Pages

Thursday, 21 February 2013

இன விரிசலின் பின்புலத்தில் நிலவும் அறிவீனம்; By; எஸ்.எச்.எம்.பளீல்

1/2


2/2

இலங்கை முஸ்லிம்களுக்கும் சிங்கள சமூகத்துக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டமைக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் குறிப்பிடுகிறார்.

கட ந்த 09.02.2012 வெளியிடப்பட்ட ‘முஸ்லிம் நீதிய’ எனப்படும் அவரது 1046 பக்கங்களைக் கொண்ட நூலின் இறுதிப் பந்தியில் அவர் அவ்விரு காரணங்களையும் பின்வருமாறு விளக்குகிறார்.

‘‘இலங்கை முஸ்லிம்களுக்கும், சிங்கள இனத்தவருக்கும் இடையிலான சகவாழ்வு சீர்குலைந்து போனதற்கு ஏதுவாக அமைந்த காரணிகளாக முஸ்லிம் அரசியல் தனித்துவத்தை கட்டியெழுப்புவதற்காக முஸ்லிம் இனவாத அரசியல் சக்திகள் உருவாகியமை மற்றும் முஸ்லிம் இனம் பற்றியும், இஸ்லாமிய மதம் பற்றியும் ஏனைய மதத்தவர்களுக்கு மத்தியில் போதிய தெளிவின்மை என்பவற்றை குறிப்பிடலாம். இந்த தெளிவின்மையை நிவர்த்தி செய்ய இந்த நூலின் வாயிலாக ஏதாவது பங்களிப்பு கிட்டுமாயின் இந்த ‘முஸ்லிம் நீதிய’ நூலை எழுதுவதற்கு நான் எடுத்த அதி தீவிர முயற்சி பற்றி நான் சந்தோசமடைய முடியும்’’ எனக் கூறுகிறார். (பக்: 1009)

அவர் இந்நூலுக்கு வழங்கியுள்ள முகவுரையில் இஸ்லாம் பற்றிய தப்பான கருத்துக்கள் நிலவுவதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார்:

‘‘இலங்கையிலுள்ள முஸ்லிம் பக்தர்கள் அல்லாத சகலரும் ஏன் நானும் கூட இஸ்லாம் பற்றிய சொற்பமான அறிவையே பெற்றிருப்பதன் காரணமாகவும், இலங்கை முஸ்லிம் பக்தர்கள் அந்த மார்க்கத்தை மூடுண்ட நிலையில் பின்பற்றுவதன் காரணமாகவும், அந்த மதம் பற்றி இலங்கை மக்களுக்கிடையே பிழையான அபிப்பிராயம் தான் நிலவுகிறது என்ற உண்மையை இந்த ஆய்வினூடாக என்னால் புரிய முடிகிறது’’ எனக் கூறுகிறார்.

இலங்கையிலுள்ள முஸ்லிம் வழக்கறிஞர்கள் செய்திருக்க வேண்டிய பணியில் ஈடுட்ட ஒரு பெளத்தரான ஹேரத் அவர்கள் முஸ்லிம் சமூகம் பற்றிய தனது கண்ணோட்டத்தை இவ்வாறுதான் முன்வைக்கிறார். அவரது கருத்து மிகவுமே தெளிவானதும் சரியானதுமாகும். அதாவது தற்போது நாட்டில் நிலவும் முஸ்லிம், சிங்கள இன விரிசல்களுக்கான காரணங்களில் பிரதானமாக இரண்டு காரணங்களை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

1. முஸ்லிம்களது வாழ்வில் இஸ்லாமிய போதனைகள் இல்லாமை.

2.முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய தெளிவு இல்லாதிருப்பது.

இதில் முதலாவது பகுதி பற்றி ஏலவே பலரும் பேசியும் எழுதியும் வருவதனால் இரண்டாவது பகுதி பற்றி சற்று ஆராய வேண்டியிருக்கிறது.
இரு நபர்களுக்கிடையில் இரு குடும்பங்க ளுக்கிடையில் இரு சமூகங்களுகிடையில் நல்லுறவும் சமாதான, சகவாழ்வும் நிலவ வேண்டுமாயின் அங்கு பரஸ்பர புரிந்துணர்வு மிகவுமே அவசியப்படுகிறது. பரஸ்பர புரிந்துணர்வு பணத்தாலோ, அதிகாரத்தாலோ, பலாத்காரத்தாலோ கட்டியெழுப்பப்படுவதில்லை. அதற்கு அறிவுதான் துணை செய்யும். இன நல்லுறவும் அப்படியானதே. ஓர் இனம் மற்றைய இனத்தின் நம்பிக்கைக் கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், பழக்க வழக்கங்கள், பாரம்பரியங்கள், வரலாற்றுத் தடயங்கள் போன்றன பற்றி தெளிவாகத் தெரிந்திருப்பது அவசியமாகும். அந்த அறிவு பரஸ்பர நல்லுறவுக்கும் நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அறிவு சந்தேகங்களை களைய உதவும் என்பதுடன் கருத்துப் பரிமாறலுக்கான வாயில்களைத் திறந்துவிடும்.
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்த உண்மை பொருந்தும். 

அந்தவகையில் சட்டத்தரணி ஹேரத் சமாதான சகவாழ்வு பாதிக்கப்பட்டமைக்கான காரணத்தை மிகச் சரியாக இனம் கண்டுள்ளார்.
முஸ்லிம் சமூகம் பிற சமூகங்கள் பற்றி அறிந்திருப்பது மிகவுமே குறைவு என்பது ஒரு புறமிருக்க இந்நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்தும், இன்னும் தம்மைப் பற்றிய சரியான அறிவை சிங்கள சமூகத்துக்கு வழங்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். அதற்கான பல சான்றுகள் உள்ளன.

1. ஹலால், ஹராம் பற்றி இப்போது தான் நாம் சிங்களத்தில் விளக்க முயற்சிக்கிறோம். உணவில் மட்டுமின்றி குடும்ப வாழ்வு, ஆடை, சம்பாதிப்பு அனைத்திலும் இஸ்லாத்தில் ஹலால், ஹராம் பார்க்கப்படுகிறது என்று தெளிவுபடுத்த அதி தீவிர முயற்சி எடுக்கிறோம்.

2. அல்குர்ஆனுக்கான தரமான மொழிபெயர்ப்புக்கள் சிங்கள மொழியில் ஓரிரு வருடங்களுக்குள் தான் வெளிவந்தவண்ணமுள்ளன.

