Pages

Thursday, 21 February 2013

இன விரிசலின் பின்புலத்தில் நிலவும் அறிவீனம்; By; எஸ்.எச்.எம்.பளீல்

1/2


2/2

இலங்கை முஸ்லிம்களுக்கும் சிங்கள சமூகத்துக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டமைக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் குறிப்பிடுகிறார்.

கட ந்த 09.02.2012 வெளியிடப்பட்ட ‘முஸ்லிம் நீதிய’ எனப்படும் அவரது 1046 பக்கங்களைக் கொண்ட நூலின் இறுதிப் பந்தியில் அவர் அவ்விரு காரணங்களையும் பின்வருமாறு விளக்குகிறார்.

‘‘இலங்கை முஸ்லிம்களுக்கும், சிங்கள இனத்தவருக்கும் இடையிலான சகவாழ்வு சீர்குலைந்து போனதற்கு ஏதுவாக அமைந்த காரணிகளாக முஸ்லிம் அரசியல் தனித்துவத்தை கட்டியெழுப்புவதற்காக முஸ்லிம் இனவாத அரசியல் சக்திகள் உருவாகியமை மற்றும் முஸ்லிம் இனம் பற்றியும், இஸ்லாமிய மதம் பற்றியும் ஏனைய மதத்தவர்களுக்கு மத்தியில் போதிய தெளிவின்மை என்பவற்றை குறிப்பிடலாம். இந்த தெளிவின்மையை நிவர்த்தி செய்ய இந்த நூலின் வாயிலாக ஏதாவது பங்களிப்பு கிட்டுமாயின் இந்த ‘முஸ்லிம் நீதிய’ நூலை எழுதுவதற்கு நான் எடுத்த அதி தீவிர முயற்சி பற்றி நான் சந்தோசமடைய முடியும்’’ எனக் கூறுகிறார். (பக்: 1009)

அவர் இந்நூலுக்கு வழங்கியுள்ள முகவுரையில் இஸ்லாம் பற்றிய தப்பான கருத்துக்கள் நிலவுவதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார்:

‘‘இலங்கையிலுள்ள முஸ்லிம் பக்தர்கள் அல்லாத சகலரும் ஏன் நானும் கூட இஸ்லாம் பற்றிய சொற்பமான அறிவையே பெற்றிருப்பதன் காரணமாகவும், இலங்கை முஸ்லிம் பக்தர்கள் அந்த மார்க்கத்தை மூடுண்ட நிலையில் பின்பற்றுவதன் காரணமாகவும், அந்த மதம் பற்றி இலங்கை மக்களுக்கிடையே பிழையான அபிப்பிராயம் தான் நிலவுகிறது என்ற உண்மையை இந்த ஆய்வினூடாக என்னால் புரிய முடிகிறது’’ எனக் கூறுகிறார்.

இலங்கையிலுள்ள முஸ்லிம் வழக்கறிஞர்கள் செய்திருக்க வேண்டிய பணியில் ஈடுட்ட ஒரு பெளத்தரான ஹேரத் அவர்கள் முஸ்லிம் சமூகம் பற்றிய தனது கண்ணோட்டத்தை இவ்வாறுதான் முன்வைக்கிறார். அவரது கருத்து மிகவுமே தெளிவானதும் சரியானதுமாகும். அதாவது தற்போது நாட்டில் நிலவும் முஸ்லிம், சிங்கள இன விரிசல்களுக்கான காரணங்களில் பிரதானமாக இரண்டு காரணங்களை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

1. முஸ்லிம்களது வாழ்வில் இஸ்லாமிய போதனைகள் இல்லாமை.

2.முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய தெளிவு இல்லாதிருப்பது.

