Pages

Sunday, 5 December 2010

முஸ்லிம்களின் முதலாவது சக்தி

அஷ்ஷெய்க் ராஷித் கன்னூஸி டியூனீசியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1941 ஆம் ஆண்டு டீயூனீசியாவின் தெற்கில் அமைந்துள்ள ஹாமா எனும் கிராமத்தில் இவர் பிறந்தார். ஆரம்பக் கல்வியை தனது கிராமத்திலே பூர்த்தி செய்த இவர் உயர்கல்விக்காக காபஸ் நகருக்கு சென்றார். பின்னர் டியூனீ ஸியாவின் தலைநகரில் கல்வியைத் தொடர்ந்தார். அதன் பிறகு எகிப்துபிரான்ஸ்சிரியா போன்ற நாடுகளில் தனது உயர்கல்வியைத் தொடர்ந்தார். சிரியாவின் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறையில் தனது பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
1960 களின் பிற்பகுதியில் டியூனீசியாவிற்குத் திரும்பிய அஷ்ஷெய்க் ராஷித் அல் கன்னூஸி அங்கு நஹ்லா எனும் இஸ்லாமிய இயக்கத்தை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து அவரது அரசியல்தஃவா செயற்பாடுகளுக்காக 1981 ஆம் ஆண்டு முதல் பல தடவைகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.
தற்போது லண்டனில் வசித்துவரும் ஷெய்க் ராஸித் அல் கன்னூஸி இஸ்லாமிய அரசியல் சிந்தனை குறித்து ஆழ்ந்த பரீட்சயமுடையவர். அது தொடர்பாக பல நூற்களையும் பல விரிவுரைகளையும் நிகழ்த்தியவர். இக்கட்டுரைத் தொடர் அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக அமைகின்றது.
எமது முஸ்லிம் சகோதரர்க ளுக்காக மறைவாக இருந்து கேட்கப்படும் துஆக்கள் அங்கீக ரிக்கப்படும். இந்த வழிமுறையை அல்குர்ஆன் எமக்குக் கற்றுத் தருகின்றது. உம்மி மக்தூம் (றழி) யின் சம்பவத்தை நினைத்துப் பாருங்கள்நபி (ஸல்) அவர்கள் அவரைப்பார்த்து முகம் கடுகடுத் தார். அது பிழை என்பதை அல் லாஹ் சுட்டிக் காட்டினான். "ஒரு குருடர் வந்ததற்காக முகம் கடு கடுத்தார்புறக்கணித்தார்" என்று அல்லாஹ் நபி (ஸல்) அவர் களைக் கண்டித்தான்.
இதன் மூலம் அவர்களுக்கு மட்டுமல்லபின்னால் வருகின்ற முழு முஸ்லிம் சமூகத்திற்கும் அல்லாஹ் ஒரு பாடத்தைக் கற் றுக் கொடுத்தான். நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளின் முக்கிய தலைவர்களோடு பேசிக் கொண் டிருந்தார். அவர்கள் இஸ்லாத் தில் இணைந்துக்கொண்டால் அது பெரும் பலமாக மாற முடி யும் என்று கருதினார். இது உண் மையில் மிக முக்கியமானதுஅனுமதிக்கப்பட்ட ஒன்று.
ஆனாலும் அவ்வாறு முக்கி யஸ்தர்களுடன் பேசுவதன் கார ணமாகஅவர் களை இஸ்லாத் தின்பால் அழைக்கின்ற தஃவா பணியில் இருக்கின்ற போதும் கூட அவர்களை விட தாழ்ந்த முஸ்லிம்களை அல்லது பௌதீக ரீதியாக தாழ்ந்த முஸ்லிம்களைப் புறக்கணிப்பதுஅவர்களுக்கு படித்துக் கொடுப்பதை விட்டு பராமுகமாக இருப்பது கூடாது என்பதை அல்லாஹ்தஆலா அந்த சம்பவத்தின் மூலமாக எம் மனைவருக்கும் கற்பிக்கின்றான்.
