை வளர்த்து தீமையை ஒழிக்க உருவாகிய சர்வதேசப் பேரியக்கம். எனவே மொழி, இனம், பௌதீக எல்லை என்பவற்றைக் கடந்தது அந்த உம்மா. உண்மை இவ்வாறிருந்த போதும் யதார்த்தத்தில் முஸ்லிம் உம்மா இன்று பௌதீக எல்லைகள் கொண்ட நாடுகளாகத் துண்டாடப்பட்டுள்ளது. இனங்களாகவும் கூடத் துண்டாடப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் குறிப்பிடத்தக்களவு பெருந் தொகையினர் சிறுபான்மையினராக பல நாடுகளிலும் சிதறி வாழும் சூழ் நிலை உள்ளது.

 முஸ்லிம் உம்மா ஒன்றிணைந்து நிற்க முடியாத பாதக நிலைமை இப்படி இருக்க தற்போதைய சர்வதேச சூழ்நிலையும் முஸ்லிம் உம்மாவுக்குப் பாதகமாகவே உள்ளது. முஸ்லிம் உம்மாவின் பல பூமிகள் பயங்கர யுத்த களமாக மாறியுள்ளது. ஈராக், பலஸ்தீன், ஆப்கானிஸ்தான், சோமாலியா, சச்னியா என்பன பல தசாப்தங்களாக இந்நிலையில் உள்ளன. சூடானும் அப்படியான நிலைக்கு மாறிவிடுமோ என்ற நிலைமை உள்ளது. அரபு உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளில் காணப்படும் அடக்கு முறை சர்வாதிகார ஆட்சியின் காரணமாக அந் நாடுகளின் இஸ்லாமிய இயக்கங்கள் ஆட்சிப் பகுதியில் செல்வாக்கு செலுத்தும் நிலைமை உருவாக முடியாத நிலையே தொடர்ந்தும் இருந்து வருகிறது.

சர்வதேச ஏகாதிபத்திய ஆதிக்க சக்திகள் இஸ்லாத்திற்கு எதிராக முருக்கி விட்டுள்ள யுத்தமே இவை அனைத்திற்கும் பின்னணியாக அமைகிறது. எந்த ஒரு நாட்டில் இஸ்லாமிய சக்திகள் ஆதிக்கம் பெறப் போனாலும் அந்த சக்திகளுக்கு எதிராக குறிப்பிட்ட அந்நாட்டின் அரசு மட்டுமல்ல. இந்த சர்வதேச சக்திகளும் பின்னணியாக நிற்கின்றன. ஒவ்வொரு நாட்டின் இஸ்லாமிய இயக்கமும் தனித் தனியாக நின்று இப் பெரும் சக்திகளை எதிர் கொள்ள வேண்டிய நிலையுள்ளது. இஸ்லாமிய இயக்கங்கள் இன்னும் ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக உருவாக முடியவில்லை. என்பது மட்டுமல்ல குறிப்பிட்ட நாட்டினுள்ளே உள்ள பல இஸ்லாமிய இயக்கங்கள் கூட ஒன்றாக நிற்க முடியா சூழ் நிலையே இன்னும் உள்ளது.

ஒவ்வொரு இஸ்லாமிய இயக்கமும் தனித் தனியாக ஒவ்வொரு நாட்டிலும் நின்று போராடும் இந் நிலையில் வெற்றிக்கான அடையாளங்களைக் காண்பது மிகவும் கடினம். இங்கு நாம் மக்களாதரவு பற்றிப் பேச வரவில்லை. அது இஸ்லாமிய இயக்கங்களின் பக்கமே உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மக்களாதரவையும் மீறிய சர்வதேச ஆதிக்க சக்திகளைப் பின்னணியாகக் கொண்ட தேசிய சர்வதிகார அரசுகளோடு எவ்வாறு போராடுவது என்பது பற்றியே இங்கு பேசுகிறோம். அரை நுற்றாண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய உலகில் தொடர்ந்து வரும் இப் போராட்டம் பல படிப்பினைகளையும், பல்வகைப் போராட்ட உபாயங்களையும் அதனை ஆராயும் போது சிறுபான்மையினரான எமக்குக் கூடத் தரமுடியும்.