3. நாம் அறிந்த வகையில் ரியாளுஸ் ஸாலிஹீனுக்கான மொழி பெயர்ப்பை தவிர்ந்து வேறு எந்த ஹதீஸ் நூலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை.

4. இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய தெளிவை நாம் இதுவரை சிங்கள மொழியில் வழங்காததனால், இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் பற்றிய மிக மோசமான தப்பபிப்பிராயங்கள் நிலவுகின்றன. ரிஸானா நபீக்கின் விவகாரத்தைத் தொடர்ந்துதான் ஆங்காங்கே சில தெளிவுகள் வழங்கப்படுகின்றன. இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் பற்றிக் கூட முஸ்லிம் அல்லாத ஒருவர் நூலை எழுதும்வரை நாம் எதுவும் செய்யவில்லை.

5. முஸ்லிம் பெண்களது ஆடை, குர்பான் கொடுக்கும் முறை, பள்ளிவாயலுக்குள் இடம்பெறும் இபாதத்துக்கள், நோன்பிருக்கும் விதம் பற்றியெல்லாம் கிளப்பப்படும் ஐயங்களுக்கு நாம் தெளிவுகளை வழங்காததால் பெரும்சங்கடங்களில் சிக்கி வருகிறோம்.

முஸ்லிம்கள் சூடேற்றப்பட்ட ஒரு கல்லின் மீது ஏறி நின்றுதான் மிருகங்களை கொடூரமாக அறுக்கிறார்கள் என அண்மையில் ஒரு கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கூறினார். முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து அணியும் ஆடையானது சவூதி அரேபிய கலாசாரமென்று சிலரும், அது தாலிபானிய மரபு என்று வேறு சிலரும் எழுதியிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னால் ரமழான் மாத பகல் காலத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் தேநீர் பரிமாறப்பட்ட வேளை முஸ்லிம்கள் அதனை குடிக்காததை அவதானித்த பெளத்த மத குரு ஒருவர், உங்களது நோன்பின்போது நீர் ஆகாரத்தை எடுப்பதும் அனுமதிக்கப்படவில்லையா என்று கேட்டார். அவருக்கு உண்மையாக அது பற்றி தெரிந்திருக்கவில்லை என அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நண்பர் என்னிடம் கூறியது ஞாபகம் வருகிறது.

6. ஓரிரு வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுக்காக வழங்கப்பட்ட கருத்துக் கணிப்பு வினாக்கொத்தில் முஸ்லிம்கள் வணங்கும் இறைவனின் பெயர் யாது என்ற ஒரு வினா இருந்தது. அதற்கு ஒரு சிங்கள பாடசாலையின் அதிபர் ‘‘முஹம்மத்’’ என பதிலளித்திருந்தார்.
நாம் வணங்கும் இறைவனின் பெயரைக்கூட இந்த நாட்டின் பெளத்தர்களில் ஒருவர் அதுவும் ஒரு கல்விமான் தெரியாதிருப்பது பெரும் விந்தையாகும்.

7. ‘‘இணை வைப்பாளர்களை கண்ட இடத்தில் கொல்லுங்கள்’’ என்ற குர்ஆனிய வசனத்தை அரபியில் எழுதி அதன் மொழிபெயர்ப்பையும் இணைத்து குளியாப்பிட்டிய சம்பவத்தின்போது சில ஆர்ப்பாட்டக்காரர்கள் விநியோகத்தார்கள். அந்த வசனம் முஸ்லிம் அல்லாத சகலரையும் கொலை செய்யும்படி நேரடியாவே கூறுவதாக பெளத்தர்களின் சிலர் கூறுகிறார்கள். இது மக்கத்து காபிர்கள் பற்றி வந்த வசனமேயன்றி உலகிலுள்ள எல்லா பிற சமயத்தவர்களையும் பற்றிக் கூற வந்ததல்ல என்று அது இறங்கிய பின்னணியை பார்த்தால்தான் புரியலாம்.

மேற்சொன்ன சான்றுகளை வைத்து நோக்கும்போது இந்த நாட்டில் சுமார் 90% ஆன பிற சமயத்தவருக்கு எமது மார்க்கம் பற்றிய போதிய தெளிவு கிட்டவில்லை என்று கூற முடியும். இதற்கு நாம் மூடுண்ட ஒரு வாழ்வை மேற்கொள்வதும் ஒரு காரணமாகும். பிற சமயத்தவரோடு நாம் பழகுவது குறைவு என்பதுடன் அவ்வாறு பழகினாலும் மார்க்கத்தின் போதனைகளைப் பற்றி கூறுவதற்கான சந்தர்ப்பங்கள் கிட்டினாலும் அதனைச் செய்யாதிருக்கிறோம். இஸ்லாம் பற்றி அவர்கள் சிலபோது சில கேள்விகளை எழுப்பும்போது உரிய பதில்களைக் கொடுப்பதற்கு முதலில் அது விடயமான தெளிவு எமக்கிருப்பதில்லை. அந்தத் தெளிவு இருந்தாலும் மொழியும் ஒரு தடையாக இருக்கிறது. சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியரில் பெரும்பாலானோருக்கு இஸ்லாம் பற்றிய தெளிவு போதாமலிருப்பதால் அவர்களுக்கு மொழியறிவு இருந்தும், விடயதானம் சம்பந்தமான அறிவு பற்றாக்குறையாக இருப்பதால் இந்த நிலை உருவாகிறது.

சிங்கள மொழியில் வெளிவந்துள்ள இஸ்லாமிய நூல்கள் இலங்கை சிங்கள சமூகத்தின் தேவையோடு ஒப்பிடுகையில் 5% ஐயும் எட்டவில்லை எனலாம். சிங்கள மொழியிலான வெப் தளங்கள் விரல் விட்டு எண்ணத் தக்கவை மாத்திரமே. அவற்றை ஆய்வு செய்து பார்க்கையில் இஸ்லாத்தை துறை போகக் கற்ற அதேவேளை, சிங்கள மொழியிலும் தேர்ச்சிமிக்கவர்களது ஆக்கங்கள் அங்கு மிகக் குறைவாக இருப்பதனால் சிலபோது இஸ்லாமிய மூலாதாரங்களிலிருந்து மேற்கோள்காட்டி நவீன தேவைகளோடு அவற்றை ஒப்பு நோக்கி அவை எழுதப்படாத குறையை அவதானிக்க முடிகிறது.

