Pages

Friday 23 December 2011

Hadees Collections

பழித்துக் காட்டாதீர்;


எவரையும் பழித்துக் காட்டாதீர்! அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள், "எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்ப வில்லை, அதற்க்கு பகரமாக ஏராளமான செல்வம் கிடைத்தாலும் சரியே" (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: திர்மிதி)

இரட்டை வேடம்;

உலக வாழ்வில் இரட்டை வேடம் போட்டவனுக்கு மறுமை நாளில் நெருப்பாலான இரண்டு நாக்குகள் இருக்கும். (அபூதாவூத்).

அவர்தான் முஸ்லிம்;

எவருடைய நாவலும் கரத்தாலும் ஏனைய முஸ்லிம்களுக்கு தீங்கு ஏற்படவில்லையோ அவர் தான் முஸ்லிம் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்". (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி , முஸ்லிம்)

Friday 16 December 2011

அல்லாஹ்வை மறந்து ஐநா படையின் உதவியைத் தேடும் Taliban Cleric Yoosuf கர்ளாவி

அல்லாஹ்வை மறந்து ஐநா படையின் உதவியைத் தேடும் Taliban cleric கர்ளாவி.

சிரியா அரசை வீழ்த்துவதற்கு ஐநா படையின் உதவியை சிரிய மக்கள் நாட வேண்டுமென்று அண்மையில் கர்ளாவி அந்நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுததுள்ளார்.

இணையத்தில் இந்தச் செய்தியைப் பார்த்த போது

சிங்கள மொழியில் இருக்கின்ற ஒரு பழமொழியே எனக்கு
ஞாபகத்திற்கு வந்தது.

யாருக்கும் தெரியாமல் பையில் மறைத்து வைத்திருந்த பூனை வெளியே பாய்ந்தது என்பதுதான் அந்த பழமொழி.

கர்ளாவியின் இஸ்லாமிய பிரசாரம் என்ற பையிலிருந்த மத்திய கிழக்கில் அமெரிக்க இஸ்ரேல் அரசியல் நலன் காக்கின்ற அரபு அரசியலை பாதுகாக்கும் பூனை வெளியே பாய்ந்து விட்டது.

சிரியாவின் மக்கள் போராட்டத்தை ஏகாதிபத்திய மாற்றுச் சக்திகளின் கைகளுக்கு மாற்றுவதற்கு கர்ளாவி கடும் முயற்சி எடுப்பது தெளிவாக தெரிகிறது.

கர்ளாவி கத்தார் நாட்டில் அந்த நாட்டு மன்னனின் அனுசரணையில் வாழும் ஒரு மகோன்னத சிந்தனையாளர். இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் மிகவும் விசுவாசமாகவும் நேசமாகவும் இருக்கும் கத்தார் நாட்டின் அரச குடும்பத்தோடு மிகவும் நெருக்கமாக ஒட்டி உறவாடுபவர்.

கத்தார் மன்னனுக்கும் கர்ளாவிக்கும் உள்ள உறவு

கத்தார் நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள கள்ள உறவை கண்டு கொள்ளாமல் நடிக்கும் இந்த கா்ளாவி , ஏனைய நாட்டு முஸ்லிம்களுக்கு ஸியோனிஸவாதிகளின் கொகா கோலாவை பகிஸ்கரிக்க பாடம் நடத்துபவர்.

முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின்னா் எண்ணெய் கிடைக்காதா என்று கதிகலங்கி போயிருந்த இஸ்ரேலுக்கு ஆறுதல் கூறி, அனைத்து சலுகைகளையும் நான் தருவேன் என்று கூறியவா்தான் கத்தார் மன்னா். இந்தக் கத்தார் மன்னரும் கர்ளாவியும் இணைபிரியா நண்பர்கள்.

கத்தார் மன்னனுக்கும் இஸ்ரேலிய அமைச்சர்

ஸிபி லிவினிக்ககும் உள்ள உறவு

இன்று கத்தார் நாடு இஸ்ரேலுக்கு பெற்றோலை மலிவு விலையில் அள்ளிக்கொட்டுகிறது. இது எகிப்தின் மக்கள் எழுச்சியின் போது கத்தார் மன்னர் இஸ்ரேலுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று.

இஸ்ரேலுக்கு எண்ணெய் வழங்கும் இந்த வாக்குறுதி வெளியான போது கூட கர்ளாவி இது தொடர்பாக எந்தக் கருத்தும் வெளியிடவில்லை. மௌனமாகவே இருந்து இதனை அங்கீகரித்தார்.

இப்படி ஸியோனிஸத்திற்கு துணை போகின்ற இந்த கர்ளாவிதான் அமெரிக்காவின் இஸ்ரேலின் எதிரிகளை இலக்கு வைத்து எதிரிகளை இலக்கு வைத்து பத்வா பள்ளிக்கூடம் நடத்துகிறார். நாடகம் ஆடுகிறார்.

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் பைதுல் முகத்திஸை தருசிப்பதைக் கூட ஹராம் என்று பத்வா வழங்கியவா்தான் இந்த கர்ளாவி. காரணம் இஸ்ரேலை ஒரு நாடாக ஏற்று அவர்களிடம் அனுமதி கேட்டு அந்த பூமிக்கு செல்வது கூடாது என்று எங்களுக்கு உபதேசிக்கும் கர்ளாவி அந்த நாட்டுக்கு கத்தார் மன்னர் நிபந்தனையற்ற முறையில் இன்று உதவி செய்து வருவதை ஏற்றுக்கொள்கிறார். அங்கீகரிக்கின்றார்.

அமெரிக்காவிற்கு எதிரியாய் இருப்பவர்ககளை எப்படியாவது இஸ்லாத்தின் எதிரியாக இருப்பவர்களாக சித்தரித்துக் காட்டி சேறு பூசி அவர்களை கொலை செய்யுங்கள் என்று கூறும் அளவிற்கு ஒரு தனிமனிதனான கர்ளாவிக்கு பின்புலமாக இருக்கின்ற அமெரிக்கா ஓர் அதீத பலத்தைக் கொடுத்திருக்கிறது.

சட்டம், ஒழுங்கு, ஐனநாயகம், மனித உரிமை என்று கூக்குரல் இடுபவர்கள் கூட ஒரு தனிமனிதனான கர்ளாவி இன்னொருவரை பகிரங்கமாக கொலை செய்யுங்கள் என்று கோரிக்கை விடுவதை தவறு என்று கண்டுகொள்ளவில்லை.

கர்ளாவி சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு வேதவாக்காக நினைத்து பின்பற்றும் அவரின் பக்தகோடிகள் இந்த '' அவனை கொலை செய்யுங்கள் '' கோரிக்கையை வீரவசனமாக ஏற்றுக்கொண்டார்கள்.

அமெரிக்காவோடு முரண்படும் எந்த நாட்டுத் தலைவருக்கும் எந்த பிரசைக்கும் இந்த கர்ளாவியின் கொலை பத்வா மீண்டும் பிரகடனப்படுத்தப்படலாம்.

(அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் மறைமுகமாக இஸ்லாத்தின் போர்வையில் ஊழியம் புரியும் இவர்களின் செயற்பாடுகளை கருத்து ரீதியாக நான் இங்கு முன் வைக்கும் போது , அதற்கு கருத்து ரீதியாக முகம்கொடுக்காமல் , பதிலளிக்காமல் எனக்கு கொலை அச்சுறுத்தல் மின்னஞ்சல்களையும், போலியான குற்றச்சாட்டுகளையும் இணையம் மூலம் அனுப்பி வருகின்றனர்.

பெற்றோல் டொலர்களுக்காக இஸ்லாம் பேசும் இவர்கள் அதே பெற்றோல் டொலருக்காக என்னைக் கொலை செய்வது பெரிய காரியமுமல்ல. சமூகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய இந்தக் கைக்கூலிகளின் செயற்பாடுகளை உலகறியச்செய்வது அல்லாஹ்வினதும், அவனது இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களினதும் மார்க்கத்திற்கு செய்யும் ஒரு பேறாகவே கருதுகின்றேன்.)

அது மட்டுமல்ல இன்று இந்த கர்ளாவி

அமெரிக்காவின் எதிரியாய் இருக்கும் நாடுகளுக்கு பத்வா வழங்கும் ஒரு பெக்டரியாக அவர் மாறி வருகிறார்.

கடாபியை கொலை செய்ய பத்வா கொடுத்த அவர் பலஸ்தீன் காஸாவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு கத்தார் மன்னன் குறைந்த விலையில் எரிபொருள் வழங்கி உதவி செய்வதை கண்டுகொள்வதில்லை. கண்டிப்பதில்லை.

மத்திய கிழக்கின் எண்ணெய்யைக் கொள்ளையிட அமெரிக்கா நடாத்தும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு ஏதுவாக அரபு மண்ணை தளங்களாக அமைத்துக் கொடுத்துள்ள அரபு மன்னர்களை இந்தக் கர்ளாவி கடிந்து கொள்வதில்லை.

அமெரிக்காவின் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் ஐ.நா வை சிரியாவில் தலையிட வேண்டும் என்று கோரும் கர்ளாவியின் போக்கை எந்த அறிவுள்ள முஸ்லிமும் அங்கீகரிக்கமாட்டான்.

கர்ளாவின் கருத்தின் படி சிரியா நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு அமெரிக்காவின் அடிவருடியாக செயற்படும் ஐநா வே நீதி செலுத்த வல்லது. ஐநா சபை உலகை நீதியால் நிறைத்து வருகிறது. அதன் துணை கொண்டு சிரியாவைக் காப்பாற்ற அவர் கனவு காணுகிறார்.

இந்த ஐநா முஸ்லிம் உலகிற்கு மாத்திரமல்ல முழு உலகிற்கும் இழைத்திருக்கும் கொடுமையை எண்ணிப்பார்க்கத்தான் முடியுமா?அமெரிக்காவின் மறைமுக ஏஐன்டாகசெயற்படும் கர்ளாவியின் பத்வா பூச்சாண்டி , பெற்றோல் டொலர்களுக்குள் புதையுண்டு கிடக்கிறது.

கர்ளாவியின் அமெரிக்க அரசியல் நலன்காக்கும் இஸ்லாமிய பிரசாரத்தை ஏற்று அவரை புகழ்பாடித் திரிவதற்கு இளிச்சவாயர்களான இலுப்பைப் பூக்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

80களில் ஆப்கானிலிருந்து ரஸ்ய படையை விரட்டியடித்து விட்டு அமெரிக்க படைகளுக்கு அந்த பூமியை தானமாக கொடுத்த ஜிகாதுக்காக அயராது பாடுபட்ட கர்ளாவி, மத்திய கிழக்கின் மக்கள் எழுச்சியோடு மற்றுமொரு முறை விழித்துக் கொண்டிருக்கிறார்.
எகிப்தில் அரசுக்கு எதிராக எழுந்து உயிர் நீத்த இளைஞர்கள் எவ்வளவோ பேர் இருக்க, எழுச்சிக்கு வித்திட்டர்கள் நாங்கள்தான் என்று உறக்கத்திலிருந்து விழித்து எகிப்துக்கு ஓட்டமெடுத்தர். வெள்ளிக்கிழமை குத்பாவில் வீர உரை நிகழ்த்தி விட்டு கத்தாருக்குள் ஓடி வந்து கண்ணயர்ந்த கர்ளாவி, இன்று சிரியாவைப் பார்த்து சீறிப்பாய்கிறார்.

ஆப்கானை, ஈராக்கை, லிபியாவை, அமெரிக்காவிற்கு தாரை வார்த்து விட்டு, இப்போது சிரியாவைப் பார்த்து இந்தக் கன்றாவி கண் சிமிட்டுகின்றார்.

அமெரிக்காவிற்கு விசுவாசமாக இருந்து க்கொண்டு கடந்த 200 ஆண்டுகளாக பஹ்ரைன் மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக அந்நாட்டை ஆளும் கலீபா குடும்பத்தினரை பதவி விலக வேண்டும் என்று பஹ்ரைன் மக்கள் போராடி வருகின்றனர். அந்த மக்களின் போராட்டத்தை பிரிவினைவாதம் என்று பீற்றித்தள்ளிய கர்ளாவி, அமெரிக்க சார்பான கலீபா மன்னர் குடும்பத்தை காப்பாற்ற அப்பட்டமாக உதவி வருகிறார்.

பஹ்ரைனில் ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்பட்டால் அங்குள்ள அமெரிக்காவின் ஐந்தாவது பாரிய கடற்படைத்தளத்தை பாதுகாக்கின்ற பிரச்சினை அமெரிக்காவிற்கு ஏற்படும்.

எனவே பஹ்ரைன் நாட்டு எழுச்சியை பிரிவினைவாதம் என்ற போர்வையில் பிரசாரம் செய்த கர்ளாவி அந்நாட்டு மக்களின் போராட்டத்தை நசுக்குவதற்கு சவூதி இராணுவத்தை அனுப்பிவதற்கான நியாயத்தை தோற்றுவித்தார்.

இன்று பஹ்ரைனில் சவூதி இராணுவம் போராட்டக்காரர்கள் மீது பல கொடுமைகளை நிகழ்த்தி வருகிறது.

2009ம் ஆண்டு காஸாவில் இடம்பெற்ற சம்பவம் நிகழ்காலத்தில் மிக மோசமான கொலைகளாகக் கருதப்படுகின்றன. சுற்றி வர அரபு நாடுகளை வைத்துக்கொண்டு அவர்களைக்காப்பாற்ற யாருமேயில்லையா என்று கதறும் போது மௌனமாக பார்த்துக் கொண்டுருந்த சவூதி அரேபியா பஹ்ரைனில் போராட்டத்தை நசுக்கி அமெரிக்க கடற்படைத்தளத்தை பாதுகாக்க தனது இராணுவத்தை அனுப்பியது.

காஸா கொலைகளைப் பார்த்து முஸ்லிம்கள் பதறிய போது பார்வையற்ற குருடர்களாய் இருந்து அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த அரபு மன்னர்களைப்பற்றி இந்தக் கர்ளாவி எந்த பத்வாவையும் வெளியிடவில்லை.
பஹ்ரைனில் அமெரிக்க கடற்படைத்தளத்திற்கு ஆபத்து வருகிறது என்ற நிலையில் பதறிப்போய் பஹ்ரைன் போராட்டத்திற்கு எதிராக பத்வா வழங்குகின்ற கர்ளாவியும், அதனைப் பாதுகாக்க தனது இராணுவத்தை அனுப்பி அந்நாட்டு மக்கள் மீது அட்டகாசம் புரியும் சவூதியும் ஒரே நிகழ்ச்சி நிரலின் இரண்டு நிகழ்வுகளே.

காஸா தாக்குதலின் போது பலஸ்தீனத்திற்குசவூதி அரசு தனது இராணுவத்தை அனுப்பி இஸ்ரேலுக்கு பாடம் புகட்டி இருக்கலாமே!

இதிலிருந்து என்ன புரிகின்றது?