இந்த உண்மையின் காரண மாகத்தான் நான் உங்களிடம் பிரார்திக்குமாறு கேட்கிறேன் உங்களில் இருக்க கூடிய பலரின் பிரார்த்தனையை அல்லாஹுத் தஆலா ஏற்றுக்கொள்வான். உங்களில் இருக்க கூடிய பலரின் செயல்கள் அல்லாஹ்விடத்தில் அங்கீகாரம் பெற்றதாக இருக்க முடியும். உங்களில் இருக்க கூடிய பலரினால் இன்னும் பலருக்கு உதவிகள் கிடைக்க முடியும்இஸ்லாமிய சமூகத்திற்கு வெற்றிகள் கிடைக்க முடியும். இந்த வகையில்தான் உங்களிடத்தில் மிகப் பெரிய நன்மை இருப்ப தாக நான் கூறுகிறேன்.
எனவேதான்நீங்கள் என்னை விட உயர்ந்தவர்களாக இருக்கின் றீர்கள் என்று நான் சந்தேகம் இல்லாமல் கருதுகிறேன். உங்க ளில் ஒருவரின் பிரார்த்தனை எனக்கு மிகப் பிரயோசனமாக அமையும். இந்த ஈமானிய கண்ணோட்டத் தில்தான் நான் உங்களுக்கு ஆரம்பத்திலேயே கூறினேன். நான் உங்களை சந்திப்பது நீங்கள் என்னை சந்திப் பதைவிட எனக்கு மிகச் சந்தோசமாக இருக்கிறது.
இஸ்லாமிய சமூகத்திற்கு அதன் பலத்தைக் காட்டக் கூடிய சில அம்சங்கள் இருக்கின்றன. ஏனைய வேறு எந்த சமூகத்திற்கும் இல்லாத பலம் இந்த சமூகத்திற்கு காணப்படுகின்றது. இந்த கருத்தை நிராகரிப்பாளர்கள்முஸ்லிம் அல்லாதவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. எனவேதான் நிராக ரிப்பாளார்கள் இஸ்லாமிய சமூகத்தை எதிர்கொள்வதற்காகஅவர்களைத் தோற்கடிப்பதற் காக எல்லா வகையான பௌதீக வளங்களையும் திரட்டுகிறார் கள்அவ் வகையான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை வீழ்த்துவதற்கு உழைக்கிறார்கள்.
ஆனால் இஸ்லாமிய சமூகத்தை வேறுபடுத்திக் காட்டுகின்றஇந்த சமூகத் தின் பலத்தை பற்றி அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. நான் உங்களுக்கு ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். இந்தோனேசியாவை கிறிஸ்தவ நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காக 50 வருட திட்டம் ஒன்றை நிராகரிப் பாளர்கள்மேற்கத்தேய உலகம் திட்டமிட்டது. 20ம் நூற் றாண்டின் நடுப்பகுதியில் அத்திட் டத்தை தீட்டியது. அதனை நடை முறைப்படுத்துவதற்காக மிகப் பெருந்தொகையான செல்வங் களை அவர்கள் திரட்டினார்கள். அதற்கென்று பலவகையான வசதி களையும் அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அப்போது இந்தோனேசியா காலனித்துவ நாடுகளில் ஒன்றாக இருந்தது. இப்போதும் கூட கால னித்துவத்திற்கு உட்பட்ட நாடா கத்தான் அது இருக் கிறது. உண்மையில் இஸ்லாமிய உலகம் விடுதலை பெற்றுவிட்டது என்று சொல்பவர்கள் பொய்யையே சொல்கிறார்கள். இஸ்லாமிய உலகம் இன்று வரையில் காலனித்துவத் திற்கு உட்பட்டதாகத்தான் இருக் கிறது. ஆனால் ஒரு வித்தியாசமான அமைப்பு. இந்த 20 ஆம் நூற்றாண்டிற்கு பொருந்தக் கூடிய பொருத்தமான காலனித்து வமாக இஸ்லாமிய உலகம் இன் றும் காணப்படுகிறது.