‘பிரபோதய’ எனும் சஞ்சிகை காத்திரமான ஒரு பங்களிப்பை செய்த போதிலும் சமூகத் தேவைக்கு முன்னால் அது எவ்வகையிலும் போதாது என்று கூறலாம்.
இந்நாட்டில் 20 இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்தும் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிங்களத்தில் கலந்துரையாடல்கள், விவாதங்களைச் செய்வதற்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந்து ஆட்களைத் தேடுவது மிகவும் கடினமான காரியமாகிவிட்டது. சிங்கள மொழியில் நல்ல தேர்ச்சி இருக்கும். ஆனால் இஸ்லாமிய ஞானங்களில் ஆழமிருக்காது. அல்லது இஸ்லாமிய அறிவு ஞானமிருக்கும். சிங்கள மொழிப் பாண்டித்தியமிருக்காது. அல்லது இரண்டுமிருக்கும். சமயோசிதமோ வாதத்திறனோ, சமகாலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக தீட்டப்படும் சதிகள் பற்றிய தெளிவோ இருக்கமாட்டாது. அதாவது ஒன்றிருந்தால் இன்னொன்றில்லை என்ற நிலை தோன்றியிருக்கும்.

எமது கையில் உள்ள சத்தியமான இஸ்லாத்தை பிறருக்கு சேர்ப்பிப்பதற்கான சரியான உத்திகள் கையாளப்பட வேண்டும். இந்த நிலையைப் பற்றி கருத்து வெளியிடும் நவீன கால அறிஞர் அஷ்ஷெய்க் அல்- கஸ்ஸாலி, ''''இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதன் பக்கமே நியாயமிருக்கிறது. ஆனால் அதற்கு சார்பாக வாதிடும் வழக்கறிஞர்கள்தான் கையாலாகதவர்களாக இருக்கிறார்கள்’’ என்கிறார். அதாவது சத்தியத்தின் காவலாளிகளாக இருப்போர் பலவீனர்களாக இருப்பதனால் சத்தியமும் சேர்ந்து தோற்றுப் போகிறது என்பது அவரது அபிப்பிராயமாகும்.

இலங்கையின் குடித்தொகையில் சுமார் 75 சதவிகிதமானவர்களான சிங்களத்தை தாய்மொழியாகக் கொண்ட பெளத்த, கிறிஸ்தவ சமயத்தவர்களுக்கு நாம் எமது மதத்தை எத்தி வைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். குர்ஆன் ‘‘மனிதர்களுக்கான வழிகாட்டி’’. முஹம்மது (ஸல்) அவர்கள் உலகத்தாருக்கான அருட்கொடை என்றுதான் குர்ஆன் கூறுகிறது. அந்த வகையில் ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என்ற முதுமொழிக்கு அமைய மாத்திரமின்றி தஃவாப் பணி ஒவ்வொரு முஸ்லிமின் மீதான பர்ளு கிபாயாவாக இருப்பதால் குர்ஆனை சுன்னாவை அவை எமக்கு மட்டும் தான் என்று சொந்தம் கொண்டாடும் உரிமை எந்த முஸ்லிமுக்கும் இல்லை. இஸ்லாத்தை மறைப்பது பயங்கர குற்றமாகும். அவ்வாறு மறைப்பவர்களை அல்லாஹ் தனது அருளைவிட்டும் துரத்திவிடுவதாக குறிப்பிடும் வசனம் சூரா பகராவில் இடம்பெற்றுள்ளது. (2:159)

இஸ்லாமிய தஃவாப் பணியைச் செய்வது பற்றித்தான் நாம் சிந்திக்காது விட் டாலும் இஸ் லாத் தையும் முஸ் லிம் க ளையும் பற் றிய சந் தே கங் களைக் களை வ தற் கா வது முயற்சி எடுப் பது காலத்தின் தேவையும் மார்க்கக் கட மை யு மாகும். தப் ப பிப் பி ரா யங்கள் நிலவும் கால மெல்லாம் சந் தே கங்கள் வலு வ டையும். சந் தே கங்கள் நிலவ ஆரம் பித்தால் பரஸ் பர உறவு பாதிக் கப் படும்; உதவி, ஒத் தா சைகள் இடம் பெ றாது. சமூக வாழ்வில் விரி சல்கள் ஏற் பட்டு ஈற்றில் அது வன் மு றை க ளுக்கு இட்டுச் செல்லும். இலங் கையில் நாம் அந்தக் கட் டத் துக்கு வந் தி ருக் கிறோம் எனலாம்.

பெரும் பான்மை பெளத் தர்கள் முஸ் லிம் களைப் பற்றி மனதில் கொண் டி ருக்கும் கருத் துக்கள் பார தூ ர மா ன வை யாகும். இஸ் லாத்தில் பெண் க ளுக்கு உரிமை கிடை யாது. இஸ்லாம் வாளால் பரப் பப் பட் டது; இஸ் லா மிய சட் டங்கள் காட் டு மி ராண் டித் த ன மா னவை; இஸ் லாத்தில் சக வாழ்வு, மத நல் லி ணக்கம் என்ற பேச் சுக்கே இட மில்லை. ஏற் க னவே பெளத்த நாடு க ளாக இருந்த பல நாடு களின் மக்கள் படு மோ ச மாகக் கொல் லப் பட்ட பின் னரே அங்கு இஸ்லாம் நுழைந் தது போன்ற கருத் துக் களை சர் வ தேச ரீதி யாக இஸ் லா மிய எதி ரிகள் திட் ட மிட்டுப் பரப்பி வரு கி றார்கள். இந்த சந் தே கங்கள் நமது நாட் டுக் குள்ளும் நுழைந் து விட் டன. இந்த பின் ன ணி யி லி ருந் துதான் பெளத் தர்கள் முஸ் லிம் களை பார்க்க ஆரம் பித் தி ருக் கி றார்கள்.

இது அவர் க ளது தவ றாகும் என்று நாம் கூறி னாலும் போதிய தெளிவை நாம் இது வரை வழங் கா தி ருப் பது நிலை மையை மோச ம டையச் செய் தி ருக் கி றது. பாமியான் புத்தர் சிலை உடைப்பு, பங் க ளா தேஷில் சிலைகள் உடைப்பு, ரிஸானா நபீக் மரண தண் டனை, தலி பான் க ளதும் அல்- கொய் தாக் க ளதும் நட வ டிக் கைகள், Innocence of Muslim, விஸ் வ ரூபம் போன்ற திரைப் ப டங்கள், சாத் தா னிய வச னங்கள், லஜ்ஜா போன்ற நூல்கள் , டென்மார்க் காட் டூன்கள் என் பன வெளி வந் தன. பின்னால் இந்த நாட்டில் இஸ் லாத் திற் கெ தி ரான வெறித் த ன மான சூறா வளிச் சிந் த னைகள் பரப் பப் பட்டு வரு கின் றன.