இஸ்ரேலை அடக்காத கர்ளாவியும் அவரது அரபு எஐமானர்களும் அமெரிக்காவோடு இணைந்து இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருந்த இருக்கின்ற நாடுகளை துவம்சம் செய்ய தொடங்கியிருக்கின்றார்கள்.

லிபியா, சிரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு சிம்மசொப்பனமாக இருந்த இருக்கின்ற நாடுகள். லிபியாவும் ஈராக்கும் அந்த நாடுகளின் போராட்டத்தினால் தலைவர்கள் கொலை செய்யப்படும் அளவிற்கு போராட்டத்திற்கு சீஐஏ உளவாளிகளின் சதிகளினாலும், கர்ளாவி போன்ற ஏகாதிபத்திய ஏஐன்ட்களின் பத்வாவினாலும் புத்துயிர் அளிக்கப்பட்டது.

மத்திய கிழக்கில் மீதமிருக்கும் இஸ்ரேல் விரோத நாடுகளில் எஞ்சியிருப்பது சிரியாவும், ஈரானும், லெபனானும் கர்ளாவியின் பத்வா நாடகம் இப்போது சிரியாவிற்கு எதிராக அரங்கேறியிருக்கிறது. படிப்படியாக அது ஏனைய நாடுகளுக்கு எதிராகவும் அரங்கேறும். மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்கள் குறைந்துகொண்டு வருகிறார்கள்.

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஆதரவான நாடுகள் பாதுகாக்கப்படுகின்றன.

மத்திய கிழக்கின் மக்கள் எழுச்சியில் சிக்குண்ட நாடுகளில் எகிப்தும், ரியூனிசியாவும், யெமனும், பஹ்ரைனும் அமெரிக்க ஆதரவு நாடுகள் அந்தப் போராட்டங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்ட அமெரிக்கா அதன் தலைவர்களைப் பாதுகாத்துக்கொண்டு போராடடத்தையும் கர்ளாவி போன்ற அதன் அடிவருடுகளை வைத்து காத்துக்கொண்டது.

அமெரி்க்க நேச நாடுகளைப் பாதுகாக்கின்ற கள்ளத்தனத்தை முப்தியாக வேசமிட்டு பத்வாவாக கர்ளாவி வெளியிட்டு வருகிறார்.

பஹ்ரைன் மக்களின் போராட்டம் வெற்றிபெற்றால் அமெரிக்காவின் பாரிய கடற்படைத்தளத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலை தவிர்க்கவே இந்த கர்ளாவி பஹ்ரைன் போராட்டத்தை பிரிவினைப் போராட்டம் என்ற அமெரிக்க சார்பு பிதற்றல் பத்வாவை வெளியிட்டு மகிழ்ந்தார்.

எகிப்தின் போராட்டம் முழுக்க முழுக்க மக்கள் போராட்டமாகவே வெடித்தது.

முபாரக்கின் இராணுவம் கூட நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றே தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்தது. அந்த நேரம் கடாபிக்கு கொடுத்த கொலை பத்வாவை கர்ளாவி முபாரக்கிற்கு வழங்கவில்லை. காரணம் முபாரக் அமெரிக்காவின் கையாள், அரபு மன்னர்களின் நேசன்.

தன்னையே கொலை செய்ய காத்துக்கிடந்த முபாரக்கிற்கு வழங்காத பத்வாவை கடாபிக்கு வழங்கியது அவர் அமெரிக்காவின் விரோதி என்ற நிலைப்பாட்டை வைத்தே.

தூனீசியாவில் அட்டகாசம் புரிந்த பின் அலியை இன்று சவூதி அரசு பாதுகாக்கிறது. முபாரக்கை அமெரிக்கா பாதுகாக்கிறது. அவர்களுக்கு நீதி விசாரணை எதுவுமில்லை. பத்வாக்கள் எதுவுமில்லை. காரணம் அவர்கள் அமெரிக்காவின் ஆதரவாளர்கள்.

கடாபியின் மகன் சைபுல் இஸ்லாத்தை சர்வதேச குற்றவியல் மன்றில் நீதிக்காக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடும் இந்த கர்ளாவி கும்பல்கள் பின் அலீ பற்றியும், முபாரக் பற்றியும் மூச்சு விடுவதில்லை. அவர்களை பாதுகாக்கும் அரபுகள் பற்றி வாய் திறப்பதில்லை.

லிபியாவில் அமெரிக்க அரசினால் போசிக்கப்பட்ட போராட்டக்காரர்களால் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட கைதியான கடாபியை கொலை செய்த முறையை இஸ்லாம் அங்கீகரிக்கின்றதா?

கதறக்கதற ஒருவனை கொன்றொழிப்பதை றசூலுல்லாஹ்வின் சுன்னாஹ் அங்கீகரிக்க வில்லை.

அல்லாஹு அக்பர் என்று ஒரு கைதியின் கழுத்தை அறுப்பதை, அவனை அடித்துத் துன்புறுத்தி கொலை செய்வதை இஸ்லாத்தின் உன்னதச் செயல் என்று கர்ளாவியும் அவரின் கும்பல்களும் மார்தட்ட முடியும். ஆனால் அந்தச் செயல் இஸ்லாம் வெறுக்கின்ற இழிவான செயல் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு ஓர் உண்மையான முஸ்லிமுக்கு இருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்திய நலன்காக்கும் மத்திய கிழக்கு அரபு அரசியலில் தனது வயிற்றுப்பசியை தீர்த்து வரும் கர்ளாவியும் அவரின் கும்பல்களும் அமெரிக்க நவ காலனித்துவத்தின் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்பட்டு வருகின்றனர்.

மேற்குலகோடு முரண்படும் நாடுகளுக்கு தண்டனையாக உள்நாட்டிலேயே பிரச்சினைகளை உருவாக்கும் , பிரச்சினைகளை உயிராக்கும் வேலைத்திட்டங்களை இந்தச் சக்திகள் செய்து வருகின்றன.

இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல, அண்மைக்காலமாக மேற்குலகோடு இலங்கை ஒரு முறுகல் நிலையில் இருக்கின்றது. கத்தாரை தளமாகக் கொண்டு இயங்கும் அரபு எஐமானர்களின் ஊடக நிறுவனமான அல்ஐஸீரா இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற செய்திகளை ஒளிபரப்பி செனல் 4 தொலைக்காட்சிக்கு அடுத்த நிலையில் செயல்பட்டதையும் நாங்கள் மறக்கக் கூடாது. அல்ஐஸீராவின் இந்த செயற்பாட்டில் ஒரு பாரிய அரசியல் பின்னணி இருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக, காஸா படுகொலைகளுக்கு எதிராக கொடுக்காத பாரிய விளம்பரத்தை அல்ஐஸீரா இலங்கைக்கு எதிராக கொடுத்ததுவும் இந்த பின்னணியில்தான்.

80களில் ஆப்கானில் பெஷாவரில் அமெரிக்கா ஐிஹாத் பாடம் நடாத்திய போது அதில் படித்து பட்டம் பெற்று வெளியேறியவர்கள் இலங்கையிலும் இருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

கர்ளாவியின் சிஷ்யர்களாக இருக்கும் இவர்கள், முக்கிய கலாநிலையங்களில் பொறுப்பானவர்களாகவும், இலங்கை ஊடகங்களினால் ஊதிப்பெருப்பிக்கப்பட்டவர்களாகவும் இருப்பது அமெரிக்காவிற்கு இனமோதல் தொடர்பான எந்தக் காரியத்தையும் இலங்கையில் மேற்கொள்ள இலகுவானதான ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்கக் கூடியதான நிலை உருவாகி வருவதை உணர முடிகிறது.

அமெரிக்காவிற்கு தேவையான போது ஏதாவது ஒரு சிறிய இனமுறுகலை வைத்து ஐிஹாதிய தீயில் இலங்கையை பொசுக்கிவிட முடியும். அதற்கு ஏதுவாக அரபுகளின் அணுசரணையில் இலங்கையில் இடம் பெறும் நிகழ்ச்சிகளை நான் அவ்வப்போது பத்ர் களத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

அமெரிக்காவின் நவ காலனித்துவ சிந்தனையால் வடிவமைக்கப்பட்டுள்ள, பெற்றோல் டொலர்களால் போஷிக்கப்படுகின்ற இன்றைய இஸ்லாமிய (?) வாதிகள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு அல்லாமல் அதன் அழிவிற்கே துணை போகின்றனர்.

Thursday 4 August 2011

Moon sighting – Distinguishing between nationalism, political allegiance & fiqh (jurisprudence)

Allah (swt) says:

“Whoever witnesses the crescent of the month, he must fast the month." [TMQ 2:185]

Today, the matter of when to begin the month of Ramadhan and when to celebrate the day of Eid ul-Fitr is a subject of controversy, dispute and debate the world over. Read more>>>

Monday 1 August 2011

கிலாபா ஒரு கடமை - அறிஞர்களின் முடிவுகள் தமிழ்ச் சுருக்கம்

கிலாபா அல்லது இஸ்லாமிய அதிகாரம் கொண்ட தலைமைத்துவம் அமைவது ஒரு கடமை என்பது தொடர்பாக வந்த அஹ்லுஸ் சுன்னா அறிஞர்களின் இஜ்திஹாத் முடிவுகளின் தமிழ் சுருக்கம்.

கிலாபா வாஜிப் என்பதை தமது முடிவாக எடுத்த அறிஞர்களை பட்டியலிடுகிறது. இதில் அறிஞர் இப்னு ஹசம் அவர்கள் தனது (الفصل في الملل والأهواء والنحل) எனும் நூலில் :

اتفق جميع أهل السنة وجميع الشيعة، وجميع الخوارج (ماعدا النجدات منهم) على وجوب الإمامة

"தலைமைத்துவம் வாஜிப் (கடமை) எனும் விடயத்தில், அஹ்லுஸ் சுன்னாவுடைய அறிஞர்களும் அனைத்து ஷீஆக்கலும், (சில விதிவிலக்கானவர்களித்தவிர) அனைத்து கவாரிஜ்களும் கடமை எனும் நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்."

இமாம் இப்னு ஹஜர் அல்அச்கலாணி தனது 'பத்ஹுள் பாரி' நூலில் இது பற்றி குறிப்பிடும் போது, இமாம் நவவி அவர்களும் இன்னும் பலரும் இந்த விடயத்தில் (கிலாபா ஒன்று அமைவது கடமை) ஒத்த கருத்துடையவர்களாக இருந்தார்கள் என்று கூறுகிறார்.

இப்னு ஹஜர் ஹய்சமி எனும் அறிஞர் இது பற்றி ( الصواعق المحرقة) எனும் நூலில் கூறும்போது:

"اعلم أيضا أن الصحابة رضوان الله عليهم أجمعوا على أن نصب الإمام بعد انقراض زمن النبوة واجب بل جعلوه أهم الواجبات حيث اشتغلوا به عن دفن رسول الله صلى الله عليه وسلم

"சஹாபாக்கள் அனைவரும் நபி(ஸல்) அவர்களின் பின் ஒரு அரசியல் தலைவர் ஏற்படுத்தப் படல் வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை பட்டனர். மட்டுமல்லாது, அவர்கள் ஒரு முக்கிய கடமையாகவே ஆக்கினர். எந்த அளவு என்றால், நபி(ஸல்) அவர்களை அடக்கம் செய்யும் வேலையை விட இதற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்." என்று குறிப்பிடுகிறார்.

இப்னு கள்தூன் அவர்கள் தமது (المقدمة) எனும் நூலில்,
"إن نصب الإمام واجب قد عرف وجوبه في الشرع بإجماع الصحابة والتابعين

ஒரு அரசியல் தலைவரை (இமாமை) நியமிப்பது கடமை என்பதையும் இதற்கான சட்டம் சஹாபாக்கள் அனைவரினதும், மற்றும் தாபிஈன்களினதும் ஒன்றுபட்ட முடிவில் இருந்து பெறப் பட்டதாக கூறுகிறார்.
நபி(ஸல்) அவர்களின் வபாத்தின் பின் உடனடியாக அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு பைஅத் செய்யப்பட்டு அவர் தெரிவு செய்யப்பட்டதும் அக்காலப் பகுதியில் சமுகம் எந்த நிலையிலும் ஒரு தலைமைத்துவம் அற்ற நிலையில் விடுபட்டிருக்கவில்லை என்பதே இதற்கான ஆதாரம் என்றும் அவர் குறிக்கிறார்.

அறிஞர் நசபி அவர்கள் தமது( العقائد) எனும் நூலில்,

والمسلمون لا بد لهم من إمام يقوم بتنفيذ أحكامهم وإقامة حدودهم وسدّ

முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் தலைவர் இருப்பதும், அவர் முஸ்லிம்கள் தொடர்பான சட்டங்களை நிலை நாட்டுவதும் அவசியம் என்று குறிப்பிடுகிறார்.

அறிஞர் ஜமாலுத்தீன் கஸ்நவி அவர்கள் தமது (أصول الدين) எனும் நூலில்,
لا بد للمسلمين من إمام يقوم بمصالحهم من تنفيذ أحكامهم

கிட்டத்தட்ட மேலே இமாம் நசபி சொன்ன அதே கருத்தை கூறுகிறார்.

அறிஞர் இழ்ழு தீன் அவர்கள் தமது ( المواقف) எனும் நூலில்
نصب الإمام عندنا واجب علينا سمعا... وأما وجوبه علينا سمعا فلوجهين: الأول إنه تواتر إجماع المسلمين

ஒரு இமாமை ஏற்படுத்துவது எம்மீது கடமையான ஒரு விடயம் ஆகும்.இங்கு இவர் நபி(ஸல்) அவர்களின் வபாத்தின் பின் அபூபக்ர் (ரலி) அவர்கள் நிகளித்திய உரையையும், பின்னர் அனைத்து விடயங்களையும் அவர் பின்னர் கலீபாவாக தேர்ந்து எடுக்கப்படுவது முக்க்யத்துவம் கொடுக்கப் பட்டமையையும் குறிப்பிடுகிறார். இரண்டாவது ஆதாரமாக இறைவனின் சட்டங்கள் (குற்றவியல், ஜிஹாத், ஏனையவை) கடமையாக்கப் படல் ஒப்புக்கொள்ளப்பட்ட கடமை எனும் வகையில், அதனை நிலை நாட்ட எடுக்கப்படும் முயற்சியும் கடமை என்பதையும் குறிப்பிடுகிறார்.