 இஸ்லாமிய உலகில் எங்கு பார்த்தாலும் ஆழ்ந்த கவலையையும், மனச் சோர்வையும் தரும் நிகழ்ச்சிகளையே காண முடிகிறது. இந்நிலைமை ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் நம்பிக்கையீனத்தைத் தரமாட்டாது என்பதில் சந்தேகமில்லை. எனினும் மனிதன் என்ற வகையில் வேதனையும், கவலையும் அவனைப் பீடிக்கவே செய்யும்.

இப்பாதகமான கவலையும், வேதனையும் நிறைந்த சூழ்நிலைக்குள்ளால் ஒரு நம்பிக்கையின் ஒளிக்கீற்று பார்த்து சந்தோஷப்படும் ஒரு நிகழ்வு நடக்கவே செய்தது. நீதிக்கும், அபிவிருத்திக்குமான கட்சி|| இரண்டாவது முறையாகவும் மிகுந்த பெரும் பான்மையுடன் துருக்கியில் ஆட்சி ஏறியமையே அந்த நிகழ்வாகும். எப்படி இது சாத்தியமாகியது? இதிலிருந்து நாம் பெறும் படிப்பினை ஏதும் உள்ளதா?

துருக்கி கிலாபத்தின் தலைமையகமாக இருந்த நாடு. ஆனால் நவீன காலப் பிரிவில் மிகத் தீவிர மேற்கு மயப்படுத்தலுக்கு உட்பட்ட நாடும் அதுவே அந்த நாட்டிலேயே முதன் முதலாக இஸ்லாமிய வாதிகளின் கை ஓங்கியிருக்கிறது எனின் அது ஆச்சரியமானதொரு இறை நாட்டமே.

கிலாபத்தைக் கவிழ்த்து துருக்கியை மதச்சார்பற்ற நாடாகப் பிரகடனப் படுத்திய கமால் அதாதுர்க் மதச்சார்பற்ற கொள்கையைப் பாதுகாப்பதற்கான அனைத்து சட்ட ரீதியான ஒழுங்குகளையும் செய்தார். இப் பின்னணியில் மதச்சார்பற்ற துருக்கியின் கொள்கைக்கு மாற்றமாக சில போது தோன்றிய தலைவர்கள் அனைவர்களும் விரட்டப்பட்டனர். இப் பின்னணியில் அத்னான் மன்திரீஸ் தூக்கிலிடப்பட்டார். 1960, 1971, 1980 என மூன்று இராணுவப் புரட்ச்சிகளை துருக்கி மேற்கொண்டது. 1997 ஆம் ஆண்டு துருக்கி பிரதமராக இருந்த அர்பகானை இராணுவம்  ராஜினாமாச் செய்ய நிர்ப்பந்தித்தது.

அது முழு மதச் சார்பற்ற நாடு. பாடசாலை, பல்கலைக்கழகங்களிலிருந்து எங்கும் அரச நிறுவனங்களில் இஸ்லாமிய உடைகள் அணிய முடியாது. அரச அங்கீகாரம் பெற்ற வகையில் இஸ்லாமிய பாடசாலைகளோ, பல்கலைக்கழகங்களோ ஆரம்பிக்க முடியாது. இந்த நாட்டில் போராடுவது எப்படி? அதற்கான உபாயங்கள் யாவை?