இஸ்லாம் அறி வுக்கு முக் கி யத் து வ ம ளிக்கும் மார்க்கம் என்ற வகை யிலும் கலந் து ரை யா ட லுக்கு அது தூண் டுதல் வழங் கி யி ருக் கி றது என்ற வகை யிலும் தூய மார்க் கத்தை காப் பாற்றும் பொறுப்பை நாம் சுமந் தி ருக் கிறோம்.

சர்வ உல கங் க ளது இரட் சகன் அல் லாஹ் வி ட மி ருந்து வந்த இஸ் லாத்தில் அணு வ ள வேனும் பிழைகள் இல்லை என்றும் அதனை அமுல் நடத்தும் மக்கள் விடும் தவறு, இஸ் லாத்தின் தவறால் பார்க் கப் ப டா லா காது என்றும் நாம் விரி வாகத் தெளி வு ப டுத்த வேண்டும். சகல தொடர்பு சாத னங் க ளையும் நாம் பயன் ப டுத்த வேண்டும். ''''அவர் க ளோடு நீங்கள் மிக வுமே அழ கிய வழி மு றையைப் பயன் ப டுத்தி கருத்துப் பரி மாறல் செய் யுங்கள்’’ என்று உரை யா டலின் (Dialogue) அவ சி யத்தை அல்லாஹ் வலி யு றுத் தினான். இஸ் லாத் திற்கும் முஸ் லிம் க ளுக்கும் எதி ராக குறை ஷி யர்கள் வசைக் கவி பா டிய போது இஸ் லாத்தின் தரப்பை பலப் டு பத்த ஹஸ்ஸான் பின் தாபித் போன்ற கவி ஞர் களை நபி (ஸல்) அவர்கள் நிய மித் தார்கள். யூதர் க ளுடன் கடிதத் தொடர்பு வைக் கவும் அவர் க ளி ட மி ருந்து வரும் கடி தங் களை வாசிக் கவும் வச தி யாக யூதர் க ளது ஸுரி யானி மொழியைக் கற் கும் படி ஸைத் பின் தாபித் (ரழி) அவர் களை நபி (ஸல்) அவர்கள் பணிக்க அவர் இரு வாரங் களில் அம் மொ ழியைக் கற் ற தாக வர லாறு கூறு கி றது. வலீத் இப்னு முகாரா முன் வைத்த வாதங் களை முறி ய டிக்க அல்லாஹ் சூறதுல் கலமில் சிறந்த அணு கு மு றை களைக் கையா ளு கிறான்.

மதக் கலந் து ரை யா டல் க ளது (Interfaith Dialogue) யுகத்தில் நாம் வாழு கிறோம். பிற ருக்கு கூறு வ தற்கு மட் டு மின்றி, பிற ரி ட மி ருந்து செவி ம டுக் கவும் நாம் பழக வேண்டும்.

ஆயு தத்தால் செய் யப் படும் யுத் தத்தை விட பேனாவால் சிந் த னையால் செய் யப் படும் யுத்தம் தாக் க மிக் கதும் நீடித்த விளை வு களை தர வல் ல து மாகும். எனவே சிங் கள மொழி யி லான நூல்கள், மத் ர ஸாக்கள், வெப் த ளங்கள் சஞ் சி கைகள், ஆய் வுகள், உபந் நி யா சங் க ளுக் கான தேவை உள் ளது. பெளத்த முஸ்லிம் சக வாழ் வுக் கான அடித் த ளங் களில் ஒன் றா கவும் இது அமையும்.
சிங் கள மொழியில் தேர்ச் சி மிக்க தாஇக் களை உரு வாக் கவும் தர மான ஆய்வு ரீதி யான நூல் களை வெளி யி டவும் மனம் கவர் இஸ் லா மிய உபந் நி யா சங் களை சிங் க ளத்தில் நிகழ்த்தும் பேச் சா ளர் களை உரு வாக் கவும் சகல ஊடக சாத னங் களை பயன் ப டுத்தி இஸ் லாத்தை தெளி வு ப டுத் தவும் முஸ் லிம் க ளது பணம் செல வி டப் ப ட வேண் டிய தேவை எழுந் தி ருக் கி றது.

சுன் னத் தான காரி யங் க ளுக்கு அனு ம திக் கப் பட்ட அள வை விட அதி க மாக செல வ ளிப் பதும் ஆடம் ப ர மான வைப வங் க ளுக் காக செலவளிப்பதும் இடைநிறுத்தப்பட்டு நாம் மேற்சொன்ன அறிவு மற்றும் தஃவா பணிகளில் மறுமையின் கூலியை எதிர்பார்த்து பயன்மிக்க அறிவுக்காவும் ஸதகதுல் ஜாரியாவுக்காகவும் எமது சொத்து செல்வங்கள் செலவளிக்கப்பட வேண்டும்.
அறிவை அறிவால் வெல்வது;கருத்தைக் கருத்தால் எதிர்ப்பது; ஆதாரங்களை ஆதாரங்களால் முறியடிப்பது என்ற நிலைப்பாடுகளுக்கு இலங்கை முஸ்லிம் சமூகம் வரும்போது மாத்திரமே முஸ்லிம் முஸ்லிமல்லாதவர்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை கட்டியெழுப்ப முடியும். (vidivelli)


Home    ||  Sri Lanka Think Tank-UK (Main Link) ||  Empowered by; FB Page  (Like us) ||  FB Group  (Request)   || FB Wall (Add)    ||

Friday, 1 February 2013

நவீன இஸ்லாமிய சிந்தனை

நவீன இஸ்லாமிய சிந்தனை என்றால் என்ன. இதனை நாம் எப்படி நோக்க வேண்டும். இது சம்பந்தமாக நவீன கால அறிஞர்களின் கருத்துக்கள் என்ன.
என விளக்கமளிக்கிறார் ஷெய்க் உஸ்தாத் மன்ஸூர் அவர்கள்.