இமாம் குர்துபி அவர்கள் அவரது குர்ஆன் விளக்கவுரையில்,

هذه الآية أصلٌ في نصب إمامٍ وخليفةٍ يُسمعُ له ويطاعُ؛ لتجتمع به الكلمةُ

ஒரு கலீபா அமையவேண்டும் என்பதற்கும், அவருக்கு மக்கள் செவி சாய்த்து கட்டுப்பட வேண்டும் என்பதற்கும் சில குர்ஆன் வசனங்களை ஆதாரமாக வைத்து அது ஒரு கடமை என்பதில் கருத்து வேறு பாடு இல்லை என்று குறிப்பிடுகிறார்:

إِنِّى جَاعِلٌ فِى ٱلْأَرْضِ خَلِيفَةً ۖ

(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது (2:30)

وَعَدَ ٱللَّـهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِى ٱلْأَرْضِ كَمَا ٱسْتَخْلَفَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ ٱلَّذِى ٱرْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّنۢ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا ۚ يَعْبُدُونَنِى لَا يُشْرِكُونَ بِى شَيْـًٔا ۚ وَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْفَـٰسِقُونَ

உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல் பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; "அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;" இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (24:55)

يَـٰدَاوُۥدُ إِنَّا جَعَلْنَـٰكَ خَلِيفَةً فِى ٱلْأَرْضِ فَٱحْكُم بَيْنَ ٱلنَّاسِ بِٱلْحَقِّ وَلَا تَتَّبِعِ ٱلْهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ ٱللَّـهِ ۚ إِنَّ ٱلَّذِينَ يَضِلُّونَ عَن سَبِيلِ ٱللَّـهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌۢ بِمَا نَسُوا۟ يَوْمَ ٱلْحِسَابِ

(நாம் அவரிடம் கூறினோம்;) "தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், அனோ இச்சையைப் பின் பற்றாதீர்; (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு. (38:26)

என்ற மூன்று வசனங்களையும் ஆதாரமாக காட்டுகிறார்.

இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தனது (السياسة الشرعية) நூலில்,

"يجب أن يعرف أن ولاية أمر الناس من أعظم واجبات الدين، بل لا قيام للدين إلا بها. فإن بني آدم لا تتم مصلحتهم إلا بالاجتماع لحاجة بعضهم إلى بعض، ولا بد لهم عند الاجتماع من رأس حتى قال النبي صلى الله عليه وسلم "إذا خرج ثلاثة في سفر فليؤمروا أحدهم" رواه أبو داود من حديث أبي سعيد وأبي هريرة ... ولأنّ الله تعالى أوجب الأمر بالمعروف والنهي عن المنكر، ولا يتمّ ذلك إلا بقوة وإمارة..".

மக்களின் விவகாரங்களில் பொறுப்பேற்கும் ஒரு தலைமைத்துவம் அமைவது கடமைகளுள் மிகவும் தலையாயது ஆகும். இல்லாவிடின் தீன் என்பது நிலை நாடப்பட முடியாத ஒன்றாகி விடும்.ஆதமுடைய மகன்(மனிதன்) உடைய விவகாரங்கள் ஒருவருக்கொருவர் தேவை கொண்டதாக இருப்பதோடு, அவை கூட்டாக இல்லாதவிடத்து பூரணத்துவம் அற்றதாகவே அமையும். அவ்வாறு கூட்டாக மனித செயல்பாடுகள் இருக்கும் இந்த நிலையில், அந்த கூட்டு சமுகத்திற்கு ஒரு தலைமை அமைவது அவசியம் ஆகும். இதற்கு ஆதாரமாக 'மூன்று முஸ்லிம்கள் ஒரு பயணத்தில் ஈடுபட்டாலும் தமக்குள்ள ஒரு தலைவரை நியமித்துக் கொள்ளட்டும்' எனும் அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கும் ஹதீஸை ஆதாரமாக கொள்கிறார். மேலும் அல்லாஹ் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணியை நமக்கு கடமையாக்கி இருக்கிறான். அந்த பணி அதிகாரபூரவமற்ற ஒரு தலைமைத்துவம் இன்றி பூரணம் அடைய மாட்டாது என்றும் கூறுகிறார்.

இமாம் ஷவ்காணி அவர்கள் தமது السيل الجرار எனும் நூலில் பல ஆதாரங்களை காட்டி இந்த விடயம் ஒரு கடமை என்று கூறுவதையும், அதே போன்று அறிஞர் சம்சுதீன் ரம்லி எனும் அறிஞரும், ஷைக் தாஹிர் இப்னு ஆஷூர் எனும் அறிஞர்களும் அதே வகையான கருத்தை கொண்டிருப்பதையும் காணலாம்.

அத்தோடு ஜசீரி எனும் அறிஞர் தமது الفقه على المذاهب الأربعة எனும் நூலில்,

"اتفق الأئمة رحمهم الله تعالى على أن الإمامة فرض وأنه لا بد للمسلمين من إمام يقيم شعائر الدين وينصف المظلومين من الظالمين وعلى أنه لا يجوز أن يكون على المسلمين في وقت واحد في جميع الدنيا إمامان لا متفقان ولا مفترقان

நான்கு (மத்ஹபுகளுடைய) இமாம்களும் ஒரு தலைமைத்துவம் அமைவது கடமை என்பதில் கருத்தொற்றுமை படுகிறார்கள். முஸ்லிம்களின் மார்க்க விவகாரங்களிலும், அநியாயம் செய்யப்பட்டவனுக்கு அநியாயம் செய்தவனிடம் நீதியை பெற்றுக் கொடுப்பதற்கும் இது அவசியம் என்றும் கூறுகிறார்கள். ஒரே நேரத்தில் உலகில் ஒரு தலைமைத்துவம் மட்டுமே இருக்க முடியும் என்பதிலும் இவர்கள் கருத்தொற்றுமை படுகிறார்கள். என்று குறிப்பிடுகிறார் (FB; Islamic Thought)

Home             Sri Lanka Think Tank-UK (Main Link)

Thursday 7 July 2011

நபிகளும் கல்வியும்

1/
நவீன கல்வித் திட்டத்தைக் கற்ற யாரும் முன்னெப்போதையும் விட அது வளர்ச்சியடைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. நாளைய மனிதனை உருவாக்குவதில் அதன் வழிமுறைகள் விருத்தியடைந்துள்ளதை யாரும் ஏற்காமலிருக்க முடியாது. கல்வியாளர்களும் உளவியலாளர்களும் அதற்காகப் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். இப்பின்புலத்தில் நபிகளின் கல்வி குறித்த பார்வை தனித்துவப்படுவதையும் காலத்திற்கேற்ப நெகிழ்வுத் தன்மையுடன் பொருந்திப் போவதையும் அதேநேரம் அது குறித்து கேள்வி எழுப்புவதையும் காண முடியும். ‘அறிவு காணாமல் போன பொருள்’ என நபிகள் பிரகடனம் செய்கிறார். ‘அதை இடயறாது தேடுவதே மனிதனின் பணி’ எனக் கூறுகிறார். அதேநேரம் இன்றைய கல்வி முறையில் பின்வரும் விடயங்களை நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

கல்வித்திட்ட வழிமுறைகளில் பிரதான அம்சம் அவற்றின் நோக்கமேயாகும். அதாவது கல்வியின் நோக்கம் யாது? கல்வித் திட்ட வழிமுறையூடாக எந்த வகையான மனிதர்களை உருவாக்க விரும்புகின்றோம்? மேற்குலக நோக்குமுறையிலிருந்து நபிகளின் நோக்குமுறை எவ்வாறு வேறுபடுகின்றது. இயந்திரமயமான மேற்கத்திய நோக்குமுறை நபிகளின் கல்வியில் கிடையாது. அவரது கல்வி வாழ்க்கையிலிருந்து பிறக்கின்றது. மனிதனின் வாழ்க்கை சார்ந்த ஞான தேடலிலிருந்து ஆரம்பமாகின்றது. தன்னிலை, சமூகம் போன்ற சமூக ஊடாட்டத்தோடு அக்கல்வி பிறக்க வேண்டுமென நபிகள் நாடுகிறார். தன்னிலையாகவும் மற்றமைகளையும் பாதிப்பை செலுத்தக்கூடிய உற்பத்தி நாட்டம் கொண்ட தேடலுள்ள மனிதனையே நபிகளின் கல்வி உருவாக்க விரும்புகின்றது.

நபிகளின் கல்வியில் அடுத்த சிறப்பம்சங்களில் ஒன்று அதன் பரிபூரணத் தன்மையாகும். வாழ்வின் சகல அம்சங்களையும் உற்கொண்ட கல்வியாக அது அமைகிறது. நபிகளின் கல்வி ஒரு மதக்கல்வி அல்ல. உடல், தொழில், மொழி, இலக்கிய, பாலியல், சமூகவியல், ராணுவ, வணிக, அரசியல் என கல்விக்கான களங்களைக் கொண்டதாக பரிமானங்களை அடைந்துள்ளது. பண்பாட்டுக் கல்வி, அழகியற் கல்வி போன்ற விரிந்த கல்வித்துறைகளுடன் இணைந்த ஒன்றாகத்தான் நபிகளின் கலவியை ஆராய வேண்டும். இவை ஒவ்வொன்றுடனும் ஒன்று கலந்து ஊடுபாவி முழுமையான ஆளுமை படைத்த மனிதனை நபிகளின் கல்வி உருவாக்க விரும்புகின்றது.

நபிகளின் கல்விக் கோட்பாட்டில் கலைத்திட்டம், வழிமுறைகள், பாடநூல்கள் போன்றவையும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் அவற்றைவிட ஆசிரியர், மாணவர் உறவையே செயலூக்கமுள்ள சக்தியாக நபிகள் கணித்துள்ளார்.

நபிகளின் கல்வியில் கல்வி வழங்கும் நிறுவனமோ, இடமோ மட்டும் கல்விக்கு பொறுப்பானதென்று அவர் கருதவில்லை. கல்விச் சமூகத்தையும் அவர் உருவாக்க அதனோடு இணைத்துக் கொள்ள விரும்பியுள்ளார். குடும்பம், சமூகம், ஊடகம் என கல்வி நிறுவனத்திற்கு வெளியே இருக்கின்ற அத்தனை அமைப்புக்களும் அதற்குப் பங்காற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றார்.

சமாதானக் கல்வி

நபிகளின் கல்விக் கோட்பாட்டில் சமாதானக் கல்விக்கும் பெரியதொரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மனிதனுக்கு சமாதானம் தேவையாகும். சமாதானம் இன்றி மனிதனால் வாழ முடியாது. விடுதலைப் போராட்டமாயினும் தற்காப்புப் போராயினும் அதை ஒரு கட்டத்தில் ஓயவைத்தே ஆகவேண்டும். நபிகள் பேராட்டங்களின் பின் சமாதானப் பேச்சுக்களிலேயே அதிகம் ஈடுபட்டுள்ளார். யுத்தம் முதலில் ஊற்றெடுப்பது மனித உள்ளத்திலாகும். அற்ப பிரச்சினைகளுக்கு சதா போரிட்டுக் கொண்டிருந்த பழங்குடிச் சமூகத்தில் நபிகள் சமாதானக் கல்வி மூலமே தனது சமூகமாற்றப் பணியை தொடக்கிவைத்தார். எனவே அவர் சமாதானத்தின் அடித்தளத்தை உள்ளத்திலேயே அமைக்க வேண்டும் என பாடுபட்டார். ஆகிரமிப்பு மனோபாவம் வன்முறைக்கு இட்டுச் செல்லும் மனித ஆற்றலை சமாதான வழியில் செலுத்துவதற்கு நபிகள் அறிமுகப்படுத்திய கல்வி முறை பொருத்தமாக அமைந்துள்ளது. உள்ளத்தில் எழும் மோதலை தனிப்பதன் மூலம் உள்ளத்தில் சமாதானத்தைத் தோற்றுவிக்கலாம் என்ற உண்மையை நபிகள் தனது வாழ்வில் நிரூபித்துக் காட்டினார். உள்ளத்திற்கும் அறிவுக்கும் இடையே நிலவும் இந்த மோதுகையை அல்லது இயல்பூக்கத்திற்கும் உள்ளத்திற்கும் இடையே நிலவும் மோதுகையைத் தவிர்ப்பதன் மூலம் முதலில் உள அமைதியைத் தோற்றுவிக்கலாம் என்று நபிகள் உறுதியாக நம்பினார். சமூகப் பொருளாதார ஒழுங்கமைப்புக்களால் சமாதானம் பாதிப்படைகிறது என்பதை மறுக்காமல் தன்னிலைகளின் உள்ளக்கிடக்கைகளையும் அபிலாஷைகளையும் புறந்தள்ளாமலும் நபிகள் சமாதானக் கல்வி மூலம் தீர்த்துவைத்தார். உள்ளத்தில் ஒரு பொருள் இருக்கிறது. அது சீர்பெற்றுவிட்டால் அனைத்தும் சீர் பெற்றுவிடும். அது கெட்டுவிட்டால் அனைத்தும் கெட்டுவிடும் என்ற நபிகளின் கூற்று மிகுந்த முக்கியத்துவமுடையதாகும். எனவே வறுமையும் வன்முறையும் நிலவும் சூழலில் ஒருவரின் அகத்துக்குள் பூரண சமாதானம் நிலவ முடியாது என்பதைப் போல இயற்கைச் சூழல் அழிப்பு யுத்தத்திற்குப் பழியாகும் போது சமாதானம் நிலவ முடியாது என்பதை நபிகள் தனது வாழ்நாளில் நிரூபித்துக் காட்டினார். நபிகள் அறிமுகப்படுத்திய சமாதனக் கல்வியின் நோக்கம் சமாதானமாக வாழக்கூடிய மனித சமூகமொன்றை உருவாக்குவதாகும். இனவன்முறைக்கும் பேரழிவுக்கும் பலியாகும் மனித சமூகத்தை விடுவிப்பதே நபிகளின் கல்வி முறையின் உன்னத நோக்கமாகும். உடலும் ஆன்மாவும் அறிவும் அழகியல் உணர்வும் உற்பத்தித் திறனும் கொண்ட நல்லடியார்களை உருவாக்குவதே அவரது இலட்சியமாக இருந்தது.

2/

நூற்றாண்டுகளாகப் பேராடி வாழ்ந்த அறபிகளை நபிகள் தனது சமாதானக் கல்வியூடாக ஒன்றுபடுத்தினார்கள். மிலேச்சத்தனமான, மிருகத்தனமான நடவடிக்கைகளை நிறுத்தினார்கள். யுத்தக் கைதிகளுக்கான விடுதலையாக கல்வியையே அறிமுகப்படுத்தினார்கள். சிறைவாழ்விலிருந்து விடுவிக்க கல்வி போதிப்பதை ஒரு புதிய தண்டனையாக அறிமுகப்படுத்தினார்.

இனக்குரோதம், இனவெறுப்பு, வன்முறைப் பண்பிலிருந்து விலக்கி மனிதம் என்ற பண்பைக் கொண்டவர்களாக தனது தோழர்களை அவர் உருவாக்கினார். ஒரு தன்னிலை தன்னுடனும் சமூகத்துடனும் பிரபஞ்சத்துடனும் சமாதானமாக வாழக்கூடிய மோதல்களைத் தவிர்த்துக் கொள்ளக்கூடிய மனிதர்களைத்தான் அவர் தனது கல்வி முறையில் உருவாக்கினார். நபிகள் தனிநபர் உருவாக்கத்திலும் தனித்துவங்களின் உருவாக்கத்திலும் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்தினார்கள். அதியுயர் தனியாள் விறுத்தியின் ஊடாகத்தான் அவர் இந்தச் சமாதானக் கல்வியை வெற்றிகரமாக செயற்படுத்தினார்.