உண்மையில் இந்தவகையில் தான் இந்தோனேசியாவை ஒரு கிறிஸ்தவ நாடாக மாற்ற வேண்டும் அல்லது ஐம்பது வீதமாவது அங்குள்ள மக்களை கிறிஸ்தவர்களாக மாற்ற வேண்டும் என்ப தற்காக பெருந்தொகையான செல்வங்களை செலவழித்தார் கள்கிறிஸ்தவ பாதிரிமார்களை அந்த நாடு முழுக்கப் பரப்பிவிட் டார்கள்பல வைத்தியர்கள்அறிஞர்களையும் அங்கு குவித்தார்கள். அந்த கிறிஸ்தவ பிரச்சார கர்கள் இந்தோனேசியாவின் எல்லாப் பகுதிகளிலும் பரவி னார்கள். இந்தோனேசியாவின் காடுகளிலெல்லாம் கூட அவர் கள் சுற்றித் திரிந்தார்கள். 50 வரு டங்கள் கழிந்தது.
 ஆனால்அந்த நாட்டில் ஒரு சிறு தொகையினரைக் கூட மாற்ற முடியாமல் போனது. விரல் விட்டு எண்ணக் கூடியவர்களைத் தான் அப்போது அவர்க ளால் மாற்ற முடிந்தது. அனைத்து வகையான வசதிகள் இருந்தும் கூட வெற்றியை அடைவதற்கு அனைத்து வகையான திட்ட மிடல்கள் இருந்தும் கூட ஏன் இதில் அவர்கள் தோற்றார்கள்?இதனை அவர்கள் சிந்தித்தார் கள். எனினும்முஸ்லிம் சமூகத் தில் காணக்கூடிய வெற்றிக்கான காரணத்தை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. இறுதியாக அவர்கள் இந்தோனே சியா வின் ஒரு துண்டையாவது பௌதீக ரீதியாகவாவது எங்களு டையதாக் கிக் கொள்வோம் என்றுதான் இந்தோனேசியாவின் ஒரு பகுதியைப் பறித்து ஒரு கிறிஸ்தவ நாடாக உருவாக்குவதற்கு அவர்கள் ஈடுபட்டு வருகிறார் கள்.
இப்படியாக பௌதீக ரீதியான இலக்கில் ஒரு சிறு பகுதியையே அடைய முடிந்ததே தவிர அவர்களின் திட்டமிடல் முழுத் தோல்வியிலேயே முடிந் தது. முஸ்லிம் சமூகத்தில் காணப்படு கின்ற அந்த முதலாவது பலம் தான் ஈமானியப் பலமாகும். அல்லாஹ்வோடு முஸ்லிம்கள் கொண்டிருக்கின்ற நெருக்கமான பலம் தான் அந்த பலமாக அமை கின்றது. இதன் காரணமாகத் தான் எல்லாவிதமான பௌதீக வளங்களும் அதற்கு முன்னால் தோற்றுப் போய்விடுகிறது என்பதை நாங்கள் காண்கிறோம். இது முஸ்லிம் சமூகத்தின் முதலாவது பலம்.
முஸ்லிம் சமூகத்தின் இரண்டாவது பலம் அவர்களிலே காணப்படுகின்ற வறுமைஎளிமையான வாழ்க்கை. இதுதான் இஸ்லாமிய சமூகத்தின் இரண் டாவது பலம் என்பதை நாம் காண்கின்றோம். வறுமைகஷ்டமும்துன்பமும் நிறைந்ததுதான். ஆனாலும் இது இந்த சமூகத்தில் காணப்படுகின்ற மிகப் பெரிய பலம் என்று நான் கருதுகின்றேன். இதனை இறைதுதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் "வறுமையைப் பற்றி உங்கள் மீது நான் பயப்பட வில்லைஉலகம் உங்களுக்கு மிக விரிவாக தரப்பட்டு அந்த உலகத்தையே பெறு வதிலேயே நீங்கள் போட்டி போட்டு அழிந்து விடுவீர்களோ என்பதில் தான் நான் பயப்படுகிறேன்"
நபி (ஸல்) அவர்களின் இந்த கருத்திலிருந்து நான் சொல்கி றேன் முஸ்லிம் சமூகத்தின் மிகப் பெரிய பலம் வறுமையும் எளிமை யான வாழ்க்கையுமா கும். ஆனால்இந்த பலத்தை எவ்வாறு எமது வெற்றிக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வது என்பதுதான் பிரச்சினையாக அமைகிறது.  ஈமானுடன் தொடர்புபட்ட சில அடிப்படைப் பிரச்சினைகளை உங்களுக்கு கூறியதன் பிறகுநாம் தலைப்புக்குச் செல்வோம்.