இதில் முதலாவது பகுதி பற்றி ஏலவே பலரும் பேசியும் எழுதியும் வருவதனால் இரண்டாவது பகுதி பற்றி சற்று ஆராய வேண்டியிருக்கிறது.
இரு நபர்களுக்கிடையில் இரு குடும்பங்க ளுக்கிடையில் இரு சமூகங்களுகிடையில் நல்லுறவும் சமாதான, சகவாழ்வும் நிலவ வேண்டுமாயின் அங்கு பரஸ்பர புரிந்துணர்வு மிகவுமே அவசியப்படுகிறது. பரஸ்பர புரிந்துணர்வு பணத்தாலோ, அதிகாரத்தாலோ, பலாத்காரத்தாலோ கட்டியெழுப்பப்படுவதில்லை. அதற்கு அறிவுதான் துணை செய்யும். இன நல்லுறவும் அப்படியானதே. ஓர் இனம் மற்றைய இனத்தின் நம்பிக்கைக் கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், பழக்க வழக்கங்கள், பாரம்பரியங்கள், வரலாற்றுத் தடயங்கள் போன்றன பற்றி தெளிவாகத் தெரிந்திருப்பது அவசியமாகும். அந்த அறிவு பரஸ்பர நல்லுறவுக்கும் நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அறிவு சந்தேகங்களை களைய உதவும் என்பதுடன் கருத்துப் பரிமாறலுக்கான வாயில்களைத் திறந்துவிடும்.
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்த உண்மை பொருந்தும். 

அந்தவகையில் சட்டத்தரணி ஹேரத் சமாதான சகவாழ்வு பாதிக்கப்பட்டமைக்கான காரணத்தை மிகச் சரியாக இனம் கண்டுள்ளார்.
முஸ்லிம் சமூகம் பிற சமூகங்கள் பற்றி அறிந்திருப்பது மிகவுமே குறைவு என்பது ஒரு புறமிருக்க இந்நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்தும், இன்னும் தம்மைப் பற்றிய சரியான அறிவை சிங்கள சமூகத்துக்கு வழங்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். அதற்கான பல சான்றுகள் உள்ளன.

1. ஹலால், ஹராம் பற்றி இப்போது தான் நாம் சிங்களத்தில் விளக்க முயற்சிக்கிறோம். உணவில் மட்டுமின்றி குடும்ப வாழ்வு, ஆடை, சம்பாதிப்பு அனைத்திலும் இஸ்லாத்தில் ஹலால், ஹராம் பார்க்கப்படுகிறது என்று தெளிவுபடுத்த அதி தீவிர முயற்சி எடுக்கிறோம்.

2. அல்குர்ஆனுக்கான தரமான மொழிபெயர்ப்புக்கள் சிங்கள மொழியில் ஓரிரு வருடங்களுக்குள் தான் வெளிவந்தவண்ணமுள்ளன.

3. நாம் அறிந்த வகையில் ரியாளுஸ் ஸாலிஹீனுக்கான மொழி பெயர்ப்பை தவிர்ந்து வேறு எந்த ஹதீஸ் நூலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை.

4. இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய தெளிவை நாம் இதுவரை சிங்கள மொழியில் வழங்காததனால், இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் பற்றிய மிக மோசமான தப்பபிப்பிராயங்கள் நிலவுகின்றன. ரிஸானா நபீக்கின் விவகாரத்தைத் தொடர்ந்துதான் ஆங்காங்கே சில தெளிவுகள் வழங்கப்படுகின்றன. இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் பற்றிக் கூட முஸ்லிம் அல்லாத ஒருவர் நூலை எழுதும்வரை நாம் எதுவும் செய்யவில்லை.

5. முஸ்லிம் பெண்களது ஆடை, குர்பான் கொடுக்கும் முறை, பள்ளிவாயலுக்குள் இடம்பெறும் இபாதத்துக்கள், நோன்பிருக்கும் விதம் பற்றியெல்லாம் கிளப்பப்படும் ஐயங்களுக்கு நாம் தெளிவுகளை வழங்காததால் பெரும்சங்கடங்களில் சிக்கி வருகிறோம்.

முஸ்லிம்கள் சூடேற்றப்பட்ட ஒரு கல்லின் மீது ஏறி நின்றுதான் மிருகங்களை கொடூரமாக அறுக்கிறார்கள் என அண்மையில் ஒரு கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கூறினார். முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து அணியும் ஆடையானது சவூதி அரேபிய கலாசாரமென்று சிலரும், அது தாலிபானிய மரபு என்று வேறு சிலரும் எழுதியிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னால் ரமழான் மாத பகல் காலத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் தேநீர் பரிமாறப்பட்ட வேளை முஸ்லிம்கள் அதனை குடிக்காததை அவதானித்த பெளத்த மத குரு ஒருவர், உங்களது நோன்பின்போது நீர் ஆகாரத்தை எடுப்பதும் அனுமதிக்கப்படவில்லையா என்று கேட்டார். அவருக்கு உண்மையாக அது பற்றி தெரிந்திருக்கவில்லை என அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நண்பர் என்னிடம் கூறியது ஞாபகம் வருகிறது.

