Pages

Sunday, 5 December 2010

வாழ்க்கைமுறை இயல்பும் மாற்றமும்

ஒவ்வொரு குடும்பமும் தனது உறுப்பினரை பின்வரும் வினாக்களுக்கு விடைகாணும் முயற்சியில் ஈடுபடுத்துவது வாழ்க்கைமுறையை நெறிப் படுத் துவதற்கு இலகுவாக அமையும். 

நான் யார்எனக்கு வழி காட்டுபவன் யார்பிரபஞ் சம்-அதிலுள்ளவை பற் றிய எனது பணி யாதுஎனது வாழ்க்கை முறை எவ்வாறு அமைய வேண் டும்?
முதல் மூன்று வினாக்களும் கோட்பாடு சார்ந்தவை. அவற்றுக்கு அல்குர்ஆன்ஸுன்னா வுக்கூடாக ஏற்கனவே விடைகள் கொடுக்கப்பட்டுள் ளன. நான்கா வது வினா நடைமுறை சார்ந்தது. அதற்கான விடை அல்குர்ஆன் ஸுன்னா வில் கிடைப்பதோடு சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென சிந்தித்து வழிகாண வேண்டிய அம்சங்களையும் கொண்டிருக்கின்றது. வரலாற்றில் இப்பணியை இஜ்திஹாத் செய்துள்ளது. எமது பகுத்தறிவுக்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டுள்ளது.
நான் ஒரு முஸ்லிம்அல்லாஹ்வை எனது இலாஹ் ஆக ஏற்றிருக்கிறேன். ஆதலால்ஏனைய மனிதர்கள் போல நான் வாழ முடியாது. நான் தனித்துவ மானவன். அதேநேரத்தில் தனித்தவனுமல்ல. சர்வதேச முஸ்லிம் உம்மத்தின் ஓர் உறுப்பினன். நான் விடக்கூடிய தவறுகள் என்னை மாத்திரம் பாதிப் பதில்லைமுழு முஸ் லிம் சமுதாயத்தையும் பாதிக்கச் செய்யும்.
அல்குர்ஆனும் ஸுன்னா வுமே எமக்கு வழிகாட்டுகின்றன. அல்லாஹ்வின் தூதரான நபி (ஸல்) அவர்கள் மனித சமுதாயத்தில் வாழ்ந்துஅல்லாஹ் வின் வழிகாட்டலுக் கேற்பமனித சமூகத்துக்கான வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். தனிநபராக நின்றுதனிநபருக்கான வழிகாட்டு தலையும்குடும்பத்தவராக அமர்ந்து குடும்ப வாழ்வுக்கான வழிமுறையை யும் காண்பித்திருக்கிறார்கள். ஸஹாபாக்கள் என்ற முன்னோடிச் சமூகத்தை உரு வாக்கி சமூகத்துக்கான வழிகாட் டுதலையும் வழங்கியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை முறை போன்றே அந்த ஸஹாபாக்களின் வாழ்க்கை முறையும் பதினைந்து நூற்றாண்டுகளாக பாதுகாக்கப் பட்டு வருகின்றது. ஏழையாக இருந்தாலும்செல்வந்தனாக இருந்தாலும்படித்தவனாக இருந்தாலும்பாமரனாக இருந் தாலும்சமூகத்தின் மேல் மட்டத் திலிருந்தாலும்கீழ் மட்டத்திலிருந்தாலும் அந்த ஸஹாபாக்கள் அத்தகைய வர்களுக்கு முன்னோடியாகவே காணப்படுகிறார்கள். அவர்கள் இரவில் துறவிகளாகவும்பகலில் குதிரை வீரர்களாகவும் தென்பட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வுடனான உறவை துண்டிக்கவுமில்லை. பொது மக்களுடனான தொடர்பை அறுத்துக் கொள்ளவுமில்லை.