 துருக்கியின் இஸ்லாமிய இயக்கம் இயக்கமாகத் தோன்றவில்லை. அரசியற் கட்சியாகவே ஆரம்பித்தது. அர்பகான் தான் முன்வைத்த கொள்கையை இஸ்லாமிய பெயர் சூட்டி அழைக்கவில்லை. 'சமூக நீதிக்கான கொள்கை' என்ற பெயருடனேயே அவர் முன் வைத்தார். ஒரு சந்தர்ப்பத்தில் கமால் அத்ததுர்கின் சமாதியின் முன் நின்று மரியாதை செலுத்த வேண்டிய நிலையும் அர்ப்பகானுக்கு ஏற்பட்டது. எனினும் அவர் ஓர் இஸ்லாமிய வாதியாகவே கருதப்பட்டார். அவரது பேச்சும், நடத்தையும் இஸ்லாமிய கடும் போக்காளர் என்றுதான் அவரது எதிரிகளான மதச்சார்பற்றோரை பார்க்க வைத்தது. இந்நிலையில் அர்பகான் நாட்டில் ஒரு பாரிய இஸ்லாமிய அலை தோன்றுவதற்கு பெரும் பங்காற்றினாலும் அரசரீதியாகப் பாரிய மாற்ற மொன்றை சாதிக்க அவரால் முடியவில்லை. தற்போதைய துருக்கியின் பிரதமர் ரஜப் தய்யிப் அர்த்தகோனும், ஜனாதிபதி அப்துல்லா கோலும் அர்பகானின் மிக நெருங்கிய மாணவர்கள் சகாக்கள். எனினும் அவர்கள் துருக்கியின் இந்தப் பாதகமான நிலையை அவதானித்து வந்தார்கள்.

இந்நிலையில் 1998 ஆம் ஆண்டு ரபாஹ் கட்சியின் ஒரு பொதுக் கூட்டத்தில் ஓர் இஸ்லாமிய கவிதை வாசித்தார் என்ற குற்றச்சாட்டின் பின்னணியில்
4 மாதங்கள் நீதி மன்றம் அர்தகோன் மீது சிறைத் தண்டனையை விதித்தது. சிறை சென்ற அர்தகோன் சிறையிலிருந்து வெளியேறும் போது புதிய சிந்தனையோடு வந்தார். கடும் போக்காளர் என்ற நிலையை விட்டு மிகவும் கீழிறங்கினர்.

'நான் பழைய அரசியல் சேர்ட்டைக்களைந்து விட்டேன்' என்று கூறினார். துருக்கியின் மதச் சார்பற்ற சிந்தனையை தாம் ஏற்பதாகவும் மதச் சார்பின்மை மதத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கைக் கொள்ளல் என்ற கருத்தைக் கொடுக்காது. என்றும் அர்தகோன் விளக்கினார்.

இப் பின்னணியில் 2001 ஒகஸ்ட் 14ல் அர்பகானிடமிருந்து பிரிந்து 'நீதிக்கும் அபிவிருத்திற்குமான கட்சி|| என்ற பெயரில் புதியதொரு அரசியல் கட்சியை ஆரம்பித்தார். 2002 இல் தேர்தலில் நின்ற இக் கட்சி மிகப் பெரும் வெற்றியை சம்பாதித்தது. பாராளுமன்றத்தின் மொத்த 550 ஆசனங்களில் 352 ஆசனங்களைக் கைப்பற்றி தனியாக நாட்டை ஆளும் அதிகாரத்தைப் பெற்றது. 2007 வரையிலான தனது ஆட்சிகால பிரிவில் மிகப் பெரும் சாதனைகளை கட்சி செய்து முடித்தது.

ஜனாதிபதி நியமனம் சம்பந்தமான பிரச்சினையால் மீண்டும் தேர்தல் நடாத்தப்பட்டது. துருக்கியின் 52 வருட கால வரலாற்றில் என்றும் நிகழாதவாறு ஆட்சியிலிருந்த கட்சி மொத்தவாக்கில் சென்ற முறை பெற்றதை விட 12% மேலதிக வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தது. மீண்டும் அர்தகோன் இன்னும் 5 வருடங்களுக்குத் துருக்கியின் பிரதமர் இப்போது ஜனாதிபதியும் அதே கட்சியைச் சேர்ந்த அப்துல்லா கோல். இப்படி இஸ்லாமிய வாதிகளின் கையில் துருக்கியின் ஆட்சியதிகாரம் சென்றுள்ளது.