1/22/2


Home

கிலாபத் சிந்தனை ஒரு ஆய்வு by MAM மன்ஸூர்

கிலாபத் என்பது ஒரு கடமையான ஒரு விடயமா? அதன் முக்கியத்துவம் என்ன? அதற்கு இஸ்லாம் முன்வைக்கும் ஆதாரங்கள் என்ன.
கிலாபத் சம்பந்தமாக குர்ஆன் ஹதீஸின் நிலைப்பாடு என்ன.
விரிவுரை நிகழ்த்துகிறார் பிரபல தப்ஸீர் விரிவுரையாளர் மிஷ்காத் நிறுவனத்தின் பணிப்பாளர் MAM மன்ஸூர் அவர்கள்.

1/2


2/2Home

Tuesday, 22 January 2013

Has Shari’a to be blamed for Rizana’s sad ending


Name Rizana Nafeek that belongs to a poor girl from a not so rich country has become a household name the world over thesedays. But she is not among the living to enjoy this global phenomenon in which she is the centre of attraction. Sadly, it is her very departure from this world that has made her so famous. Her name is murmured, whispered and in most cases cried out loud but invariably associated with justice of this world. Was justice established for Rizana or was she brutally denied justice, especially in the land that is home to the two most sacred houses of Islam?

Injustice is strife in these modern times all over the world. In Iraq, Afghanistan, Palestine, Kashmir and many other Muslim countries and territories hundreds of thousands innocent Rizanas of this world -in many cases much younger than our Rizana- are atomized, napalmed and  blown to pieces with cluster bombs, smart bombs and  various other modern tools of genocide  by the Christians and the Jews. 

Then why an isolated case such as of Rizana should be given this much publicity? The Shari’a is related in this matter; that is why. 

Justice was not impartial or same when Christians and Jews were the servers of Justice. Russia was not impartial when it served justice to the Bosnian Muslims. America never was and never is impartial when it serves justice for Muslims wherever they live in this planet. India too was not and is not fair in the case of its own Muslim subjects in Kashmir. The list of wronged Muslims goes on and on. 

But, no one ever got worked up for all those injustices that took place and are taking place at this very moment. However, when Islam, Muslims and Shari’a become involved, it suddenly becomes news item of global significance.

When we observe the opinions presented and criticisms made with regard to the issue of Rizana, we could see that the debaters are divided to two camps. However, it could be also seen that the perspectives of both camps ultimately approve the course of Shari’a’s action.
 
View point 1:
 
One is that the case of Rizana or her guilt to be precise was not established without a shred of doubt. Neither a postmortem nor accepted scientific methods were carried out to ascertain the true cause of the death. And there were no eye witnesses of the incident. The child could have died of either suffocation or due to any other natural cause for which Rizana could not be blamed let alone executed. Moreover, the court hearing too was not with due process according to the news that is being unearthed now. The verdict too has been given in a mighty hurry. (The long delay for the actual punishment had been the waiting period for Rizana to attain womanhood to become ‘eligible’ to be beheaded) Most of all Rizana did not have a motive to kill the infant and she was barely in her first weeks of her employ in the particular household. And Rizana was not an educated girl and she was in her teens at the time and Arabic had been an alien tongue to her and probably a terror stricken Rizana did not understand what was being said back and forth in the court house by prosecution and the defending lawyers. (Or was she permitted a fair legal council in the first place?)  And Rizana has been found guilty of murder? in such a hazy and unclear situation of jurisprudence. 

In this manner media analyzed the incident from various view points.  However, all these view points need to be scrutinized and ascertained who is to be blamed. Is the Shari’a Law flawed? Or should the persons who did not properly administer it be blamed?  

Shari’a cannot be flawed as it is a divine decree which constantly substantiates to the world that every facet of it is impeccably perfect and is the best set of jurisprudence mankind has ever seen. However, it could be seen that those who criticize Shari’a have double standards. This twin face could be seen against anything and everything Islamic, especially among the Media and in the Western media to be more precise.    

View point 2:
 
This view point was not analyzed separately by the media but this is mingled with earlier ones. But apparently they do not know what they are analyzing. Therefore, I think it is better to analyze this in order to make those who analyzed this properly understand what they were talking about. They should have proceeded to do so before airing their views, but obviously they did not have the composure as they were in a mighty hurry to join the carnival before hurriedly wraped up as with the case of any hot news. In some cases, they hurried because they had been terrified as if they have seen a monster themselves.

Let us assume that proper and scientific methods have been employed in Rizana’s case and that her guilt has been established beyond a shred of doubt. But one faction is raising hell over the way she was punished. 

Is not execution one of the most approved and most administered methods of reprisal for murder in many jurisprudence?   

First of all we must come to terms with the fact that punishments are never meant to be comforting. It should be horrendous enough for others who witness to shy away from crimes. This is why Islamic reprimands are given in public thus it has become a matter for criticism when the Western world does the same thing in closed enclaves.  

Killing the murderer who killed their loved ones could be the best justice the victim’s family could ask for. The Author of Shari’a, the Creator of Mankind. Almighty Allah gives prominence only to the sentiments of those who are actually affected and those who have lost their loved ones. And the punishment is to be carried out in public as the Almighty wishes that an execution of a human being should not be a thing carried out in a cell only to appease the victim’s people when it could be utilized to warn the others. Allah is least concerned about those who scream foul at the ways of Shari’a reprimand but gives importance only to the feeling of those who yearn for justice. In the case of Shari’a rulings the persons who are really related to the incident would hail it as the most perfect justice under the sun while others -who especially lunging to fruitlessly attack Islam- would cry otherwise. 

In the meantime, those who criticize Shari’a assertion of a life-for a-life overlook an important matter in their hurry. It is the family of the victim that has the final say in the punishment while resources of the jurisprudence of the state would only help to establish the guilt. Moreover, Allah did not withdraw after thrusting the sword of punishment in the hands of the affected but proceeds to explicate the virtues of forgiving while promising untold bounties from His side if the affected chooses to forgive the wrongdoer. He gives another mortal option of demanding blood money in stead. Execution is the last remaining choice for the victim’s family if they find it extremely difficult to appease themselves, unless they see the same fate befall on the killer. 

Can any other worldly jurisprudence claim to have so many options in the case of a capital crime? Can this be called a cruel and barbaric system of laws? Critics of Shaari’a conveniently choose to black out all these brighter sides of the Ultimate Jurisprudence of Allah. And all these options were presented to the victim’s family in the case of Rizana as well. But the mother of the deceased infant vivid with the memories of her smiling baby could not bring herself to forgive Rizana even after so many years. Of course, every one living in the world would definitely believe that the mother should have forgiven Rizana as urged by the Almighty. However, the woman in whose hand the final decision has rested chose to differ due to her burning grief. Islam, though urges forgiving in many ways, does not snatch away the right to punish.   