நபிகளின் சமாதனக் கல்வி உறைந்து போன, கலகப் பண்பில்லாத மாணவர் சமூகத்தை உருவாக்க விரும்பவில்லை. மோதுகை என்பது தனிமனிதனுக்கு, சமூக இயங்கியலுக்கு அத்தியவசியமானது. மனிதர்கள் இருக்குமிடத்தில் மோதலும் இருக்கும். சத்தியத்தின் மீது உண்மையான அறிவின் மீது அல்லது நீதிக்கும் சமாதானத்திற்குமான ஒரு குழு யுகம் முடியும் வரை நிலைத்திருக்கும் என்று நபிகள் குறிப்பிடுகின்றார். அதிகாரத்திடம் உண்மை பேசுவதே உயர்ந்த அறப்போர் என்று கூறி உயிர்ப்பு மிக்க புத்திஜீவிகளை உருவாக்கினார். உண்மை நீதி தெரிந்தும் அதை எடுத்துக் கூறாதவன் கெட்ட ஷைத்தான் என்று கண்டித்தார்.

நபிகளின் சமாதானக் கல்வி மாணவர்களை சுறுசுறுப்பாக மாற்றுகின்றது. கவனமாக செவிமடுத்தல், தமது உள்ளுணர்வுகளை தெளிவாக மற்றவர்களுக்கு எடுத்துரைத்தல், நேர்மையாக நடத்தல், எதிர்ப்பைத் தெரிவித்தல், தனக்காகவும் சமூகத்திற்காகவும் குரல் கொடுத்தல், பொறுப்புடன் காரியங்களை மேற்கொள்ளல், மோதல்களைத் தவிர்ப்பதில் விவேகமாகச் செயற்படல், சலாம் கூறுதல், கைளாகு செய்தல், ஆலிங்கனம் செய்தல், உபசரித்தல், நோய்விசாரித்தல், உரிமைகளைக் கொடுத்தல், கடமைகளை நிறைவேற்றல் என நபிகளின் சமாதானக் கல்வி உயிர்த்தன்மையுடன் திகழ்கின்றது.

பாடசாலைக் கல்வி

இன்றைய பாடசாலையின் சிறப்பம்சம் அது தரப்படுத்தப்பட்ட சீரான கல்வியை அனைவருக்கும் வழங்குகின்றது. ஒரு சமூகத்தை ஒரே விதமான கல்வியை வழங்கி தரப்படுத்துவதற்கு இதுவே சிறந்த வழியாகும். இன்றைய கல்வியில் முதல்தர நோக்கம் சமூக உருவாக்கமாகும். சீரான மதிப்பீடுகளும் சமூக பழக்க வழக்கங்களும் அடிப்படை நம்பிக்கைகளைக் கொண்ட சமூகம் ஒன்றை பயிற்றுவித்து எடுப்பதே இன்றைய கல்வியின் இலக்காக காணப்படுகின்றது. அவ்வாறே இன்றைய கல்வி ஜனநாயகத் தன்மை கொண்டதாக உள்ளது. அதனால் தரப்படுத்தப்பட்ட கல்வியையும் ஜனநாயகத்தையும் பிரித்துப்பார்க்க முடியாது. பல்வேறு சமூக, பொருளாதார, ஏற்றத்தாழ்வுகள் உள்ள குழந்தைகள் அனைவரும் சமம் என்ற மனநிலையைப் பெறுவது பள்ளிக்கூடத்தில்தான். ஆனாலும் இந்தக் கல்வி முறையில் சில அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. இது கல்வியின் பொதுத்தராதரத்தைக் குறிவைத்து இயங்குவதால் தனித்தன்மைகளை பொருட்படுத்துவதில்லை. சராசரிகளையே இது கணக்கிலெடுக்கின்றது. சராசரிகள் மூலம் தனித்துவங்களை நசுக்கிவிடுகின்றது. அனைவருக்குமாக வகுக்கப்பட்ட பாடத்திட்டத்தில் தனித்த தேடலும் ஐயங்களும் கொண்ட மாணவனின் ஆத்மா அவநம்பிக்கை கொள்கிறது. கல்வியை தனிமனிதனுக்கான அறிவுத்தேடலை நிறைவு செய்யும் வழிமுறை என எடுத்துக் கொண்டால் இந்தப் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி முறை அவனுக்குப் பெரிதாக எதையும் கொடுப்பதில்லை. ஆரம்ப மொழிப்பயிற்சி வித்தியாசமான மனிதர்களுடன் பழகுவதற்கான சந்தர்ப்பம் போன்ற சில விசயங்கள் மாத்திரமே இன்றைய பாடசாலைக்கல்வியில் கிடைக்கின்றது.

குரு-சிஷ்ய கல்வி முறைக்கும் பாடசாலை கல்வி முறைக்குமிடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒரு குருவுடன் சேர்ந்து வாழ்ந்து மெல்ல மெல்ல அவர் அடைந்த மெய்ஞானத்தை அவரது ஆளுமையுடன் சேர்த்துப் பெற்றுக் கொள்வதே குரு-சிஷ்ய முறையில் கிடைக்கும் கல்வியாகும். ஆனால் பாடசாலை, கூட்டமாகச் சேர்ந்து ஏதேனும் ஒரு பாடத்தை ஒரேவிதமான முறையில் படிப்பதைக் குறிக்கின்றது. பள்ளிக்கூடத்திற்கும் குரு-சிஷ்ய முறைக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இதுதான். பள்ளிக்கூடத்தில் பாடம் உள்ளது. ஆசிரியர் இல்லை. ஆசிரியர் அங்கு அப்பாடத்தை ஒலிக்கும் குரல் மட்டுமே. பள்ளியில் ஆசிரியருக்கும் மாணவனுக்குமிடையே தனிப்பட்ட உறவு கிடையாது. மாணவன் ஆசிரியருக்கு ஒரு சுட்டிலக்கம் மட்டுமே. எனவேதான் பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களை நினைவில் வைத்துக் கொள்வதில்லை. பாடசாலை அல்லது நிறுவனக்கல்வி சிந்தனைகளைத்தான் கற்பிக்கின்றன. சிந்திப்பதற்குக் கற்பிப்பதில்லை.

ஆனால் நபிகளின் கல்வி அமைப்பில் ஆசிரியரும் மாணவனும் தனிப்பட்ட உறவுடன் உள்ளனர். இந்த உலகத்தில் உருவாகும் உறவுகளில் மிகவும் புனிதமானதும் உயிர்ப்புமிக்கதுமான உறவாக குரு-சிஷ்ய உறவே கருதப்படுகின்றது. அங்கு இருவருக்கும் தீராக்காதல் இருக்கும். எனவேதான் நபிகளிடம் கற்ற மாணவர்கள் அவரது மறைவுக்குப் பின்பும் தமது வாழ்நாள் பூராக நினைவூட்டிக் கொண்டே இருந்தார்கள். இங்கு நபிகள் என்ற குரு ஓர் ஆளுமையாக, முன்னுதாரணமாக அவரது தோழர்கள்-மாணவர்கள் முன் நின்கின்றார். தன்னையே அவர்களுக்கு பரிசாக அளிக்கின்றார். அவர்கள் ஆக விரும்பும் பிம்பம் அவருடைய இலட்சியமாகவும் கனவாகவும் அவராக இருக்கின்றது. கடமைக்காக கற்பிக்கும் ஆசிரியருக்கும் நபிகள் என்ற ஆசிரியருக்குமிடையில் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. நபிகள் அறிவை குறிப்பான பாடத்திட்டத்திற்குள் சுருக்கிக் கொள்ளவில்லை. அதை எப்போதும் தேடலுக்குரிய ஒன்றாகவே வைத்திருந்தார். நேற்று இன்று நாளை என்ற கால பரிமானத்தில் அறிவுற்பத்தியை அவர் ஊக்குவித்தார். அறிவில் யாரும் எந்நிலையிலும் தன்னிறைவு அடைய முடியாது என்பதையும் அவர் நம்பினார். எனவே கல்வியை குறிப்பிட்ட கட்டத்தோடு நிறுத்திவிடாது வாழ்நாள் பூராக கற்றல் என்ற சிந்தனையை முன்வைத்தார். சொற்ப அறிவே வழங்கப்பட்டுள்ளது. அறிவைப் பெருகச் செய்வாயாக என்ற புகழ்பெற்ற வாக்கியங்களை அவர் உச்சரிப்பவராக இருந்தார். (Idree Plus*)

Home         Sri Lanka Think Tank-UK (Main Link)

Saturday 2 July 2011

நபிமார்கள் மீது மூன்று வகையான பணிகள் சுமத்தப்பட்டிருந்தன

01) அல்லாஹூத்தஆலாவை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு மட்டும் கட்டுப்பட்டு வாழ்வதின் பால் அழைத்தல்.

02) அல்லாஹூத்தஆலாவின் விருப்பு, வெறுப்புக்களை (சட்டங்களை) மனிதர்களுக்கு எத்திவைத்து அதை நடைமுறைப்படுத்த முயற்சித்தல்.

03) அல்லாஹூத்தஆலா இறக்கிய சட்டங்களைக் கொண்டு ஒரு தலைமையின் கீழ் ஒன்றிணைந்த சமூக அமைப்பொன்றை உருவாக்குதல்.

முதல் பணியானது அனைத்து நபிமார்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்ததை பின்வரும் அல்-குர்ஆன் வசனம் உணர்த்துகின்றது.

' என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை, என்னை மட்டுமே வணங்குங்கள் என்று அறிவிக்கப்படாமல் உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை' (அல்- அன்பியா : 25)

அல்லாஹ்வின் விருப்பு வெறுப்புக்களை மனிதர்களுக்கு எத்திவைத்து அதை நடைமுறைப்படுத்தல் என்ற பணியைப் நிறைவேற்றும் பொருட்டே அல்லாஹூத்தஆலா சில நபிமார்களுக்கு வேதங்களையும், இன்னும் சிலருக்கு ஸூஹூபுகளையும், சிலருக்கு அவையிரண்டையும் இறக்கியருளினான். இவை வழங்கப்படாத நபிமார்களுக்கு முன்னைய நபிமார்களின் சரீஅத்தை பின்பற்றுவதும், போதிப்பதும், நடைமுறைப்படுத்துவதும் கடமையாக இருந்தது. ' உங்களிலுள்ள அனைவருக்கும் ஒரு சட்ட ஒழுங்கையும், பாதையையும் ஆக்கித் தந்தோம்' ( அல்- மாஇதா : 48) என்ற வசனம் நபிமார்கள் ஏதோ ஒரு வகையில் இரண்டாவது பணியை பொறுப்பாக்கப்பட்டிருந்தனர் என்பதை தெளிவுபடுத்துகின்றது.

மூன்றாவது பொறுப்பை – (ஒரு தலைமையின் கீழ் சமூக அமைப்பொன்றை உருவாக்குதல்) அல்லாஹூத்தஆலா எல்லா நபிமார்களுக்கும் விதியாக்கினானா? என்பதை அல்-குர்ஆனோ ஹதீஸ்களோ தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால் இப்பொறுப்பு நபிமார்களில் சிலருக்கு கடமையாக்கப்பட்டிருந்தததை நாம் அல்-குர்ஆன் கூறும் நபிமார்களின் கதைகளிலிருந்து விளங்கிக் கொள்கிறோம்.

இப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட நபிமார்களில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முக்கியமானவர்கள். ஏகத்துவத்தை எத்திவைப்பதோடு, பிர்அவ்னின் அடிமைத்தனத்திலிருந்து பனூ இஸ்ரவேலர்களை விடுவித்து, அவர்களை ஒரு சமூகமாக்கி, சமூக அமைப்பை ஏற்படுத்துவதற்காக அச்சமூகத்திற்கு ஹிஜ்ரத்தை விதியாக்கி, சமூக அமைப்பை பாதுகாப்பதற்காக ஜிஹாதையும் கடமையாக்கி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தூதுத்துவத்தை பூமியில் மேலோங்கச் செய்கின்ற பணியை அல்லாஹூத்தஆலா அவர்கள் மீது சுமத்தியிருந்தான் என்பதை அவர் பற்றிய அல்-குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன.

'எமது அத்தாட்சிகளைக் கொண்டு மூஸாவை பிர்அவ்னிடமும், அவனது கூட்டத்தாரிடமும் அனுப்பினோம். அவர் அவர்களிடம் நான் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் என்று கூறினார்' (சுஹ்ருப் : 46) என்ற வசனம் எத்திவைத்தல் என்ற பொறுப்பை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த விதம் பற்றி பேசுகின்றது.

'நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கி அவருக்குத் உதவியாளராக அவரது சகோதரர் ஹாரூனையும் ஆக்கினோம்' (புர்கான் : 35) என்ற வசனம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஷரீஅத் வழங்கப்பட்டமையையும், அதை நடைமுறைப்படுத்துவதில் உதவி செய்ய ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை உதவியாளராக ஆக்கியதையும் உணர்த்துகின்றது. இவ்வசனத்தில் அல்லாஹூத்தஆலா ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறிக்க 'வஸீர்' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளமை அவதானிக்கத்தக்கது. இச் சொல் சமகாலத்தில் அமைச்சர் என்ற அர்தத்தில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும் ஒரு விடயத்தைச் செயற்படுத்துவதில் இன்னொருவருக்கு உதவியாளராக இருத்தல் என்ற கருத்திலேயே ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்டது. எனவே ஏகத்துவத்தை எத்திவைத்தல் மட்டுமன்றி ஷரீஅத்தை சமூகத்தில் நடைமுறைப்படுத்தல் என்ற பொறுப்பும் மூஸா அலைஹிஸ்ஸலாம் மீது சுமத்தப்பட்டிருந்தமையை இவ்வசனம் சுட்டிக்காட்டுகின்றது.