நவீன வரலாற்றில் இதுவே முதன் முறையாக மிகப் பெருன்பான்மையுடன் இஸ்லாமிய வாதிகள் அரசைக் கைப்பற்றிய சந்தர்ப்பமாகும். அடுத்து ஹமாஸ் இயக்கமும் அதிகாரத்தை பலஸ்தீனில் கைப்பற்றியது. ஆனாலும் அங்குள்ள போராட்ட சூழல், ஜியோனிசம் சர்வதேச ரீதியாக முடுக்கிவிட்டுள்ள எதிர்ப்பலைகள் ஆட்சியை அமைதியுடன் கொண்டு செல்லும் நிலைக்குத் தடையாக  அமைந்துள்ளது.

 இதற்கு முன்னால் அல்ஜீரியாவில் இஸ்லாமிய வாதிகள் பெரும் வெற்றி பெறும் வாய்ப்புக் கிடைத்தும் அவர்கள் வெளியிட்ட கருத்துக்களும், சிந்தனைகளும் பாதகமான சர்வதேச சூழலை உருவாக்கி இறுதியில் போராட்ட நிலைக்கு மாறி பெரும் அழிவு நிலையையே ஏற்படுத்தியது.
ஏனைய பல நாடுகளிலும் இஸ்லாமியக் கட்சிகள் அரசுடன் இணைந்தோ எதிர்கட்சி ஆசனங்களிலோ உட்கார்ந்தாலும் துருக்கியில் ஏற்படுத்திய பாரிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை.

ஆட்சியில் 2002 இலிருந்து அமர்ந்த இக்கட்சி நாட்டில் பெரும் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டது. இப்பகுதியில் துருக்கியின் ஆய்வாளர்களில் ஒருவரான அவ்ரகான் அலி தரும் தகவல்களில் சிலவற்றை மட்டும் கீழே தருகிறோம்.

-37%  இருந்த பணவீக்க நிலையை 9% மாகத் குறைத்தமை.
-துருக்கியின் நாணயமான லீரா தன் பெறுமானத்தை முழுமையாக                                    
 இழந்திருந்தது. இந் நிலையில் அதன் 6 சைபர்களை அழித்து ஏறத்தாழடொலருக்கு சமனாகக் கொண்டுவந்தமை.

                                    இப்போதைய லீராவின் பெறுமானம்

                                               1½ லீரா  = 1 டொலர்.
 -270000 வீடுகளை 15-20 வருடகாலங்களில்  வீட்டின் பெறுமானத்தைக் கட்டி முடிக்கும் வகையில் ஏழைகளுக்குப் பங்கிட்டமை.

-2500 டொலராக இருந்த தனி நபர் வருமானத்தை 5500 ஆக மாற்றியமை.

-36 பில்லியன் பெறுமானமாக இருந்த ஏற்றுமதி நிலையை 95 பில்லியன்             
             ஆக்கியமை.

-சர்வதேச நாணய நிதிக்கான துருக்கியின் கடன் 23 பில்லியன் டொலராக இருந்தது. அதனை 9 பில்லியனாக மாற்றியமை.

-39 புதிய பல்கலைக் கழகங்களை அமைத்தமை.