I hope my essay would have shed some light on how this matter should be justly viewed from the perspective of Shari’a, and from the human sentiments; especially that of the affected.
However, I too silently grieve for Rizana as a human being. At the same time, I console myself when I think of the unimaginable rewards Almighty would shower upon her as her death has been an out come of the prevalent His law in this world and because her ordeal has triggered untold number of debates about the credibility of His law which finally would emerge as the best jurisprudence world have ever seen. 

Also, I am certain that many who criticized the Rizana matter in this world would wish in the Day of Judgment that they should have been a Rizana, when they witness the rewards Allah would give her in her eternal life. 

Oh Allah! Forgive Rizana and bestow her with the noblest rewards from your infinite treasure troves! (By; Hajjul Akbar) 

ரிஸானா நனைந்தாள் உலகம் அழுதது. ஏன்?

'ரிஸானா நபீக்உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயர்... நீதி சரிந்ததா?﹐ நிமிர்ந்ததாஎன்று நீதியே இல்லாத உலகம் பேசிய பேசுபொருளின் கரு... இந்தச் சிறிய வயதில் முழு உலகையும் தன் பக்கம் ஈர்த்த சாதனையின் சொந்தம்.
 
ஏன் ரிஸானா இவ்வளவு பிரபல்யமானாள்இலங்கையின் ஒரு மூலையில் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த அந்த சின்னவளை உலகம் ஏன் இவ்வளவு தூரம் தலைநிமிர்ந்து நோக்கியது. அந்த அதிசயம் நிகழ்ந்ததற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. ஆம்﹐ ரிஸானாவின் விடயத்தில் ஷரீஆ நீதி சம்பந்தப்பட்டிருக்கிறது﹐ அவ்வளவுதான்.
 
இவளைப் போன்ற எத்தனையோ ரிஸானாக்களை அமெரிக்க﹐ இஸ்ரேல் நீதிகள் ஆப்கானிலும் ஈராக்கிலும் பலஸ்தீனிலும் கொன்று குவித்திருக்கின்றன. செச்னியா விடயத்தில் ரஷ்யாவின் நீதிகாஷ்மீர் விடயத்தில் இந்தியாவின் நீதி﹐ முஸ்லிம்கள் விடயத்தில் மியன்மாரின் நீதி﹐ சிரியா விடயத்தில் ஈரானின் நீதி என்பன யாவும் அமெரிக்க﹐ இஸ்ரேல் நீதிகளை விடக் குறைந்ததல்ல.
 
உலகம் இந்த நீதிகளை அலட்டிக் கொள்ளவில்லை. பேசுபொருளாக அவற்றை எடுத்துக் கொள்ளவுமில்லை. எனினும்﹐ ஷரீஆ நீதியை பேசுபொருளாக மாற்றி அதற்கு எல்லையில்லாத முக்கியத்துவத்தை உலகம் கொடுத்திருக்கிறது கொடுக்கத்தான் வேண்டும்.
 
ஷரீஆ நீதியை உலகின் பேசுபொருளாக ஆக்கிய ரிஸானாவுக்கு எமது பிரார்த்தனைகள். ரிஸானாவின் உயிர் மீண்டும் உலகத்துக்குத் திரும்பி வராது. ஆனால்﹐ பல ஆயிரம் ரிஸானாக்களுக்கு உயிர் கொடுக்க ஷரீஆ நீதி உலகை நோக்கி மீண்டு வரும். அப்போது உயிர் கொடுத்த ரிஸானா வாழ்ந்துக் கொண்டிருப்பாள்.
 
ரிஸானாவின் உயிருக்காக நல்லெண்ணத்தோடு அழுத முஸ்லிம்﹐ முஸ்லிமல்லாத அனைத்து உள்ளங்களையும் வாழ்த்திவிட்டு ரிஸானா நபீக்கின் விடயத்துக்கு வருகிறேன். ரிஸானாவின் மரண தண்டனை குறித்து இதுவரை ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தையும் தொகுத்து வகுத்தால் ரிஸானா நபீக் விடயத்தில் இரண்டு விதமான அலசல்கள் நடைபெற்றுள்ளன. அந்த அலசல்கள் இரண்டில் எதை உலகம் சரி கண்டாலும் ஷரீஆ நீதியை எவரும் குறை கூற முடியாது. ஷரீஆ நீதி அந்த இரண்டு அலசல்களின்போதும் முன்வைக்கப்பட்ட கீழ்த்தரமான விமர்சனங்கள்கண்டனங்கள் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது.
 
அலசல் 01: இந்த அலசலில் நீதி﹐ விசாரணை குறித்து பல வகையான விமர்சனங்கள் ஊடகங்களில் உலா வருகின்றன. ரிஸானா குற்றவாளியல்ல. ஒரு சதிமோசக் கொலையை அவள் செய்யவில்லை. செய்ய வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. ரிஸானாவின் கையிலிருந்த குழந்தை இறந்ததற்கான காரணங்கள் விஞ்ஞானபூர்வமாகக் கண்டறியப்படவில்லை. அது இயற்கை மரணமாகவும் இருக்கலாம். அல்லது பால்புரையேறி மூச்சுத் திணறி குழந்தை இறந்திருக்கலாம். குழந்தை இப்படித்தான் இறந்தது என்பதைக் கண்ட சாட்சிகளும் இல்லை.
 
இந்த நிலையில் ரிஸானா குற்றவாளி என்பதை உறுதி செய்வதற்கான விசாரணை முழுமையாக நடைபெறவில்லை. தீர்ப்பு அவசரமாக வழங்கப்பட்டிருக்கிறது. இது நீதியல்ல. தனது பக்க நியாயங்களை முன்வைத்து வாதிடுமளவு அறிவுத் திறமைகள் இல்லாத ஒரு சின்னப் பெண் மொழி தெரியாத புதியதொரு சூழலில் நீதி விசாரணையொன்றுக்கு முகம் கொடுக்கும்போது அச்சத்துக்குட்படுவது இயல்பு. அவளது நியாயங்களை முன்வைத்து வாதிடுவதற்கு சட்டத்தின் உதவியை அவள் பெற்றாளாஅல்லது பெற வேண்டும் என்ற அறிவு அவளுக்கு இருக்கவில்லையா?
 
இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் அவள் குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளாள். இது நீதியின் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டது. அதனால்தான் ரிஸானா நபீக் வீணாக உயிரிழக்க வேண்டியேற்பட்டுள்ளது.
 
இவ்வாறு ஊடகங்கள் ரிஸானா நபீக்கிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை பல்வேறு கோணங்களில் விமர்சிக்கின்றன.
 
இந்த விமர்சனங்கள் உண்மையானால் (இந்த விமர்சனங்களின் உண்மைத் தன்மைகள் ஆராயப்பட வேண்டும்) குற்றம் யாரைச் சாரும்ஷரீஆ நீதியையாஅல்லது நீதி விசாரணை செய்து ரிஸானாவைக் குற்றவாளியெனத் தீர்ப்பு வழங்கியவர்களையாஇந்த விமர்சனங்கள் உண்மையானால் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரிஸானாவை விசாரணை செய்து குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியவர்களுக்கே உரியன.
 
ஷரீஆ நீதி எந்த வகையிலும் ரிஸானா விடயத்தில் அநீதியிழைத்ததாகக் கூற முடியாது. இலங்கையில் பிரதம நீதியரசரை விசாரித்த முறை பிழையானது என ஊடகங்கள் விமர்சிக்கின்றன. ஏன் ஊடகங்கள் நீதி பிழையானது என விமர்சிக்காமல் விசாரித்த முறை பிழையானது என விமர்சிக்க வேண்டும்இலங்கையின் நீதி விடயத்தில் ஊடகங்களின் முகம் வேறு ஷரீஆ நீதி விடயத்தில் ஊடகங்களுக்கு மற்றொரு முகமா?
 
நீதியை விமர்சிப்பவர்களிடமே நீதியில்லாததை இங்கு பார்க்கிறோம். இங்கு மட்டுமல்ல﹐ உலகம் முழுவதிலும் இன்று இப்படியான இரட்டை வேடம்தான் தாண்டவம் ஆடுகின்றது. அமெரிக்காஇஸ்ரேல் போன்ற வல்லரசுகளின் வேடத்தை எல்லோரும் தரித்திருக்கிறார்கள். தங்களது சுயத்தை இழந்து வேடம் பூண்டவர்களால் நீதியை எப்படி நிலை நாட்ட முடியும்.
 
அலசல் 02: இது ஊடகங்களில் தனியாக அலசப்பட்ட விடயமல்ல. முன்னையதோடு இரண்டறக் கலந்து வந்த அலசல்தான் இது. எனினும்﹐ அலசியவர்களுக்கு விளங்காத ஒன்றை விளக்குவதற்காக அவர்களது  அலசல்களை நான் இரண்டாகப் பிரித்துக் காட்டுகிறேன். அலச முன்பு இதனை அவர்கள் பிரித்துப்பார்த்திருக்க வேண்டும். எனினும்﹐ பிரித்துப் பார்க்குமளவு நிதானம் அவர்களிடமில்லை. ஷரீஆ என்றவுடனேயே நிதானத்தை இழந்து விடுகிறார்கள் ஒரு பூதத்தைக் கண்டது போல்.
 
இரண்டாவது அலசல்: விசாரணை சட்டபூர்வமாக நடந்தேறியுள்ளது. கொலை என்பதற்கான ஆதாரங்கள் விஞ்ஞான பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகங்களுக்கிடமின்றி ரிஸானா கொலையாளிதான் என்பது நிரூபணமாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிரூபணம் உறுதியானதன் பின்பு தண்டனை வழங்கப்படுகிறது. தண்டனை ஷரீஆ நீதியின்படிதானே வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஷரீஆ  நீதி காட்டுமிராண்டித்தனமானதே என கூக்குரலிட்டன ஊடகங்கள். இதுதான் ஊடகங்களில் அலசலுக்குட்பட்ட இரண்டாவது விடயம்.
 
உண்மையில் ஷரீஆ நீதி கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு கொலையாளிக்கான தீர்ப்பு கொலை என்றுதான் வரையறை செய்கிறது. இது காட்டுமிராண்டித்தனமா?
 
இது காட்டுமிராண்டித்தனம் என உலகமே வாதிட்டாலும்﹐ ஒருவர் மாத்திரம் இதனைக் காட்டுமிராண்டித்தனம் எனக் கூற ஒருபோதும் முனைய மாட்டார். அவர்தான் கொலை செய்யப்பட்டவரின் சொந்தங்கள்﹐ தாய்﹐ தந்தையர்கள் அல்லது பிள்ளைகள்﹐ சகோதரர்கள் என்போர். இவர்களது உணர்வைத்தான் ஷரீஆ நீதியின் கர்த்தாவாகிய அல்லாஹ் கருத்தில் எடுத்திருக்கிறான். கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தவர்கள்தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்.
 
நீதி அவர்களுக்குத்தான் வேண்டும். காட்டுமிராண்டித்தனம் எனக் கூக்குரலிடுபவர்களுக்கு இங்கு நீதி தேவையில்லை. அவர்கள் கொக்கரித்துக் கொண்டிருக்கட்டும். நீதி தேவையானவர்களுக்கு நான் நீதி வழங்குகிறேன் என மனிதனைப் படைத்தவன் எடுத்த முடிவுதான் ஷரீஆ நீதி.
 
உலகில் நடைபெறுகின்ற எத்தனையோ குற்றச் செயல்களுக்கெதிராக வீதியிலிரங்கி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் அந்தக் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக 'மரண தண்டனையைஅறிமுகம் செய்அமுல்படுத்து என்று கோஷமிடுகின்றனர். அங்கெல்லாம் பாதிக்கப்படட்டவர்களுக்காகக் குரல் கொடுத்து மரண தண்டனைக்கு வந்தனம் கூறுபவர்கள் ஷரீஆ நீதி என்றவுடனேயே மரண தண்டனையைக் காட்டுமிராண்டித்தனம் என எப்படி வர்ணிக்கிறார்கள்.
 
அவர்கள் கோஷமிடும் அல்லது வாழ்த்துக் கூறும் மரண தண்டனை ஈவிரக்கமற்றது. ஷரீஆ நீதி விதிக்கும் மரண தண்டனை கருணையுடன் கலந்தது. கொலைக்கு கொலை என்று தீர்ப்பு வழங்கும்'ஷரீஆ நீதிமற்றுமொன்றையும் வலியுறுத்துகிறது என்பதை நிதானமிழந்த விமர்சகர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறி விடுகிறார்கள். அல்லது வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்.
 