பிரபஞ்சத்தைப் பொறுத்த வரைஅது அல்லாஹ்வினால் படைக்கப்பட்டது. அவன்ரப்புல் ஆலமீன்-பிரபஞ்ச ரட்சகனாக உள்ளான். மனிதனின் தேவைக் காகவே அனைத்தும் படைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தக்கூடிய அறிவையும் ஆற்றலையும் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கி யுள்ளான். அல்லாஹ்வின் பிரதிநிதியாக நின்று பிரபஞ்சப் பொருள்களைப் பரிபாலிப்பதுவளப்படுத்துவதுபாதுகாப்பதுபயன்படுத்துவது போன்றன அவனது பொறுப் பாக அமைந் துள்ளன. அதற்கான வழிகாட்டல்களும் வழங்கப் பட்டுள்ளன. மனிதர்கள் போன்றே விலங்குகள்பறவை கள்தாவரங்கள்ஏனைய உயிரி கள்பௌதீக பொருள்கள் ஆகிய அனைத்தும் அல்லாஹ் வின் படைப்புக்கள் என்பதால் அவற்றோடு நிச்சயமாக - அதன தன் உரிமைகளை வழங்கி நடப்பதற்கு மனிதன் கடமைப் பட்டுள்ளான். பௌதீகபண் பாட்டுச் சூழலைப் பாதுகாப் பது அவனது கடமையாகும்.
எமது வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு அல்குர்ஆன் தருகின்ற மிகச் சுருக்கமான விளக்கம்அல் லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய மக்களுக்கு அல் லாஹ்வின் தூதரிடத்தில் அழ கிய முன்மாதிரி இருக்கின்றது என்பதாகும். ஆகவேஸீறா வைத் தெளிவாகப் படித்து நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரி களை விளங்கி அவற்றை வாழ்வில் கடைப் பிடிப்பது தான் எமது வாழ்க்கை முறை யாகும். காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவிதமாக வாழ்க்கை முறையை - அடிப்படை நோக்கத்துக்கு (ஷரீஆ வுக்கு) முரணில்லாத முறை யில்-மாற்றிக் கொள்ள முடியும் என்பதை அவர் களது வாழ்வும் ஸஹாபாக்களின் வாழ்க்கை முறையும் எடுத்துக் காட்டுகின் றன.
இல்லற வாழ்வில் அடியெடுத்து வைப்பவர்கள் இவற்றை எந்தளவு அறிந்தும் விளங்கியும் வைத்துள்ளார்களோ,அதற்கேற்ப அவர்களின் வாழ்க்கை முறை யும் சீராக அமையும். எப்படியும் வாழ லாம் என்ற நிலையிலிருந்து இப்படித் தான் வாழ வேண்டு மென்ற உறுதிப்பாட்டிற்கு அவர்கள் வந்துவிட வேண்டும். இதனை எவ்வாறு வழங்கலாம் என்பது குறித்துக் கருத்துப் பரிமாற வேண்டிய தேவை உள்ளது.
இஸ்லாத்தில் பர்ளு ஐன்பர்ளு கிபாயா என்ற இரு வகையான கடமைகள் உண்டு. ஒரு தனிமனிதன் - மாணவனா கவோமாணவியாகவோ இருந்து - கற்கக் கூடிய கால கட்டத்தில் இல்லற வாழ்வு பற்றிக் கற்றுக் கொள்வது பர்ளு கிபாயாவாகும். இல்லற வாழ் வில் நுழையும்போதும்நுழைந்த பின் னரும் கற்றுக் கொள்வது பர்ளு ஐனாகும். இக்கற்றல் முறை இஸ்லாம் அங்கீகரித்த எந்த வகையிலும் அமையலாம். இஸ்லாம்கற்பதற்கென ஒரு கால கட்டத்தை வரையறுக்கவில்லை. வாழ்க்கை நீடித்த கல்வியை உல குக்கு அறிமுகப் படுத்திய இஸ்லாம் மரணிக்கும் வரை கற்க வேண்டுமென வலி யுறுத்துகிறது. ஆதலால்மண முடித்த பின்னர் கற்பது வெட்கப்படக் கூடியதல்ல;மெச்சத்தக்கது.
ஆதலால்இம்மைமறுமை விமோசனத்துக்காக குடும்ப வாழ்வு பற்றிக் கற்றுக் கொள் வதை கௌரவமாகக் கருதுதல் வேண்டும். (MHM Nalir (Plus*)-Weligama)


Home                Sri Lanka Think Tank-UK (Main Link)          

No comments:

Post a Comment