-பொது மக்கள் அனைவருக்கும் அரச மருத்துவ நிலையங்கள் மட்டுமன்றி  தனியார் மருத்துவ நிலையங்களையும் (Hospitals) திறந்து விட்டமை. அதாவது  ஒரு சாதாரண நோயாளி தனியார்  மருத்துவ விடுதியில் நுழைந்தால் குறிப்பிட்ட சிறிய வீதமொன்றை மட்டும்  கட்ட அரசு மீதித் தொகையைக் கட்டும்.
 -தனி மனித சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சட்டங்களை இயற்றியமை. பொலிஸ் நிலையங்களில், சிறைச்சாலைகளில் சித்திரவதை தடுப்புச் சட்டம், ஒன்று கூடல்,            ஆர்ப்பாட்டம், கருத்து வெளியீட்டு சுதந்திரம். சிறுபான்மையினருக்கு அவர்களது மொழியில் பேசும், படிக்கும், எழுதும் சுதந்திரம் போன்றவற்றிக்கான சட்டங்களை இயற்றியமை. இதன் விளைவாக குர்தி இன முஸ்லிம்கள் தமது மொழியில் டெலிவிசன் நிலையங்கள் ஆரம்பித்தல், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆரம்பித்தல் போன்ற  சுதந்திரங்களைப் பெற்றனர்.

 குறிப்பிட்ட நான்கு வருட காலப் பிரிவில் (2003 - 2006) இப் பெரும் சாதனைகளை அர்தகோனின் தலைமையில் கட்சி சாதித்தது. விளைவாக இரண்டாம் முறையும் முன்பைவிடவும் அதிகமான வாக்குப் பெரும்பான்மை யுடன் கட்சி ஆட்சிக்கு வந்தது.

 அர்தகோன் இஸ்லாமிய ஆட்சி, கிலாபத், இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப் படுத்தல் என்றெல்லாம் பேசவில்லை. மேற் கூறிய வகையில் மதச் சார்பற்ற கொள்கையை ஏற்று அதற்கு விசுவாசப் பிரமாணம் செய்தே அவர் ஆட்சிக்கு வந்தார். அவர் மட்டுமல்ல அர்பகானின் நிலையும் அதுவாகவே இருந்தது. மார்க்க அடிப்படையில் எந்தக் கட்சியும் துருக்கியில் துவங்கப்பட முடியாது. துவங்கப் படும் எந்தக் கட்சியும் மதச் சார்பற்ற கொள்கைக்கு விசுவாசமானது என்பது உறுதிப் படுத்தப் படவும் வேண்டும். துருக்கியின் இஸ்லாமிய வாதிகளுக்கிடையிலான இந்தப் பொதுவான
ஒற்றுமைகளோடு அர்தகோன் எப் போக்கைக் கடைப் பிடித்தார்?!

 துருக்கியின் சூழல் அங்கு செல்வாக்கு செலுத்தும் சக்திகள் யாவை?
எனப் புரிந்து கொள்ளல் அர்தகோனின் அரசின் போக்கைப் புரிந்து கொள்ள வழி வகுக்கும்.

 துருக்கியின் குடியரசு தோற்றம் பெற்று 80 வருடங்களுக்கும் மேலாகிறது. இந்த நீண்ட காலப்பிரிவில் கீழ்வரும் சக்திகள் துருக்கியில் செல்வாக்கு செலுத்தி வேரூன்றிப் போயுள்ளன:

1) ஊடகங்கள் :
    சஞ்சிகைகள், பத்திரிகைகள், ரேடியோ நிலையங்கள், பல்வேறு டெலிவிசன்கள். இவை மதச்சர்பற்ற சக்திகளின் பிடியிலேயே மிகப் பெரும்பாலுமுள்ளன.

2)  நீதி மன்றங்கள் :
     யாப்பு சார் நீதிமன்றம் வரை பல்வேறு வகையிலும், தரத்திலும் இவை அமைந்துள்ளன. யாப்பு சார் நீதிமன்றமே துருக்கியின் அதி உயர் நீதிமன்றமாகும். தீவிர மதச் சார்பற்ற சக்திகளின் கையில் அடக்கு முறை ஆயுதமாக இது பயன் படுத்தப்பட்டு வருகிறது.

3) இராணுவ நிறுவன அமைப்பு :
     பல இராணுவப் புரட்சிகளை இது மேற் கொண்டது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போல் அத்னான் மென்திரீஸைத் தூக்கிலிட்டது. அர்தகோனின் பல்வேறு முயற்சிகளால் சில பகுதிகளில் தன் பலத்தை அது இழந்திருந்தாலும் இன்னும் மதச் சார்பற்ற சிந்தனைக்கு அச்சுறுத்தல் எனத் தான் காணும் எந்தக் கட்சியையும் வீழ்த்தும் சக்தி படைத்ததாகவே அது உள்ளது.