கொலை செய்யப்பட்டவரின் குடும்பம்தான் ஷரீஆ நீதியின்படி தனது இறுதி முடிவை வழங்க வேண்டும். ஷரீஆ நீதிமன்றம் விசாரணைகளின் பின் நடைபெற்றுள்ளது கொலைதான் என்பதை ஆதாரங்களோடு உறுதி செய்த பின்னர் குடும்பமே தீர்ப்பு வழங்க வேண்டும். ஷரீஆ நீதியின் மூலகர்த்தாவான அல்லாஹ் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கையில் நீதி வழங்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இருந்துவிடவில்லை. மாறாக﹐ அந்தக் குடும்பத்தினரின் உணர்ச்சிகளைத் தடவிக் கொடுத்து நீங்கள் விரும்பினால் உங்களுக்கு உயிர் நட்டத்தை விளைவித்தது போல் கொலையாளிக்கும் உயிர் நட்டத்தை விளைவிக்கலாம். அல்லது கொலையாளியிடமிருந்து நீங்கள் விரும்பும் ஒரு நட்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது பெருமனதோடு மன்னித்தே விடலாம். என பல தரப்பட்ட தெரிவுகளை அவர்கள் முன் வைக்கிறான் ஷரீஆவின் மூலகர்த்தா.
 
அது மட்டுமல்ல மன்னிப்பதை ஊக்குவித்து அதற்கு நன்மை தருவதாகவும் கூறுகின்றான். ஷரீஆ நீதி எத்துனை அற்புமானது மனித உணர்வுகளுக்கும் மதிப்பளித்து மனிதனின் மானுசீகத்தையும் உயர்த்துகின்றது. இதுவா காட்டுமிராண்டித்தனம்?
 
ரிஸானா நபீக் விடயத்திலும் இந்த நடைமுறையே கைக்கொள்ளப்பட்டது. ஷரீஆ நீதிமன்றம் கொலை எனத் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் நாம் முன்னர் பார்த்ததுபோல்﹐ அவர்கள் தவறு  செய்திருந்தால் அது அவர்களின் குற்றமே ஷரீஆ நீதியின் குற்றம் அல்ல. பின்னர் தண்டனைத் தீர்ப்பு குடும்பத்திற்கே விடப்பட்டது. மன்னர் குடும்பம் முதல் அனைவரும் ரிஸானாவை மன்னிக்குமாறு இறந்த அல்லது கொலை செய்யப்பட்ட குழந்தையின் குடும்பத்தை வேண்டினர். குற்றம் நடைபெற்று ஏழு ஆண்டுகள் ஆகியும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரிஸானாவை மன்னிக்கும் மனநிலையில் இருக்கவில்லை. இறுதி நேரத்திலும் அவர்களது விருப்பம் கேட்கப்பட்டபோது அவர்கள் மன்னிக்கத் தயாராக இருக்கவில்லை.
 
அவ்வளவு கள்நெஞ்சமா அவர்களுக்குஎன்று யாராவது இந்த இடத்தில் வினவலாம். எனினும் முஸ்லிம்களாகிய நாம் அப்படிக் கேட்க மாட்டோம்﹐ 'மன்னித்திருக்கலாம்அல்லது'மன்னித்திருந்தால் நன்றாக இருக்குமேஅல்லது 'மன்னித்திருக்க வேண்டுமேஎன்றுதான் நாம் கூறுவோம். காரணம்﹐ ஷரீஆ நீதி மன்னிப்பை ஊக்குவித்தாலும் தண்டிக்கும் உரிமையைப் பறிக்கவில்லை. அதனால் அந்த உரிமையை முஸ்லிம்களாகிய நாமும் பறிக்க முடியாது. முஸ்லிமல்லாதவர்கள் மன்னிக்காத அந்தத் தாய் தந்தையைக் குறை காண்பது அவர்களைப் பொறுத்தது. எனினும்﹐ ஷரீஆ நீதியை அவர்கள் குறை காண்பது எந்த வகையிலும் நீதியானது அல்ல. குறை காணும் ஒவ்வொருவரும் பிறறொருவரால் தனது குழந்தை கொலை செய்யப்பட்டால் எந்த மனநிலையில் இருப்பார் என்பதை ஒரு முறை பரிசீலனை செய்து கொள்ளட்டும்.
 
இதனை எழுதும் நான்﹐ ரிஸானா சம்பவத்தை விமர்சிப்பவர்கள் எப்படியான நோக்கில் தங்களது விமர்சனத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டலையே வழங்கியுள்ளேன். ரிஸானா சம்பவத்தின் பின்னணிகள் எவைஉண்மைகள் என்னஎன்பதை விமர்சனங்கள் செய்யும் ஊடகங்கள் வாயிலாகவன்றி நேரடியாக ஆராய்ந்து அறிந்தவனல்ல.
 
எனினும்﹐ ஒரு மனிதன் என்ற வகையில் எனதுள்ளம் ரிஸானாவுக்காக அழுகிறது. ஒரு முஸ்லிம் என்ற வகையில் எனதுள்ளம் பின்வரும் விடயத்தில் ஆறுதலடைகிறது.
 
அல்லாஹ் ஒரு ரிஸானாவை வைத்து உலகத்தை ஒரு முறை உசுப்பியுள்ளான். அந்த உசுப்பலில் இஸ்லாம் எல்லையற்ற நன்மைகளைப் பெற்றுள்ளது பெற்றுக் கொண்டிருக்கிறது. எனினும்﹐ அந்த உசுப்பலில் பலியானவள் ரிஸானா அல்லவாஅதனால் ஷரீஆ நீதியை விமர்சித்தவர்கள் கூட நாளை மறுமையில் நான் அந்த ரிஸானாவாக இருந்திருக்கக் கூடாதா என்று நினைக்குமளவு ரிஸானாவைத் தனது அருளால் அல்லாஹ் பரவசப்படுத்துவான் போலும் என எனது மனம் கூறுகின்றது. யா அல்லாஹ்! ரிஸானாவின் பாவங்களை மன்னித்து உனது அருள் சுவனத்தில் அவளை சேர்த்தருள்வாயாக!
 
(2013-01-16 “எங்கள் தேசம்” பத்திரிகையில் வெளியான சிறப்புக்கட்டுரை)
ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,


Home    ||  Sri Lanka Think Tank-UK (Main Link) ||  Empowered by; MRM School 1      MRM School 2 || FB Wall   ||