"வறுமை பற்றி நான் உங்களுக்கு பயப்படவில்லை..." என்ற இறை தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன கருத்தை ஒரு குறிக் கோளாக நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களிடம் இருந்து வந்த நன் மாராயமாக நீங்கள் கொள்ள வேண் டும்.
உண்மையில் ஏன் அவர்கள் சொன்னார்கள்உண்மையில் இஸ்லாமிய சமூகத்தில்இயக் கங்களில் கடுமையாக உழைக் கின்ற அங்கத்தவர்கள் கூட இதற் குத்தான் பயப்படுகிறார்கள். தேவை பற்றித்தான் சிந்திக்கிறார் கள். எனக்கு இவ்வாறான தேவை இருக்கிறதுஅதனை எப்படி நிறைவேற்றிக் கொள்வேன் என் பது பற்றித்தான் யோசிக்கிறார் கள். இஸ்லாமிய அமைப்பும் கூட இவ்வாறுதான் சிந்திக்கிறதுஎங்களுக்கு ஒரு மத்திய நிலையம் தேவைநிறைய பள்ளிகள் தேவைநிறைய வாகனங்கள் தேவை இப்படி தேவை என்ற பட்டியல் எங்களிடத்தில் நீண்டு கொண்டே செல்கின்றது. இவைகள் எல் லாம் இருக்கும் என்றால் நாங்கள் இவ்வாறு எல்லாம் செய்வோம் என்று சிந்திக்கின்றோம்.
அல்லாஹ் எங்களைப் பற்றி மிகவும் அறிந்தவன் எங்களுக்கு இத்தகைய செல்வங்கள் திறந்து கொடுக்கப்பட்டால் என்ன நடக் கும் என்பதை அவன் நன்கறிந் தவன். எனவேதான்நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு வறுமை வருவதைப் பற்றி நான் பயப்படவில்லை என்றார்கள். சில வேளை களில் அறிஞர்களும் கூட இந்த வறுமையைப் பற்றி கவலைப் படுகிறார்கள். இதனை எப்படி நீக்குவது என்று அதிகமாக சிந் திக்கிறார்கள். ஆனால்நான் நினைக்கிறேன் அல்லாஹ் அவ னுடைய ஏற்பாட்டின் படி இஸ் லாமிய சமூகத்தின் மீது இந்த வறுமையை ஏற்படுத்தி இருக்கி றான்.
இதன் பொருள் வறுமைக்கு நாம் பணிந்துவிடுவதல்ல. எங்க ளுடைய பொரு ளாதார வாழ்க்கையை ஒழுங்கு படுத்திக் கொள் ளக் கூடாது என்றும் நான் சொல்ல வில்லை. கண்டிப்பாக எங்களு டைய பொருளாதார வாழ்க் கையை நாம் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். அதனை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதனை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பொருளா தார நிலை குறித்து நாம் கவலைப் படக் கூடாது. அதன் கலக்கம் எங்களுடைய உள்ளத்தில் தோன்றி விடக் கூடாது என்பதை தான் நான் உங்களுக்கு சொல்ல விரும்புகின் றேன். (Meelparvai Plus*)
Home                Sri Lanka Think Tank-UK (Main Link)    

No comments:

Post a Comment