6. ஓரிரு வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுக்காக வழங்கப்பட்ட கருத்துக் கணிப்பு வினாக்கொத்தில் முஸ்லிம்கள் வணங்கும் இறைவனின் பெயர் யாது என்ற ஒரு வினா இருந்தது. அதற்கு ஒரு சிங்கள பாடசாலையின் அதிபர் ‘‘முஹம்மத்’’ என பதிலளித்திருந்தார்.
நாம் வணங்கும் இறைவனின் பெயரைக்கூட இந்த நாட்டின் பெளத்தர்களில் ஒருவர் அதுவும் ஒரு கல்விமான் தெரியாதிருப்பது பெரும் விந்தையாகும்.

7. ‘‘இணை வைப்பாளர்களை கண்ட இடத்தில் கொல்லுங்கள்’’ என்ற குர்ஆனிய வசனத்தை அரபியில் எழுதி அதன் மொழிபெயர்ப்பையும் இணைத்து குளியாப்பிட்டிய சம்பவத்தின்போது சில ஆர்ப்பாட்டக்காரர்கள் விநியோகத்தார்கள். அந்த வசனம் முஸ்லிம் அல்லாத சகலரையும் கொலை செய்யும்படி நேரடியாவே கூறுவதாக பெளத்தர்களின் சிலர் கூறுகிறார்கள். இது மக்கத்து காபிர்கள் பற்றி வந்த வசனமேயன்றி உலகிலுள்ள எல்லா பிற சமயத்தவர்களையும் பற்றிக் கூற வந்ததல்ல என்று அது இறங்கிய பின்னணியை பார்த்தால்தான் புரியலாம்.

மேற்சொன்ன சான்றுகளை வைத்து நோக்கும்போது இந்த நாட்டில் சுமார் 90% ஆன பிற சமயத்தவருக்கு எமது மார்க்கம் பற்றிய போதிய தெளிவு கிட்டவில்லை என்று கூற முடியும். இதற்கு நாம் மூடுண்ட ஒரு வாழ்வை மேற்கொள்வதும் ஒரு காரணமாகும். பிற சமயத்தவரோடு நாம் பழகுவது குறைவு என்பதுடன் அவ்வாறு பழகினாலும் மார்க்கத்தின் போதனைகளைப் பற்றி கூறுவதற்கான சந்தர்ப்பங்கள் கிட்டினாலும் அதனைச் செய்யாதிருக்கிறோம். இஸ்லாம் பற்றி அவர்கள் சிலபோது சில கேள்விகளை எழுப்பும்போது உரிய பதில்களைக் கொடுப்பதற்கு முதலில் அது விடயமான தெளிவு எமக்கிருப்பதில்லை. அந்தத் தெளிவு இருந்தாலும் மொழியும் ஒரு தடையாக இருக்கிறது. சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியரில் பெரும்பாலானோருக்கு இஸ்லாம் பற்றிய தெளிவு போதாமலிருப்பதால் அவர்களுக்கு மொழியறிவு இருந்தும், விடயதானம் சம்பந்தமான அறிவு பற்றாக்குறையாக இருப்பதால் இந்த நிலை உருவாகிறது.

சிங்கள மொழியில் வெளிவந்துள்ள இஸ்லாமிய நூல்கள் இலங்கை சிங்கள சமூகத்தின் தேவையோடு ஒப்பிடுகையில் 5% ஐயும் எட்டவில்லை எனலாம். சிங்கள மொழியிலான வெப் தளங்கள் விரல் விட்டு எண்ணத் தக்கவை மாத்திரமே. அவற்றை ஆய்வு செய்து பார்க்கையில் இஸ்லாத்தை துறை போகக் கற்ற அதேவேளை, சிங்கள மொழியிலும் தேர்ச்சிமிக்கவர்களது ஆக்கங்கள் அங்கு மிகக் குறைவாக இருப்பதனால் சிலபோது இஸ்லாமிய மூலாதாரங்களிலிருந்து மேற்கோள்காட்டி நவீன தேவைகளோடு அவற்றை ஒப்பு நோக்கி அவை எழுதப்படாத குறையை அவதானிக்க முடிகிறது.