4) பல்கலைகழகங்கள் :
    அவற்றின் தலைவர்கள், அவற்றின் துறைசார் தலைவர்கள், அத்தோடு ஏறத்தாழ 100 பல்கலைக் கழகங்களை நிர்வகிக்கும் கல்வி உயர் பீடமும். மதச்சர்பற்ற சிந்தனைச் செல்வாக்கின் கீழேயே உள்ளது இவ்வுயர் பீடம் இஸ்லாமியப் போக்குக் கொண்டவர்கள் எனக் காணும்  விரிவுரையாளர்களைக் 'களை பிடுங்கி' விடும்.

5) அனைத்து வகை இஸ்லாமியப் போக்குக்கும் எதிரான சக்தி வாய்ந்த சிவில் நிறுவன ஒழுங்குகள், பல்வேறு இடதுசாரித் தொழிற் சங்கங்கள்.

6) நேட்டோ ஒப்பந்த நாடுகளைப் பின்னணியாகக் கொண்ட Gladyo என அழைக்கப் படும் இரகசிய இராணுவ நிறுவன அமைப்பு ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தால், அல்லது நேட்டோ ஒப்பந்த நாடுகளில் ஒன்றில் கம்யூனிசக் கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கெதிராகப் போராடவே இந்த இரகசிய இராணுவ அமைப்பு உருவாக்கப்பட்டது. படுகொலைகள் செய்தல், குண்டுகளை இரகசியமாக நட்டு வெடிக்கச் செய்தல் போன்ற பல்வேறு இரகசிய யுத்த முறைகளில் இந்த இராணுவப் பிரிவு தேர்ந்த பயிற்சி பெற்றுள்ளது. இந்த இரகசிய அமைப்பு நேட்டோ ஒப்பந்த நாடுகளில் குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் கலைக்கப்பட்டது. எனினும் துருக்கியில் அது கலைக்கப் படவில்லை. அது பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும். குறிப்பிட்ட நபர்களைப் படுகொலை செய்யும். பின்னர் அக்குற்றங்களை இஸ்லாமிய வாதிகளின் மீது போட்டு அவர்களைப் பயங்கர வாதிகள் எனச் சித்தரிக்கும்.

இதுவே துருக்கியின் உள் நாட்டு நிலைமை இங்கு இஸ்லாமியப் போக்குக்கு எதிரான சர்வதேச நிலைமை குறித்து எதுவும் சொல்லவில்லை. இப்படியொரு உள் நாட்டு நிலைமையில் ஓர் இஸ்லாமிய வாதி எவ்வாறு செயற்பட முடியும்? இஸ்லாமியக் கோஷங்களோடு இங்கு செயற்படுவது சாத்தியமாகுமா? இஸ்லாமிய பெயரில் கட்சி யொன்றை ஆரம்பித்து உழைக்க முடியுமா?

இந் நிலையில் இஸ்லாத்திற்கு உழைப்பது என்பது இருவேறு கட்டங்களாக அமைவது பொருத்தமானது எனக் கொள்ள முடியாதா?

இஸ்லாமியக் கோஷம், இஸ்லாமிய சட்டம், இஸ்லாமிய நாடு என்பவற்றை விட்டு நாட்டை பொருளாதார, தொழில்நுட்ப, இராணுவ, அரசியல் ரீதியாகக் கட்டியெழுப்பல் இதில் ஆழ்ந்த பயிற்சியும், நுணுக்கமும், தூய்மையும் வாய்ந்த
இஸ்லாமிய வாதிகள் ஈடுபடுதல். இந்த இலக்கை மட்டும் நோக்காகக் கொண்டு அவர்கள் அரசியற் போராட்டத்தில் ஈடுபடல், இது எதிர்கால இஸ்லாமியப் போக்குக்கான ஆழ்ந்த அடித்தளமொன்றை உருவாக்கித் தரும்.