'முன்னரும் நாம் வேதனைப் பட்டோம். நீர் அனுப்பப்பட்ட பின்னரும் நாம் வேதனைக்குள்ளாக்கப்படுகின்றோம் என்று பனூ இஸ்ரவேலர்கள் சொன்ன போது, மூஸா 'உங்களின் இரட்சகன் உங்கள் எதிரிகளை அழித்து உங்களைப் பூமியின் பிரதிநிதிகளாக்கி பின்னர் நீங்கள் எவ்வாறு செயற்படுகின்றீர்கள் என்பதை அவதானிக்கக் கூடும்' (அஃராப் :128). இவ்வசனம் மூஸா அலைஹிஸ்ஸலாம் பனூ இஸ்ரவேலர்களை சமூக உருவாக்கப் பணிக்காக அழைத்துச் சென்ற சமயம் அச் சமூகம் பொறுமையிழந்த போது கூறப்பட்ட ஆறுதல் வார்த்தைகள் என்பதை பர்சான் நாநா நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இதன் மூலம் நாம் விளங்கிக் கொள்வதென்னவென்றால் நபிமார்களின் தஃவா - எத்திவைத்தல், அல்லாஹ்வின் விருப்பு வெறுப்புக்களை மக்களுக்கு கற்றுக் கொடுத்து, நடைமுறைப்படுத்தல், அந்த சட்டங்களின் அடிப்படையில் ஒரு தலைமைத்துவத்தின் கீழான சமூக அமைப்பொன்றை உருவாக்கல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது என்பதாகும். இதில் மூன்றாவது பொறுப்பு குறிப்பிட்ட சில நபிமார்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்தது, ஏனைய இரு பொறுப்புக்களும் எல்லா நபிமார்களுக்கும் விதியாக்கப்பட்டிருந்தது. (Islamicuprising)

Home        Sri Lanka Think Tank-UK (Main Link)

Sunday 15 May 2011

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது - பகுதி 03

இஸ்லாமிய அரசிற்கு எதிராக பிரிட்டன் மேற்கொண்ட சதித்திட்டங்கள்


சவூதி ஆட்சியாளர் பிரிட்டன் அரசின் விசுவாசமிக்க கங்காணி என்பதை கிலாஃபா அரசும் ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற மேற்கத்திய வல்லரசுகளும் நன்கு அறிந்திருந்தன. மேலும் சவூதி ஆட்சியாளர், பிரிட்டன் அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் இயங்கினார் என்பதும் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.

சவூதி ஆட்சியாளருக்கு அளித்துவந்த ஆதரவை பிரிட்டன் ஒரு போதும் மறைவாக வைத்திருக்கவில்லை. மேலும் போருக்கு தேவையான பெருமளவு ஆயுதங்களையும் போர்ச்செலவினங்களுக்கு தேவையான கணிசமான பணத்தையும் பிரிட்டன், இந்தியா வழியாக சவூதிக்கு அனுப்பி வைத்தது. ஆகவே மற்ற ஐரோப்பிய அரசுகள், குறிப்பாக ஃபிரான்ஸ் அரசு வஹ்ஹாபி இயக்கத்தை எதிர்த்தது. ஏனெனில் வஹ்ஹாபிகளை பிரிட்டன் அரசு பின்னணியில் நின்று இயக்கிவந்தது. கிலாஃபா அரசு வஹ்ஹாபிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு முயற்சி மேற்கொண்டும் அதை நிறைவேற்ற இயலவில்லை. மதினாவிலும் பாக்தாதிலும் இருந்த கிலாஃபா அரசின் ஆளுநர்களால் வஹ்ஹாபிகளின் ஆக்கிரமிப்பை தடுக்க முடியவில்லை.

இதன் விளைவாக வஹ்ஹாபிகளுக்கு எதிராக ஒரு வலுவான படையை அனுப்பி வைக்கும்படி எகிப்திலுள்ள தனது ஆளுநர் முஹம்மது அலிக்கு கிலாஃபா அரசு கட்டளையிட்டது. முதலில் இதற்கு அவர் தயக்கம் காட்டினார். ஏனெனில் உண்மையாக அவர் ஃபிரான்ஸ் அரசின் கங்காணியாக இருந்துவந்தார். அதிகாராத்தை பலவந்தமாக கைப்பற்றும் அவரது முயற்சிக்கு ஃபிரான்ஸ்உதவியாக இருந்தது. பின்னர், கிலாஃபா அரசை நிர்பந்தம் செய்து அவரது அதிகாராத்தை அங்கீகரிக்கும்படி செய்தது. ஃபிரான்ஸ் அரசுடன் செய்திருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் அதன் தூண்டுதலின் அடிப்படையிலும் துருக்கி சுல்தானின் (கலீஃபா) கட்டளையை ஏற்றுக்கொண்ட முஹம்மது அலி தனது மகன் தவ்ஸுன் தலைமையில் கி.பி. 1811ல் வஹ்ஹாபிகளுக்கு எதிராக படையை அனுப்பி வைத்தார். 

எகிப்திலிருந்து புறப்பட்ட இராணுவத்திற்கும் வஹ்ஹாபிகளுக்கும் மத்தியில் பல யுத்தங்கள் நடைபெற்றன. இந்த யுத்தங்களின் முடிவில் எகிப்திய இராணுவம் கி.பி. 1812ல் மதினாவை வெற்றிகொண்டது. இதன்பின்னர், முஹம்மது அலி தனது மற்றொரு மகன் இப்ராஹிமை கி.பி. 1816ல் கெய்ரோவிலிருந்து அனுப்பி வஹ்ஹாபிகளுக்கு எதிராக போரிடும்படி செய்தார். இப்ராஹிம் தலைமையில் போரிட்ட எகிப்து இராணுவம் வஹ்ஹாபிகளை முறியடித்தது. அவர்கள் தங்கள் தலைநகர் அல்திரிய்யாவுக்கு சென்று தங்களை பாதுகாத்துக் கொண்டார்கள். இதன்பின்னர் கி.பி. 1818ல் இப்ராஹிம் அல்திரிய்யாவை கைப்பற்றினார். கோடைக்காலம் முழுவதும் நிகழ்ந்த யுத்தமானது கி.பி. 1818 செப்டம்பர் 9ந்தேதியில் வஹ்ஹாபிகள் சரணடைந்ததுடன் முடிவுற்றது. இப்ராஹிமின் இராணுவம் அல்திரிய்யாவை துவம்சம் செய்தது. அல்திரிய்யா நகரத்தின் கட்டமைப்பில் எதுவொன்றையும் விட்டு வைக்காமல் முற்றாக சூறையாடியது. இஸ்லாமிய அரசுக்கு எதிரான பிரிட்டனின் திட்டமிட்ட நடவடிக்கை இதன் மூலம் தற்காலிகமாக முடிவுற்றது.

இஸ்லாமிய அரசை தாக்குவதற்கு ஃபிரான்ஸ் மேற்கொண்ட முயற்சி

தனது கங்காணியாக செயல்பட்டு வந்த எகிப்து ஆளுநர் முஹம்மது அலியின் துணைகொண்டு இஸ்லாமிய அரசின் முதுகில் குத்துவதற்கு ஃபிரான்ஸ் முயற்சி மேற்கொண்டது. சர்வதேச அளவிலும் உள்நாட்டு விவகாரங்களிலும் முஹம்மது அலியை ஃபிரான்ஸ் அரசு பகிரங்கமாக ஆதரித்து வந்தது. இதன்விளைவாக அவர் கலீஃபாவுடன் பிளவுபட்டு அவருக்கு எதிராக யுத்த பிரகடனம் செய்தார். கி.பி. 1831ல் ஷாம் பகுதியை கைப்பற்றும் நோக்கத்துடன் முஹம்மது அலி படையெடுத்தார். பாலஸ்தீனம், லெபனான், சிரியா ஆகியவற்றை ஆக்கிரமித்த பின்னர் அனதூலியாவை ஆக்கிரமிப்பதற்கு துவங்கினார். இந்நிலையில் முஹம்மது அலியின் படைகளுக்கு எதிராக போர் செய்வதற்காக ஒரு பலம் வாய்ந்த இராணுவத்தை கலீஃபா அனுப்பிவைத்தார். ரஷ்யாவும் ஜெர்மனியின் இரண்டு அரசுகளும் (கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி) முஹம்மது அலிக்கு எதிராக திரும்பின. 

கி.பி. 1840 ஜூலையில் பிரிட்டன், ரஷ்யா மற்றும் ஜெர்மனியின் இரண்டு அரசுகள் நான்முக கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டன. இதனடிப்படையில் உஸ்மானிய அரசின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பது என்றும், சிரியாவை விட்டு முஹம்மது அலியை வெளியேற்றுவது என்றும் தீர்மானம் செய்தன. ஐரோப்பிய நாடுகள் இத்தகைய ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டதால் கலீஃபாவுக்கு ஆதரவாக சர்வதேச அரசியல் சூழல் மாறியது. இந்த அரசியல் பலத்துடன் முஹம்மது அலியுடன் போர் செய்து அவரை சிரியாவிலிருந்தும் பாலஸ்தீனத்திலிருந்தும் லெபனானிலிருந்தும் கலீஃபா வெளியேற்றினார். எனினும் முஹம்மது அலி எகிப்து திரும்பியவுடன் அவர் தொடர்ந்து எகிப்தின் ஆளுநராக இருப்பதற்கு கலீஃபா சம்மதித்தார். (விடுதலை)

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது'  என்பதை மிக ஆழமாக ஆராயும், காலம் சென்ற பலஸ்தீனிய அறிஞர் அஷ் ஷேக் அப்துல் கதீம் ஸல்லும் (ரஹ்) எழுதிய 'கைப குதிமத்துல் கிலாஃபா' என்ற அரபு நூலின் தமிழாக்கத்தை இங்கே பகுதி பகுதியாக வழங்குகிறோம்!

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது - பகுதி 02

இஸ்லாமிய அரசிற்கு எதிராக ஐரோப்பிய அரசுகள் மேற்கொண்ட சதித்திட்டங்கள்

 முஸ்லிம்களின் நிலப்பரப்புகளை பங்கீடு செய்துகொள்வது தொடர்பாக காஃபிர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடுகள் இருந்துவந்த போதிலும் இஸ்லாத்தை அழிக்கும் சிந்தனையில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தை கொண்டிருந்தார்கள். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அவர்கள் பல்வேறு வழி முறைகளை கையாண்டார்கள். துவக்கத்தில் முஸ்லிம்களை சிந்தனை ரீதியாக பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு தேசியவாதம் (Nationalism) தேசப்பற்று (Patriotism) மற்றும் விடுதலை (Freedom) ஆகிய குஃப்ர் சிந்தனைகளை அவர்களிடம் உருவாக்கினார்கள். மேலும் இஸ்லாமிய அரசிற்கு எதிராக மக்களை தூண்டிவிட்டதோடு பணத்தையும் ஆயுதத்தையும் அதற்காக விநியோகம் செய்தார்கள். செர்பியாவிலும், கிரேக்கத்திலும் இத்தகைய சதிச்செயல்களை அரங்கேற்றியதன் மூலம் ஐரோப்பிய அரசுகள் இஸ்லாமிய அரசின் முதுகில் குத்தும் இழிசெயலை மேற்கொண்டன. கி.பி. 1798ல் ஃபிரான்ஸ் எகிப்து பிராந்தியத்தை ஆக்கிரமித்தது. பின்னர் பாலஸ்தீனத்தின் மீது படையெடுத்து அதை ஆக்கிரமிப்பு செய்துகொண்டது. இஸ்லாமிய அரசுக்கு மரணஅடி கொடுக்கும் நோக்கத்தோடு ஷாம் பகுதி முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்ய அது திட்டமிட்டது. ஆனால் அடுத்து நிகழ்ந்த யுத்தத்தில் தோல்வியை தழுவியதால் தான் ஆக்கிரமிப்பு செய்துவந்த பகுதி களை இஸ்லாமிய அரசிடம் ஒப்படைத்துவிட்டு எகிப்திலிருந்து வெளியேறியது. 

வஹ்ஹாபிகளின் தோற்றமும் சவூதி அரசின் உருவாக்கமும் 

இஸ்லாமிய அரசிற்குள் இருந்தவாறு அதன்மீது தாக்குதல் மேற்கொள்ளும் விதமாக தனது கங்காணி (Agent) அப்துல் அஜீஸ் இப்னு முஹம்மது இப்னு சவூது மூலமாக பிரிட்டன் முயற்சி மேற்கொண்டது. இக்காலகட்டத்தில் இஸ்லாமிய அ ரசிற்கு எதிராக வஹ்ஹாபிகள் ஓர் அரசை உருவாக்கி, அதன் ஆட்சியாளர்களாக முஹம்மது இப்னு சவூதும் பின்னர் அவரது மகன் அப்துல் அஜீஸும் இருந்துவந்தார்கள். இவர்களுக்கு பிரிட்டன் ஆயுதங்களும் பணமும் வழங்கியது. பிரிவினை வாதத்தின் அடிப்படையில் இவர்கள் கலீஃபாவின் அதிகாரத்திற்கு உட்பட்ட இஸ்லாமிய நிலப்பரப்புகளை கைப்பற்றிக் கொள்வதற்கு திட்டம் வகுத்து செயல்பட்டார்கள். அவர்கள் கலீஃபாவுக்கு எதிμõக ஆயுதமேந்தி இஸ்லாமிய இμõணுவத்திற்கு எதிராக போர் செய்தார்கள்! அதாவது அமீருல் மூஃமினீனின் படைகளுக்கு எதிராக போர் செய்தார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு ஆயுத தளவாடங்களை வழங்கி இஸ்லாமிய அரசிற்கு எதிராக கலகம் புரிவதற்கு பிரிட்டன் உறுதுணையாக இருந்தது. இஸ்லாமிய அரசின் கீழிருந்த நிலப்பரப்புகளை கைப்பற்றி அவற்றில் வஹ்ஹாபி மத்ஹப் அடிப்படையில் உள்ள ஆட்சியை நிறுவிடவும் தங்கள் மத்ஹபிற்கு முரண்படும் மற்ற மத்ஹபுகளை பலவந்தமாக வீழ்த்திடவும் வஹ்ஹாபிகள் விரும்பினார்கள். இதனடிப்படையில், அவர்கள் கி.பி. 1788ல் குவைத் பகுதியை சூறையாடி அதை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். பிறகு வடக்குமுகமாக முன்னேறி பாக்தாக் நகரை கைப்பற்றிக் கொண்டார்கள். கர்பலாவையும் அதில் அமைந்துள்ள ஹுஸைன் அவர்களின் கபுரையும் கைப்பற்றி, முஸ்லிம்கள் ஜியாரத் செய்வதை தடைசெய்யவும் அதை அழித்துவிடவும் திட்டமிட்டார்கள். இதன்பின்னர் மக்காவின் மீது தாக்குதல் தொடுத்து கி.பி. 1803ல் அதை கைப்பற்றிக் கொண்டார்கள். 

கி.பி. 1804ம் ஆண்டு துவக்கத்தில் மதினா மாநகர் அவர்களின் கைகளில் வீழ்ந்தது. அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறையை நிழலிட்டுக் கொண்டிருந்த பெரும் மண்டபத்தை உடைத்தெறிந்துவிட்டு அதில் பதிக்கப்பட்டிருந்த இரத்தின கற்களையும் பொன் ஆபரணங்களையும் பெயர்த்து எடுத்துவிட்டார்கள். ஹிஜாஸ் பகுதி முழுவதையும் கைப்பற்றிய பின்னர் ஷாமை நோக்கி அவர்கள் படையெடுத்தார்கள். கி.பி. 1810ல் ஹிம்ஸ் பகுதியை நெருங்கியவுடன், இரண்டாம் முறையாக டமாஸ்கஸ் நகரைத் தாக்கியதோடு நஜஃப் பகுதியையும் தாக்கினார்கள். டமாஸ்கஸ் நகரத்தில் நிலைகொண்டிருந்த இஸ்லாமிய இராணுவம் வீரத்துடன் போராடி தன்னை தற்காத்துக் கொண்டது. டமாஸ்கஸ் நகரை கைப்பற்றுவதற்கு தாக்குதல் மேற்கொண்ட வஹ்ஹாபிகள் அதே சமயத்தில் வடக்குமுகமாக முன்னேறி அலிப்போ பிராந்தியம் வரையுள்ள சிரியாவின் பெரும்பாலான பகுதிகளில் தங்கள் அதிகார எல்லையை விரிவாக்கிக்கொண்டார்கள். 