எ            நேரடி இஸ்லாமிய போராட்டத்திற்கு வரல் : இது முதற் கட்டத்தின் ஆழ்ந்த வெற்றியில் தங்கியுள்ளது. முதற் கட்டத்தின் போது இஸ்லாத்திற்கெதிரான சக்திகள் பலவீனப் பட்டு போக மிகுந்த வாய்ப்புள்ளது. சர்வதேச நிலைகளிலும் குறிப்பிட்ட அந்த முதற்கட்ட 15-20 வருடங்களில் மாற்றம் ஏற்படுவது சாத்தியமாகும்.

இந்தப் போராட்ட உபாயத்தையே தய்யிப் அர்தகோனும் அவரது கட்சியும் கெண்டுள்ளனர் என்பது தெளிவு. அவரது எதிரிகள் அவர் 'நான் எனது பழைய அரசியல் சேர்ட்டைக் களைந்து விட்டேன்' என்று கூறிய போது அதனை நம்பவில்லை. 'சேர்ட் மாறினாலும் துணி மாறவில்லை.' என்றுதான் அவர்கள் சென்னார்கள். அர்தகோனின் இந்த உபாய மார்க்கம் குறித்துப் பல விமர்சனங்கள் இருந்தாலும் உணர்வுபூர்வமாக விடயங்களை அணுகாது கவனமாக ஆழ்ந்து நோக்கும் பலரும் இப்போக்கை சிலாகிக்கவே செய்தனர். அல் இஃவான் அல் முஸ்லிமூன் இயக்கத் தலைவர்களில் ஒருவரான இஸாம் அல் உர்யான் இப்போக்கில் இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஆழ்ந்த பாடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார். மெரோகோவின் கரவீன் பல்கலைக்கழக சரீஆத் துறைப் போரசிரியரும், இஸ்லாமிய சிந்தனையாளருமான கலாநிதி அப்துஸ் ஸலாம் ஹர்ராஸ் 'இக் கட்சி அபாயங்களை எதிர்க் கொள்வதிலும், பிரச்சினைகளுக்குப்பரிகாரம் காண்பதிலும் மிகத் திறமையுடன் நடந்து கொண்டது' என்று கூறுகிறார்.

நேரடி இஸ்லாமிய அரசியற் போராட்டம் தேசிய, சர்வதேச சூழலில் எவ்வளவு பயங்கர விளைவுகளை உருவாக்கி விட்டுள்ளது என்பதைக் கூர்ந்து அவதானிக்கும் போது அர்தகோனின் போராட்ட உபாயம் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. துருக்கியும் ஏனைய அரபு நாடுகளுக்குமிடையிலான வேறுபாடு கோஷம், வசனங்கள் வெளிப்படையான சில நடத்தைகள் இஸ்லாம் சார் சில அரச நிறுவனங்கள் எனபன தவிர இஸ்லாத்திற்கெதிரான மதச் சார்பற்ற தீவிரவாதம் நிறுவன ஒழுங்குகள் அனைத்தும் அப்படியே ஏறத்தாழ துருக்கியை ஒத்தே உள்ளன. அந்த வகையில் அர்தகோனின் இந்த போராட்ட உபாயம் குறித்து அடுத்த முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளும் சிந்திக்கலாம் என சொல்லத் தோன்றுகிறது.

எனினும் அது பற்றி ஆழ்ந்த கருத்துச் சொல்லும் அறிவு எமக்கில்லை நாம் எமது நாட்டைப் பற்றி சிந்திப்போம். ஒரு சிறுபான்மை நாட்டில் இஸ்லாமியக் கோஷம், சட்டம், நாடு என்று நாம் செல்ல முடியாது, என்பது மிகத் தெளிவு. இந்நிலையில் எவ்வளவு நெகிழ்ந்து கொடுக்கலாம் என்ற பகுதியில் அர்தகோனினதும் அவரது கட்சியினதும் செயற்பாடுகள் எமக்கு வழி காட்ட முடியும்.