பிரிட்டனின் தூண்டுதலின் அடிப்படையில்தான் வஹ்ஹாபிகள் தங்களின் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்பது தெளிவான உண்மையாகும். ஏனெனில் முஹம்மது இப்னு சவூது பிரிட்டனின் கங்காணியாக இயங்கிவந்தார். வஹ்ஹாபி மத்ஹப் இஸ்லாத்தில் ஒரு மத்ஹபாகவும் அதை உருவாக்கிய முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ஒரு முஜ்தஹிதாகவும் இருந்த காரணத்தால் வஹ்ஹாபிகள் தங்கள் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு அதை தவறாக பிர யோகித்து வந்தார்கள். இஸ்லாமிய அரசிற்கு எதிராக கலகம் செய்யும் தங்களின் அரசியல் செயல்பாடுகளுக்கும், மற்ற மத்ஹபுகளுடன் மோதல் ஏற்படுத்துவதற்கும், பிரிவினைவாதத்தின் அடிப்படையில் உஸ்மானிய அரசுடன் போர் செய்வதற்கும் இந்த மத்ஹபை வஹ்ஹாபிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். வஹ்ஹாபிகளின் இந்த செயல்பாடுகள் குறித்து அந்த மத்ஹபை பின்பற்றி வந்த முஸ்லிம்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் சவூதியின் ஆட்சியாளர்களுக்கும் அதில் வசித்துவந்த அரபு மக்களுக்கும் இது முழுமையாக விளங்கியிருந்தது. ஏனெனில் பிரிட்டன் அரசுக்கும் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபிற்கும் மத்தியில் எந்தவிதமான தொடர்பும் இருந்துவரவில்லை. மாறாக பிரிட்டனுக்கும் அப்துல் அஜீஸ் இப்னு முஹம்மது இப்னு சவூதுக்கும் அதன் பின்னர் அவரது மகன் சவூதுக்கும் நேரடியான உறவு இருந்துவந்தது. ஹன்பலி மத்ஹபை பின்பற்றி வந்த முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் பல்வேறு விஷயங்களில் இஜ்திஹாது மேற்கொண்டு வந்தார். இந்த விஷயங்களில் மற்ற மத்ஹபுகளை பின்பற்றி வந்த முஸ்லிம்கள் தன்னுடைய அபிப்பிராயங்களுக்கு முரண்படுவதாக முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் கருதினார். எனவே தனது அபிப்பிராயத்தை நோக்கி அவர் மக்களை அழைக்கத் துவங்கினார்.  தனது அபிப்பிராயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி மேற்கொண்டதோடு மற்ற இஸ்லாமிய அபிப்பிராயங்களை கடுமையாக தாக்கினார். பல்வேறு அறிஞர்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. இஸ்லாமிய பிரதேசத்தின் பல்வேறு அமீர்களும், அறிஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அல்லாஹ்வின் வேதத்திலிருந்தும் அல்லாஹ்வின் தூதரின் சுன்னாவிலிருந்து தாங்கள் விளங்கிக் கொண்டதற்கு முரண்பாடாக முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் அபிப்பிராயங்கள் இருப்பதாக கருதினார்கள். உதாரணமாக, அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறையை ஜியாரத் செய்வது பாவமான செயல் என்றும் ஹராம் என்றும் அவர் கூறிவந்தார். மேலும் எவர் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறையை ஜியாரத் செய்ய பிரயாணம் மேற்கொள்கிறாரோ அவர் தொழுகையில் கஸர் செய்யக்கூடாது; ஏனெனில் ஒரு பாவமான செயலை மேற்கொள்வதற்காக பிரயாணம் மேற்கொள்கிறார் என்று கூறும் அளவுக்கு முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் துணிந்தார். அல்லாஹ்வின் தூதர் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு ஹதீஸை தனது அபிப்பிராயங்களுக்கு ஆதாரமாக அவர் எடுத்துக் காட்டினார். 

""மூன்று மஸ்ஜிதுகளை தரிசிப்பதற்காக மட்டுமே பிராயாணம் மேற்கொள்ள வேண்டும்; அவை மஸ்ஜிதுன்னபவீ, மஸ்ஜிதுல் ஹரா ம் மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகியவையாகும்.''(புஹாரி)

 இந்த மூன்று மஸ்ஜிதுக்கு பிராயாணம் மேற்கொள்வதைத் தவிர்த்து மற்றவைகளுக்கு பிμயாணம் செய்வது ஹராம் என்று இந்த ஹதீஸிலிருந்து முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் விளங்கிக் கொண்டார். ஆகவே ஒருவர் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறையை ஜியாராத் செய்ய பிராயாணம் மேற்கொள்வாரேயானால் அது மூன்று மஸ்ஜிதுகளுக்கு பிராயாணம் மேற்கொள்வதில் அடங்காது என்பதால் அது ஹராமானதும் பாவமான செயலுமாகும் என்று அவர் கூறினார். அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறையை ஜியாராத் செய்வது சுன்னா என்றும் நன்மையான செயல் என்று அதற்கு நற்கூலி உண்டு என்றும் மற்ற மத்ஹபுகள் கூறுகின்றன. 

 அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: ""கடந்த காலத்தில் கப்ருகளை ஜியாராத் செய்வதை நான் தடைசெய்திருந்தேன். ஆனால், இப்போது நீங்கள் கப்ருகளுக்கு சென்று வராலாம்.'' (முஸ்லிம்) 

பொதுவாக மண்ணறைகளுக்கு சென்று வருதல் அனுமதிக்கப் பட்டிருக்கும்போது அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறைக்கு செல்வது கூடும் என்பதற்கு இந்த ஹதீஸும் மற்ற சில ஹதீஸ்களும் ஆதாராமாக இருக்கின்றன. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் மஸ்ஜிதுகளை தரிசிப்பதற்கு பிரயாணம் மேற்கொள்வது தொடர்பான ஹதீஸை ஆதாராமாக காட்டுகிறார் என்றும் மஸ்ஜிதுகளுக்கு பிராயாணம் செய்தல் என்ற விஷயத்தோடு மட்டும் பொருந்தக் கூடியது என்றும் மற்ற விஷயங்களுக்கு இதை ஆதாராமாக கொள்ள முடியாது என்றும் மற்ற மத்ஹபுகளை பின்பற்றுபவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹதீஸைப் பொறுத்தவரை  பொதுவான ஹதீஸ் அல்ல. மாறாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி கூறும் ஹதீஸாகும். அதாவது, ""மூன்று மஸ்ஜிதுகளை தரிசிப்பதற்கு மட்டுமே பிரயாணம் மேற்கொள்ள வேண்டும்'' என்று கூறும் ஹதீஸ் பியாணம் செய்தல் என்ற விஷயத்தோடு மட்டும் தொடர்புடையது. எனவே இஸ்தான்பூல் நகரத்திலுள்ள அயாஸோஃபியா மஸ்ஜிதையோ அல்லது டமாஸ்கஸ் நகராத்திலுள்ள உமய்யா மஸ்ஜிதையோ தரிசிப்பதற்கு பிராயாணம் மேற்கொள்வது ஹராமாகும். ஏனெனில் இத்தகைய பிரயாணத்தை மேற்கொள்வது மூன்று மஸ்ஜிதுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வரையறை செய்துள்ளார்கள். எனவே வேறெந்த மஸ்ஜிதுகளை தரிசிப்பதற்கு பிரயாணம் மேற்கொள்வது முஸ்லிம்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வியாபாரம் செய்யும் நோக்கத்துடனோ அல்லது நண்பர்களையும் உறவினர்களையும் சந்திக்கும் நோக்கத்துடனோ அல்லது சுற்றுலா செல்லும் நோக்கத்துடனோ அல்லது இதுபோன்ற எத்தகைய நோக்கங்களுக்காகவோ இந்த இடங்களுக்கு பிராயாணம் மேற்கொள்வதற்கு அனுமதியுண்டு. ஆகவே, மூன்று மஸ்ஜிதுகள் உள்ள இடத்திற்கு அல்லது மற்ற இடங்களுக்கு பிராயாணம் செய்யக்கூடாது என்று திட்டவட்டமான மறுப்பு எதையும் இந்த ஹதீஸ் தெரிவிக்கவில்லை, மாறாக நன்மையை நாடி மூன்று மஸ்ஜிதுகளை தவிர்த்து மற்றவைகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்வதை மட்டுமே இந்த ஹதீஸ் தடைசெய்கிறது. இதுபோலவே முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் அபிப்பிμõயம் குர்ஆன், சுன்னா ஆகியவற்றிலிருந்து தாங்கள் விளங்கிக் கொண்டதற்கு முரண்பாடாக இருப்பதாக மற்ற மத்ஹபுகளை பின்பற்றுகிறவர்கள் எண்ணினார்கள். ஆகவே அவருக்கும் மற்றவர்களுக்கும் கருத்து வேறுபாடு அதிகரித்தபோது முஹம்மது அப்துல் வஹ்ஹாப் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 

எனவே, கி.பி. 1740இல் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அன்ஸா கோத்திர மக்களின் ஷேக் அமீர் முஹம்மது இப்னு சவூதிடம் புகலிடம் தேடிக்கொண்டார். அல்திரிய்யாவில் இருந்த உயய்னாவின் ஷேக்கிற்கும் அன்ஸாவின் ஷேக்கான அமீர் முஹம்மது இப்னு சவூதுக்கும் மத்தியில் சமூகமான உறவு இல்லாமல் இருந்து வந்தது. உயய்னாவிலிருந்து ஆறு மணி நேர பயண தூரத்தில் அல்திரிய்யா நகரம் அமைந்திருந்தது. அன்ஸாவின் ஷேக் முஹம்மது இப்னு, சவூத் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாவை நன்முறையில் வரவேற்று உபசரித்தார். அல்திரிய்யா மற்றும் அதனை சூழ்ந்துள்ள பகுதிகளில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் தனது அபிப்பிராயங்களையும் சிந்தனைகளையும் பிரச்சாரம் செய்வதற்கு துவங்கினார். குறிப்பிட்ட சில காலத்திற்குப் பின்னர் அவருடைய சிந்தனைகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும் ஆதரவு கிடைத்தது. சில ஆதரவாளர்கள் அவருக்கு கிடைத்தார்கள். அன்ஸாவின் ஷேக் அமீர் முஹம்மது இப்னு சவூது இந்த சிந்தனைகளில் ஈர்க்கப்பட்டு முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் ஆதாரவாளராக மாறினார். கி.பி. 1847ல் அமீர் முஹம்மது இப்னு சவூது, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் சிந்தனைகளையும் அபிப்பிராயங்களையும் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்தார். மேலும் இந்த சிந்தனைகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும் ஆதரவளிப்பதாகவும் உறுதிப்பிராமாணம் செய்தார். இத்தகைய ஒரு கூட்டணியின் அடிப்படையில், வஹ்ஹாபி இயக்கம் உருவாக்கம் பெற்றது. மேலும் பிரச்சாரத்தின் மூலமும் ஆட்சி அதிகாரத்தின் மூலமும் அதற்காக மக்களிடம் அழைப்பு விடுத்து அதன் சட்டங்களை விளக்கிக் கூறினார். அதே வேளையில் தனது அதிகாரத்திற்கு கீழிருக்கும் மக்களிடம் முஹம்மது இப்னு சவூது சட்டங்களை நடைமுறைப்படுத்தினார். தஃவாவின் மூலமாகவும் அதிகாரத்தின் மூலமாகவும் வஹ்ஹாபி இயக்கம் அல்திரிய்யாவிலும் அதற்கு அடுத்துள்ள பகுதிகளிலும் பரவியது. அதில் வாழ்ந்து வந்த பல கோத்திரங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். அதே வேளையில் அமீர் முஹம்மது இப்னு சவூதின் அதிகாரமும், இந்த பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டது. இறுதியாக பத்து வருட காலத்தில் அமீர் முஹம்மது இப்னு சவூதின் அதிகாரமும் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் மத்ஹபும் முப்பது சதுர மைல் அளவுக்கு பரவியது. வஹ்ஹாபி இயக்கம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் தஃவா மூலமும் அன்ஸா மக்களின் ஷேக்கான அமீர் முஹம்மது இப்னு சவூதின் அதிகாரத்தின் மூலமும் பரவியபோது இதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவுமில்லை; இதற்கு எதிராக செயல்படவுமில்லை. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபை உயய்னாவை விட்டு வெளியேற்றிய அல் இஹ்ஸாவின் அமீரும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கி.பி. 1757வரை அவர் வஹ்ஹாபி இயக்கத்திற்கு எதிராக தனது படைகளை திரட்டவில்லை. எனினும் அதன் பின்னர் அமீர் முஹம்மது இப்னு சவூது அவரை வெற்றிகொண்டு அவருடைய அதிகாரத்தை கைப்பற்றினார். முடிவாக, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் மத்ஹப் சட்டங்களின் அடிப்படையிலும் முஹம்மது இப்னு சவூத் அதிகாரத்தின் அடிப்படையிலும் நிறுவப்பட்ட அன்ஸா இன மக்களின் ஆட்சி அல்திரிய்யாவிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் அல்இஹ்ஸாவிலும் நிறுவப்பட்டது. இவ்வாறாக இந்த பிராந்தியங்களில் வஹ்ஹாபி மத்ஹப் மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அல் இஹ்ஸா ஆட்சியாளருடன் நிகழ்ந்த போரில் அமீர் முஹம்மது இப்னு சவூது வெற்றிபெற்றதால் அவரது அதிகாரம் முறியடிக்கப்பட்டு அவரது நிலப்பரப்புகள் கைப்பற்றப்பட்டன. இந்த தாக்குதலுக்குப் பின்னர் வஹ்ஹாபி இயக்கம் மேலும் பரவாமல் நின்றுபோனது. இதன் பின்னர், அந்த இயக்கம் தொடர்ந்து பரவியதாகவோ அல்லது மேற்கொண்டு எந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டதாகவோ எந்த தகவல்களும் அறியப்படவில்லை. மாறாக அந்த பகுதிக்குள் மட்டும் அந்த இயக்கம் சுருண்டு கிடந்தது. இந்த தருணத்தில் அமீர் முஹம்மது இப்னு சவூத் தனது போர் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டதன் விளைவாக இந்த பகுதியின் எல்லைக்குள் வஹ்ஹாபி மத்ஹப் சுருட்டப்பட்டதோடு அந்த இயக்கம் தேக்கத்திற்கும் செயலற்ற நிலைக்கும் உள்ளானது. 