நாட்டை வளப்படுத்துவதில் இஸ்லாம் காட்டும் வழிகளென்ன என்பதை ஆய்ந்து அவற்றை இஸ்லாமியக் கோஷமின்றி முன்வைப்பதையும் இறுக்கமற்ற இஸ்லாமிய நடத்தையை காட்டக் கூடியவர்களாக நாம் அமைதலும் என்ற இரண்டையும் எம்மால் சாதிக்க முடியுமா?

அப்போது துருக்கியில் காணப்படும் இஸ்லாத்திற் கெதிரான அபாயங்களை கண்டு கவனமாகத் தனது போராட்ட உபாயத்தை அர்தகோன் வகுத்துக் கொண்டது போன்றே எமது நாட்டின் நிலையை ஆய்ந்து ஓரளவு நெகிழ்ந்து கொடுத்து நாமும் வகுத்துக் கொள்ள முடியுமா? என சிந்திக்க வேண்டும். எமது நாட்டில் நாம் அவதானிக்கத் தக்க சில அபாயங்கள் குறிப்புக்களாக மட்டும் கீழே தரப்படுகின்றது. 

*சிங்கள பௌத்த தீவிர வாத சக்திகள். இவர்களது செல்வாக்கு படிப்படியாக வளர்ந்து வருகின்றமை அவதானிக்கத் தக்கது.

*தமிழ்த் தீவிர வாதம் முஸ்லிம்கள் மீது எத்தனையோ அநியாயங்களைக்
 கட்டவிழ்த்து விடும் இவர்கள் இஸ்லாமிய இயக்கங்களை சர்வதேசிய தீவிர சக்திகளோடு இணைத்துப் பொய்ப் பிரச்சார மொன்றைக் கொண்டு செல்ல முயன்று வருகின்றமை தெளிவு.

* கிறிஸ்த்தவ பிரச்சார சக்திகள்.

* மதச் சார்பற்ற சிந்தனைப் போக்கு கொண்ட புத்திஜீவிகள், நிறுவனங்கள்.

* முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் ஊடகங்கள்.

*முஸ்லிம்களின் உள்ளேயே இருக்கும் சரியான இஸ்லாமியப் போக்குக்கு எதிரான பல்வேறு சக்திகள்.

இங்கு நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய முக்கிய அம்சமொன்றுள்ளது. அரசியல் ரீதியான தேசிய மட்டம் சார் அனைத்து சமூகங்களையும் பாதிக்கும் போராட்டம் வேறு. எமது சமூகத்தினுள்ளே இருந்து கொண்டு இஸ்லாமிய ரீதியாக நெறிப் படுத்துவது வேறு. அச் செயற்பாடு அதன் போக்கில் ஆழ்ந்து செல்ல வேண்டும்.

ஆனால் அரசியற் போராட்டம் என்பதுதனியாகத் திட்டமிடப்பட்டு இஸ்லாமிய இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு வெளியே கொண்டு செல்லப் பட வேண்டும். அந் நிலையிற்தான் மேலே விளக்கப்பட்ட போராட்ட உபாயம் குறித்து சிந்திக்க முடியும் எனலாம்.

கட்டுரை எதிர்பார்த்ததை விடவும் மிக விரிந்து விட்டது. இறுதியில் விளக்க வேண்டிய பல அம்சங்களை குறிப்புகளாக மட்டுமே தர வேண்டி ஏற்பட்டது. (MAM Mansoor (Plus*))

4/ Maddrassathul Naleemiyya, Muslim Cleric MAM Mansoor (Plus*) Vs. Pure Islamic Revival of Muslim world


Home            Sr Lanka Think Tank-UK (Main Link)

No comments:

Post a Comment