கி.பி. 1765இல் அமீர் முஹம்மது இப்னு சவூது மரணம் எய்தினார். அதன் பின்னர் அன்ஸா கோத்திரத்தின் ஷேக் பதவியை அவரது மகன் அப்துல் அஜீஸ் அடைந்து கொண்டார். அப்துல் அஜீஸ் தனது தந்தையாரின் அடிச்சுவடுகளை பின்பற்றி அவரது அதிகாரத்தின் கீழுள்ள பகுதிகளை ஆட்சிசெய்தார். எனினும் வஹ்ஹாபி இயக்கத்திற்கான எத்தகைய செயல்பாடுகளையும் அவர் மேற்கொள்ள வில்லை என்பதோடு அல்திரிய்யாவை சுற்றியுள்ள பகுதி களில் தனது அதிகாரத்தை விரிவுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. ஆகவே வஹ்ஹாபி இயக்கம் செயலற்ற நிலையில் இருந்தது. இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தோ அல்லது அது ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தோ அல்லது இந்த கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பு பற்றிய அச்சத்தைக் குறித்தோ எந்த தகவலும் இல்லை. எனினும் வஹ்ஹாபி இயக்கம் தோற்றம் பெற்ற 41 ஆண்டு களுக்கு பின்னர் கி.பி. 1747லிருந்து கி.பி. 1788 வரையுள்ள 31 ஆண்டுகளின் தேக்க நிலைக்குப் பின்னர் திடீரென்று அதன் செயல்பாடுகள் மறுபடியும் துவக்கப்பட்டன. தனது மத்ஹபை பிரச்சாரம் செய்வதற்கு அந்த இயக்கம் ஒரு புதிய வழியைக் கையாண்டது. அந்த இயக்கம் பரவியிருந்த எல்லைகளை தாண்டி இஸ்லாமிய அரசின் அனைத்து நிலப்பரப்புகளையும் மற்ற வல்லரசுகளின் நிலப்பரப்புகளிலும் விரிவான முறையிலும் மிகவும் அழுத்தமான விதத்திலும் மேற்கொள்ளப்பட்ட வலுவான பிரச்சாரத்தின் மூலம் அது அறிமுகப்பட்டது. இதன் விளைவாக அண்டை நிலப்பரப்புகளில் பிரச்சினைகளை தோற்றுவித்ததோடு இஸ்லாமிய அரசின் அனைத்து பகுதிகளிலும் அமைதியின்மையையும் பதட்டத்தையும் இந்த இயக்கம் ஏற்படுத்தியது.

 கி.பி. 1787ல் பரம்பரை வாரிசுமுறையில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளு ம் ஆட்சியமைப்பை அப்துல் அஜீஸ் ஏற்படுத்தினார். இதன் மூலம் அப்துல் அஜீஸின் மகன் சவூது ஆட்சி அதிகாμத்தை பெற்றுக் கொள்வதற்கு வழி ஏற்பட்டது. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் தலைமையில் ஒரு பெருங்கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் அப்துல் அஜீஸ் உரையாற்றினார். அப்போது ஆட்சியதிகாரம் தனது குடும்பத்திற்கு மட்டும் உரியது என்றும் தனக்குப் பின்னர் ஆட்சியதிகாரத்தை அடைந்து கொள்ளும் உரிமை தனது மகனுக்கு மட்டுமே உரியது என்றும் பிரகடனம் செய்தார். மேலும் தனது மகன் சவூதை ஆட்சியதிகாரத்திற்கு வாரிசாகவும், அவர் பிரகடனப்படுத்தினார். இவ்வாறாக முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் தலைமையில் ஒன்று திரண்டிருந்த இந்த மக்கள் கூட்டம் அப்துல் அஜீஸின் அறிவிப்பை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது. எனவே ஒரு கோத்திரத்தின் ஆட்சி தலைமை என்பதைவிட பல்வேறு கோத்திர மக்களை உள்ளடக்கிய ஓர் அரசின் ஆட்சித் தலைமை ஒன்று இங்கு உருவாக்கப்பட்டது. இது குறித்து அறியப்படுவது என்னவென்றால் வஹ்ஹாபி மத்ஹபின் தலைமைத்துவமும் பரம்பரை வாரிசு முறையில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் குடும்பத்தினருக்கு மட்டும் உரியது என்று உறுதி செய்யப்பட்டது. ஆட்சி அதிகாரத்தின் தலைமைத்துவமும் வஹ்ஹாபி மத்ஹபின் தலைமைத்துவமும் பரம்பரை வாரிசுரிமையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து இந்த இயக்கம் தனது செயல்பாடுகளை மறுபடியும் துவக்கியது. ஆக்கிரமிப்புகளும் ஆட்சி எல்லைகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. வஹ்ஹாபி மத்ஹபை பரப்புவதற்கு இந்த போர்கள் மேற்கொள்ளப்பட்டன. கி.பி. 1788ல் அப்துல் அஜீஸ் பெரும் இராணுவ தாக்குதலை மேற்கொள்வதற்காக ஆயுதங்களையும் போர்ப்படைகளையும் பெருமளவில் தயார் செய்தார். குவைத் மீது தாக்குதல் தொடுத்து அதை கைப்பற்றினார். உஸ்மானிய பேரரசின் அதிகாரத்திலிருந்துவந்த குவைத்தை கைப்பற்றுவதற்கு பிரிட்டன் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. ஜெர்மனி, ரஷ்யா மற்றும் ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் கடுமையாக எதிர்த்ததாலும் கிலாஃபா அரசு எதிரிகளுக்கு எதிராக கடுமையான தற்காப்பு யுத்தம் மேற்கொண்டதாலும் பிரிட்டனால் குவைத்தை கைப்பற்ற இயலவில்லை. இவ்வாறாக வஹ்ஹாபிகள் உஸ்மானிய கிலாஃபத்தின் அதிகாரத்திலிருந்து குவைத்தை துண்டித்து வடக்கு எல்லையில் தனது பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டார்கள். வஹ்ஹாபிகள் அடைந்த இந்த வெற்றி குறித்து உஸ்மானிய அரசும் மேற்கத்திய அரசுகளும் மிகுந்த ஆச்சரியம் கொண்டன. வஹ்ஹாபிகள் மேற்கொண்ட இந்த யுத்தங்கள் ஆன்மீக எழுச்சி போன்ற தோற்றத்தை பெற்றிருந்தாலும் உண்மையாக அவை இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டன. பல ஆண்டுகள் செயலற்ற நிலையிலிருந்த வஹ்ஹாபிகள் திடீரென்று தங்கள் செயல்பாடுகளை துவக்கியதன் பின்னணி இதுதான். அவர்கள் மற்ற மத்ஹபுகளை அகற்றிவிட்டு வஹ்ஹாபி மத்ஹபை நிலைநாட்டுவதற்காக போர் மூலம் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டார்கள். அதிகாரத்தின் மூலமாக தங்கள் மத்ஹபை நிலைநாட்டுவதற்கு முயன்றார்கள். குவைத்தை தாக்கி அதை ஆக்கிரமிப்பு செய்வதிலிருந்து தங்கள் செயல்பாடுகளை அவர்கள் துவக்கினார்கள். இதன் பின்னர் இதுபோன்ற பல்வேறு ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டார்கள். இதனடிப்படையில் அண்டைநிலை பரப்புகளிலும் அராபிய தீபகற்பத்திலும், ஷாம் மற்றும் ஈராக் போன்ற பகுதிகளிலுள்ள உஸ்மானிய கிலாஃபத்தின் நிலப்பரப்புகளிலும் பெரும் தொல்லைகளையும் பெரும் துயரங்களையும் ஏற்படுத்தி வந்தார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக போர் புரிவதற்காகவும் தங்கள் மத்ஹபைத் தவிர்த்து மற்ற மத்ஹபுகளை பின்பற்றும் முஸ்லிம்களை தடுப்பதற்காகவும் தங்கள் வாட்களை சுழற்றினார்கள். கலீஃபாவுடன் போர் செய்து வஹ்ஹாபிகள் இஸ்லாமிய நிலப்பரப்புகளை கைப்பற்றிக் கொண்டார்கள். கி.பி. 1792ல் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் மரணமடைந்தபோது தனது தந்தை அப்துல் அஜீஸின் ஆட்சியதிகாரத்தை அவரது மகன் சவூது எவ்வாறு அடைந்து கொண்டாரோ அதே முறையில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் மகன், வஹ்ஹாபி மத்ஹபின் தலைமைப் பதவியை அடைந்து கொண்டார். இதன்பின்னர் சவூதி ஆட்சியாளர்கள் உஸ்மானிய கிலாஃபா அரசை தாக்கும் ஆயுதமாகவும் முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினைவாத போர்களை தூண்டும் கருவியாகவும் வஹ்ஹாபி மத்ஹபை ஆக்கிக்கொண்டு தங்கள் ஆட்சிப்பயணத்தை தொடர்ந்தார்கள். (விடுதலை)

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது'  என்பதை மிக ஆழமாக ஆராயும், காலம் சென்ற பலஸ்தீனிய அறிஞர் அஷ் ஷேக் அப்துல் கதீம் ஸல்லும் (ரஹ்) எழுதிய 'கைப குதிமத்துல் கிலாஃபா' என்ற அரபு நூலின் தமிழாக்கத்தை இங்கே பகுதி பகுதியாக வழங்குகிறோம்!

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது - பகுதி 01

இஸ்லாத்திற்கும் குஃப்ருக்கும் இடையிலான போராட்டம் 

இஸ்லாம் அருளப்பட்ட நாளிலிருந்து இஸ்லாமிய சிந்தனை களுக்கும் குஃப்ர் சிந்தனைகளுக்கும் மத்தியிலும் முஸ்லிம்களுக்கும் காஃபிர்களுக்கும் மத்தியிலும் போராட்டம் உருவாகிவிட்டது. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அனுப்பப்பட்ட துவக்க காலத்தில் இந்த போராட்டம் அறிவார்ந்த போட்டமாகவே (Intellectual struggle) இருந்து வந்தது. அதில் எத்தகைய ஆயுத போராட்டமும் இடம் பெறவில்லை. மதினா மாநகரில் இஸ்லாமிய அரசு நிறுவப் படும்  வரை இத்தகைய சூழலே நீடித்து வந்தது. இஸ்லாமிய அரசு நிறுவப்பட்ட பின்னர் இராணுவமும் அதிகார அமைப்பும் உரு வாக்கப்பட்டன. அதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர்  அவர்கள் அறிவார்ந்த போராட்டத்தை ஆயுதபோரட்டத்துடன் இணைத் தார்கள். இதைத் தொடர்ந்து ஜிஹாது தொடர்பான வசனங்கள் அருளப்பட்டன. காஃபிர்களுக்கு எதிரான முஸ்லிம்களின் போராட் டமும் தொடர்ந்தது. அறிவார்ந்த போராட்டத்துடன் இணைந்த இந்த இரத்தம் சிந்தும் ஆயுத போராட்டம் கியாமநாள் வரை தொடர்ந்து நடைபெறும் என்று அல்லாஹ்வின் தூதர்  அறிவித் திருக்கிறார்கள். அந்த நாள் வரும்போது அல்லாஹ்  பூமியையும் அதில் வசிப்பவர்களையும் சுவீகரித்துக் கொள்வான். இதன் காரணமாகத்தான் குஃபர் என்பது இஸ்லாத்தின் கடும்பகையாக இருந்து வருகிறது! இவ்வாறே இந்த உலகத்தில் குஃபர் இருக்கும்  வரை காஃபிர்கள் முஸ்லிம்களுக்கு எதிரியாகவே இருந்து வருவார்கள்! மறுமை நாள் வரும் வரை முஸ்லிம்களுக்கும் காஃபிர் களுக்கும் இடையில் நடக்கும் இந்த போராட்டம் தொடர்ந்துகொண்டேயிருக்கும்! இது திட்டவட்டமானதும், என்றும் மாறாதது மான சத்தியமாகும். எனவே இந்த கருத்து எப்போதும் முஸ்லிம் களின் உள்ளத்தில் தெளிவாக நிலைத்திருக்க வேண்டும், மேலும் இந்த அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே இஸ்லாத்திற்கும் குஃப்ருக்கும் இடையிலுள்ள உறவும் முஸ்லிம்களுக்கும் காஃபிர் களுக்கும் இடையிலுள்ள உறவும் தீர்மானிக்கப்பட வேண்டும். 

கடுமையும் உக்கிரமும் நிறைந்த திட்டவட்டமான அறிவார்ந்த போராட்டம் பதிமூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. இஸ்லாமிய சிந்தனைகளுக்கும் குஃப்ர் சிந்தனைகளுக்கும் மத்தியில் நடந்த இந்த கடுமையான போராட்டத்தில் இஸ்லாமிய சிந்தனைகள் வெற்றிபெற்றதன் விளைவாக அல்லாஹ்  இஸ்லாத்திற்கு வெற்றியளித்தான். முஸ்லிம்களை பாதுகாக்கக்கூடியதும், இஸ்லாத் தின் பாதுகாப்பு கேடயமாக இருக்கக் கூடியதும், ஜிஹாது மூலமாக மக்களுக்கு நேர்வழியை காட்டுவதற்கு ஆற்றல் கொண்டதுமான ஓர் அரசு மதினாவில் நிறுவப்பட்டது. அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர்ச்சி யான யுத்தங்களில் இஸ்லாத்திற்கும் குஃப்ருக்கும் மத்தியிலும் முஸ்லிம்களின் படைகளுக்கும் காஃபிர்களின் படைகளுக்கும் மத்தி யிலும் உக்கிரமான போர்கள் நிகழ்த்தப்பட்டன. அனைத்து போர் களிலும் முஸ்லிம்கள் வெற்றியை தக்கவைத்துக் கொண்டனர். சில யுத்தங்களில் முஸ்லிம்களுக்கு பின்னடைவு ஏற்பட்டபோதிலும் எப்போதும் போர்க்களத்தில் முஸ்லிம்களே வெற்றிவாகை சூடி னார்கள். ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்கள் தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டினார்கள். 

இந்த காலகட்டத்தில் இஸ்லாமிய அரசு முன்னணி அரசாகவும் முஸ்லிம்கள் உலகின் முன்னணி சமுதாயமாகவும் திகழ்ந்து வந்தார்கள். மானுட வரலாற்றில் முஸ்லிம்கள் நீங்கலாக வேறெந்த சமுதாயமும் இத்தகைய ஒரு மாபெரும் வெற்றியை அடைந்திட வில்லை. மாறாக இந்த ஒப்பற்ற வெற்றி இஸ்லாமிய அரசிற்கு மட்டுமே உரியதாக இருக்கிறது. எனினும் காஃபிர்கள் குறிப்பாக ஐரோப்பிய ஆட்சியாளர்களாக இருந்துவந்தவர்கள் இஸ்லாத்தின் இந்த வெற்றியை நோட்டமிட்டு வந்தார்கள். ஏனெனில் இஸ்லாத்தை தாக்கி அழித்துவிட அவர்கள் சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்கள் குறித்து காஃபிர்கள் தங்கள் நெஞ்சங்களில் வஞ்சக எண்ணம் கொண்டிருந்தார்கள், ஏனெனில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தின் எழுச்சியையும் அவர்கள் பெரும் அச்சுறுத்தலாகவே கருதினார்கள். ஆகவே 
முஸ்லிம்களை சுவடுதெரியாமல் அழித்துவிட அவர்கள் விரும்பி னார்கள். வாய்ப்புகள் கிடைத்தபோதெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் தொகுப்பதிலும் இஸ்லாத்திற்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டுவதிலும் அவர்கள் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்கள். 

ஹிஜ்ரி ஆறாம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்திலும் (கி.பி. பதினோராம் நூற்றாண்டு) ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டின் துவக்கத் திலும் இஸ்லாமிய அரசின் மாகாணங்களில் (Wilayah) பிளவு ஏற்பட்டிருந்த நிலையையும், உள்விவகாரக் கொள்கை, நிதியியல், இராணுவம் மற்றும் அதிகாரம் ஆகிய விஷயங்களில் சில முக்கிய பிராந்தியங்களிலும் மாகாண ஆளுநர்கள் தன்னிச்சையாக செயல் பட்டு வந்த நிலையையும் காஃபிர்கள் கண்ணுற்றார்கள். ஒருமைத் துவம் கொண்ட அரசாக (Unitary state) இல்லாமல் கூட்டாட்சி முறையில் (Federal state) இயங்கும் அரசு போன்றே இஸ்லாமிய அரசு இயங்கிவந்து. மிம்பர்களில் நின்றவாறு கலீஃபாக்களுக்காக துஆ மேற்கொள்வது, கலீஃபாவின் பெயர் பொறித்த நாணயங்களை அச்சிடுவது மற்றும் கராஜ் நிதியின் ஒரு பகுதியை கலீஃபாவுக்கு அனுப்புவது போன்ற சில சம்பிதாயங்களை மட்டும் மாகாண ஆளுநர்கள் பின்பற்றுவது என்ற நிலைக்கு கலீஃபாவின் அதிகாரம் சுருட்டப்பட்டது. இந்த நிலையை கண்ணுற்ற ஐரோப்பிய அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராக சிலுவை யுத்தக்காரர்களை அனுப்பி கடும்போர் தொடுத்தன. கடுமையாக நடந்த இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் தோல்வியை தழுவினார்கள். பாலஸ்தீனம், லெபனான் மற்றும் சிரியா ஆகியவை அடங்கிய ஷாம் பிராந்தியத்தை காஃபிர்கள் கைப்பற்றினார்கள். இந்த பிராந்தியத்தை அவர்கள் பல ஆண்டுகளுக்கு தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். திரிபோலி என்ற பகுதியை ஒரு நூற்றாண்டிற்கு மேலாக தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருந்தார்கள். 

முஸ்லிம்களுக்கும் சிலுவையுத்தக்காரார்களுக்கும் மத்தியில் நடைபெற்ற யுத்தங்கள் ஒரு நூற்றாண்டு காலம் நடைபெற்று வந்தது. காஃபிர்கள் கைப்பற்றிய பகுதிகளை மீட்பதற்கு கடுமை யான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், இந்த யுத்தத்தின் விளைவாக முஸ்லிம் உம்மா குழப்பமான நிலையையே எதிர் கொள்ள நேரிட்டது. மேலும் இஸ்லாமிய அரசின் அந்தஸ்தை இந்தயுத்தம் வெகுவாக குறைத்துவிட்டது. இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் தோல்வியை தழுவினார்கள். அவர்கள் மீது காஃபிர்கள் தங்கள் வெற்றியை நிலைநாட்டினார்கள். இந்த யுத்தத்தில் காஃபிர்கள் திட்டவட்டமான வெற்றியை நிலைநாட்டினார்கள். இஸ்லாத்திற்கு எதிராக காஃபிர்கள் அறிவார்ந்த முறையிலோ அல்லது ஆன்மீக ரீதியாகவோ வெற்றி பெறுதல் என்பது ஒருபோதும் நிகழமுடியாது என்றபோதிலும் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு இழிவும் தலைக்குனிவும் முஸ்லிம்கள் மீது விழுந்தன. சிலுவை யுத்தங்களின் இறுதிக் கட்டத்தில் ஷாம் பிராந்தியத்தில் இருந்து காஃபிர்களை விட்டியடிப்பதில் வெற்றி கண்ட போதிலும் சிலுவை யுத்தம் நடந்த காலகட்டம் முஸ்லிம்கள் தோல்வியுற்ற காலகட்டமாகவே கருதப்படுகிறது. ஏனெனில், காஃபிர்களுடன் நிகழ்ந்த சிலுவை யுத்தத்தை முஸ்லிம்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளவில்லை.  

இந்நிலையில் சிலுவை யுத்தம் முடிந்த உடனேயே மங்கோலியர்களின் படையெடுப்பும் பாக்தாத் நகரில் அவர்கள் நிகழ்த்திய படுகொலை சம்பங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இந்த பின்னடை வின் தொடர்ச்சியாக அதே வருடத்தில் (ஹிஜ்ரி 656, கி.பி. 1258) டமாஸ்கஸ் நகம் மங்கோலியர்களின் கைகளில் வீழ்ந்தது. இதன் பின்னர் (ஹிஜ்ரி 658, கி.பி. 1260) செப்டம்பர் 3ல் அய்ன் ஜாலூத் யுத்தம் நிகழ்ந்தது. அதில் மங்கோலியர்கள் முறியடிக்கப்பட்டனர். மங்கோலியர்களுக்கு எதிராக பெற்ற மாபெரும் வெற்றியின் காராணமாக முஸ்லிம்கள் உள்ளத்தில் பெரும் எழுச்சி தோன்றியது. அவர்கள் சிந்தனையில் ஜிஹாது பற்றிய புத்துணர்வு எழுந்து அலைமோதியது. உலகமெங்கும் இஸ்லாத்தின் செய்தியை எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்து கொண் டார்கள். எனவே, ஜிஹாதின் வழியிலான முஸ்லிம்களின் வெற்றிப் பயணம் மீண்டும் தொடர்ந்தது. பைஸாந்திய பேரரசிற்கு  எதிரான ஜிஹாது மறுபடியும் தொடர்ந்தது. அடுத்தடுத்து யுத்தங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொள்ளப்பட்டன. முஸ்லிம்கள் வெற்றிக்குமேல் வெற்றியை ஈட்டினார்கள். ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டு வாக்கில் முஸ்லிம் உம்மா மறுபடியும் ஜிஹாது என்ற வெற்றிப் பயணத்தை தொடங்கியது; தொடர்ச்சியாக பல யுத்தங்கள் நிகழ்ந்தன. சில தருணங்களில் முஸ்லிம்கள் பின்னடைவு எய்தியபோதிலும் எப்போதும் அவர்களே வெற்றி வீரர்களாக திகழ்ந்தார்கள். பல யுத்தங்களில் வெற்றியை ஈட்டியதன் மூலமாக பல நிலப்பரப்புக்களை முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள். ஹிஜ்ரி 12ம் நூற்றாண்டு (கி.பி. 18ஆம் நூற்றாண்டு)  வரை அது உலகின் முன்னணி அந்தஸ்து பெற்ற மாபெரும் வல்லரசாக விளங்கியது! 

பிற்காலத்தில் ஐரோப்பாவில் நிகழ்ந்த மாற்றங்கள் முஸ்லிம் உம்மத்தில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தின. ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சி (Industrial revolution) உலக நாடுகளில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தின. தொழிற்புரட்சியால் விளைந்த தாக்கங்களின் முடிவாக முஸ்லிம்கள் குழப்பம் அடைந்து செயலற்றுப் போகும் நிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக உலக நாடுகளின் அரசியல் அணிகளிலும் அவற்றின் பலத்திலும் மாற்றம் ஏற்பட்டு இஸ்லாமிய அசு தனது உயர்ந்த நிலையிலிருந்து சிறிது சிறிதாக வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டது! இறுதியாக, ஐராரோப்பியர்களின் கட்டுக்கடங்காத பேராசைகளுக்கு இரையாகிப் போகும் கொள்ளைப் பொருளாக மாறி அழிவை எதிர்கொண்டது! இதன்விளைவாக இஸ்லாமிய அரசு வெற்றிகொண்ட நிலப்பரப்புகளையும் ஏற்கனவே அதன் அதிகாரத்தில் இருந்துவந்த நிலப்பரப்பு களையும் காஃபிர்களிடம் விட்டுவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. இஸ்லாமிய அரசின் நிலப்பரப்புகளை காஃபிர்கள் சிறிதுசிறிதாக ஆக்கிரமித்தார்கள். 

இஸ்லாமிய அரசு பலவீனம் அடைந்துவிட்டதைவும் முஸ்லிம் களின் எழுச்சி முற்றாக முடிந்துபோய்விட்டதையும் இந்நிகழ்ச்சி உறுதிப்படுத்தியது! அதன் பின்னர் இஸ்லாமிய அரசை சர்வதேச அரசியல் அரங்கிலிருந்து முழுமையாக நீக்குவதற்கும் அதன் மூலமாக மக்களின் வாழ்க்கை விவகாரங்களிலிருந்து இஸ்லாத்தை அகற்றுவதற்கும், ஐரோப்பிய அரசுகள் திட்டம் தீட்டி செயல் பட்டன. வேறு வகையில் கூறுவதென்றால் முஸ்லிம்களின் மீது புதிய சிலுவையுத்தத்தை துவக்குவதற்கு ஐரோப்பியர்கள் திட்டம் வகுத்தார்கள்! எனிலும் முதல் சிலுவை யுத்தம் போல அல்லாமல் முஸ்லிம்களின் மீது போர் தொடுப்பது மற்றும் இஸ்லாமிய அரசை வெற்றி கொள்வது ஆகிய நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு பல வஞ்சக நோக்கங்களுடன் புதிய சிலுவை யுத்தம் தொடுக்கப்பட்டது. இந்த சிலுவை யுத்தத்தின் பின்னணியில் படுபயங்கரமான நோக்கங்களும் ஆழமான சதித்திட்டங்களும் இடம்பெற்றிருந்ததால் அதன் விளைவு மிக ஆழமானதாகவும் தீவிரமானதாகவும் இருந்தது. இஸ்லாமிய அரசை முற்றாக வீழ்த்தி அதன் ஆழமான வேர்களை அடிச்சுவடு தெரியாமல் அழித்துவிடுவது புதிய சிலுவையுத்தத்தின் நோக்கமாக இருந்தது. மேலும் சில புரோகித சம்பிரதாயங்களையும் ஆன்மீக சடங்குகளையும் தவிர்த்து இஸ்லாத்தின் வேறொன்று மில்லை என்ற சிந்தனையை உருவாக்குவதன் மூலம் முஸ்லிம்களின் உள்ளங்களிலிருந்து இஸ்லாத்தை வேரோடு பிடுங்கி எறிந்து விடுவது புதிய சிலுவை யுத்தக்காரர்களின் நோக்கமாக இருந்தது. (‘விடுதலை’ )

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது'  என்பதை மிக ஆழமாக ஆராயும், காலம் சென்ற பலஸ்தீனிய அறிஞர் அஷ் ஷேக் அப்துல் கதீம் ஸல்லும் (ரஹ்) எழுதிய 'கைப குதிமத்துல் கிலாஃபா' என்ற அரபு நூலின் தமிழாக்கத்தை இங்கே பகுதி பகுதியாக வழங்குகிறோம்!

Home        Sri Lanka Think Tank-UK (Main Link)

The Real Meaning Of Taqwa and Its Significance

Taqwa is one of the most profound concepts in Islam. It has been referred to numerous times in the Quran and Sunnah in order to emphasize its relevance and significance to Muslims. In fact, the word taqwa and its derivatives are mentioned in 239 verses of the Quran and mentioned countless times in the Sunnah of RasulAllah (saw). This emphasis is not surprising once we see that it is the key to happiness and success in this life and the hereafter. Taqwa is an avenue by which Muslims relate to one another in society and a means to channel their actions. Read more>>>

நபி வழிக்கு முரணான மத்கப் தரீக்கா

1/


Home

ஷியா கொள்கை ஓர் ஆய்வு BY P.J.

1/


Home

மதிக்கப்படாத மார்க்கக் கல்வி

1/


Home

Tuesday 19 April 2011

உம்ராவை விட பெரிய இபாதத் By; Br. MAM Manoor (Plus*)

1/1


நம் சமூகம் சமகாலத்தில் உம்ரா செய்வது இரவு நின்று வணங்குவது நோன்பு பிடிப்பது இவை மட்டும் தான் இபாதத் இவை மட்டும் தான் இஸ்லாம் என்று தவறாக புரிந்து கொண்டு ஏழைக்கு உதவுததல் கஷ்டத்திலிருப்பவருக்கு உதவுததல் போன்றவை பெரிய நன்மை தரும் இபாதத்கள் அல்ல என்று நினைத்து வாழ்கிறது. அப்படியான அனைவரும் இதனை முழுமையாக கேளுங்கள். உண்மையில் அருமையாக விளக்கம் இப்படியானதொரு விளக்கம் நான் இதுவரை கேட்டதில்லை.

Tuesday 15 March 2011

The Fardiyyah (obligation) of working for Khilafah




The Ummah has only three days and two nights to choose a Khaleefah, if they fail to do this after this time the obligation continues on all and those who undertake the Fard are saved from the sin. But those who neglect will be sinful for not fulfilling their Lord’s command and they will have to explain themselves to Him on the Day when His Account (Hisab) is swift. Read more>>>

Monday 14 March 2011

சீயாக்களின் கொள்கைகளும் கருத்துக்களும்-01 by; MAM Mansoor (Plus*)

1/1

சீயாக்களின்  கொள்கைகளும் கருத்துக்களும்  1 from varuththamilla valifar on Vimeo.

வழிகெட்ட ஷீயாக்கள் யார் அவர்கள் கொள்கைகள் கோட்பாடுகள் என்ன என்றும் "வழிகெட்ட" சீயாக்களின் ஊடுருவல், முஸ்லிம்கள் காபிர்களை இனங்காண இந்த வீடியோவை கட்டாயம் பார்க்கவும்

Sunday 13 March 2011

அஸ்ஹரி மத்ஹப் (..?) By; MAM Mansoor (Plus*)

1/2


2/2



சிலுவை யுத்தம்

1/


2/



இஸ்லாமிய சமூக வீழ்ச்சி

1/


2/



குர்ஆன் சுன்னா ஒளியில் 'அஹ்லுல்பைத்'

1/3


2/3


3/3


நபிகளார் வரலாறு நு.பி மக்கா காலம் - 1

1/


2/


3/


4/


5/


6/


7/