‘பிரபோதய’ எனும் சஞ்சிகை காத்திரமான ஒரு பங்களிப்பை செய்த போதிலும் சமூகத் தேவைக்கு முன்னால் அது எவ்வகையிலும் போதாது என்று கூறலாம்.
இந்நாட்டில் 20 இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்தும் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிங்களத்தில் கலந்துரையாடல்கள், விவாதங்களைச் செய்வதற்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந்து ஆட்களைத் தேடுவது மிகவும் கடினமான காரியமாகிவிட்டது. சிங்கள மொழியில் நல்ல தேர்ச்சி இருக்கும். ஆனால் இஸ்லாமிய ஞானங்களில் ஆழமிருக்காது. அல்லது இஸ்லாமிய அறிவு ஞானமிருக்கும். சிங்கள மொழிப் பாண்டித்தியமிருக்காது. அல்லது இரண்டுமிருக்கும். சமயோசிதமோ வாதத்திறனோ, சமகாலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக தீட்டப்படும் சதிகள் பற்றிய தெளிவோ இருக்கமாட்டாது. அதாவது ஒன்றிருந்தால் இன்னொன்றில்லை என்ற நிலை தோன்றியிருக்கும்.

எமது கையில் உள்ள சத்தியமான இஸ்லாத்தை பிறருக்கு சேர்ப்பிப்பதற்கான சரியான உத்திகள் கையாளப்பட வேண்டும். இந்த நிலையைப் பற்றி கருத்து வெளியிடும் நவீன கால அறிஞர் அஷ்ஷெய்க் அல்- கஸ்ஸாலி, ''''இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதன் பக்கமே நியாயமிருக்கிறது. ஆனால் அதற்கு சார்பாக வாதிடும் வழக்கறிஞர்கள்தான் கையாலாகதவர்களாக இருக்கிறார்கள்’’ என்கிறார். அதாவது சத்தியத்தின் காவலாளிகளாக இருப்போர் பலவீனர்களாக இருப்பதனால் சத்தியமும் சேர்ந்து தோற்றுப் போகிறது என்பது அவரது அபிப்பிராயமாகும்.

இலங்கையின் குடித்தொகையில் சுமார் 75 சதவிகிதமானவர்களான சிங்களத்தை தாய்மொழியாகக் கொண்ட பெளத்த, கிறிஸ்தவ சமயத்தவர்களுக்கு நாம் எமது மதத்தை எத்தி வைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். குர்ஆன் ‘‘மனிதர்களுக்கான வழிகாட்டி’’. முஹம்மது (ஸல்) அவர்கள் உலகத்தாருக்கான அருட்கொடை என்றுதான் குர்ஆன் கூறுகிறது. அந்த வகையில் ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என்ற முதுமொழிக்கு அமைய மாத்திரமின்றி தஃவாப் பணி ஒவ்வொரு முஸ்லிமின் மீதான பர்ளு கிபாயாவாக இருப்பதால் குர்ஆனை சுன்னாவை அவை எமக்கு மட்டும் தான் என்று சொந்தம் கொண்டாடும் உரிமை எந்த முஸ்லிமுக்கும் இல்லை. இஸ்லாத்தை மறைப்பது பயங்கர குற்றமாகும். அவ்வாறு மறைப்பவர்களை அல்லாஹ் தனது அருளைவிட்டும் துரத்திவிடுவதாக குறிப்பிடும் வசனம் சூரா பகராவில் இடம்பெற்றுள்ளது. (2:159)

இஸ்லாமிய தஃவாப் பணியைச் செய்வது பற்றித்தான் நாம் சிந்திக்காது விட் டாலும் இஸ் லாத் தையும் முஸ் லிம் க ளையும் பற் றிய சந் தே கங் களைக் களை வ தற் கா வது முயற்சி எடுப் பது காலத்தின் தேவையும் மார்க்கக் கட மை யு மாகும். தப் ப பிப் பி ரா யங்கள் நிலவும் கால மெல்லாம் சந் தே கங்கள் வலு வ டையும். சந் தே கங்கள் நிலவ ஆரம் பித்தால் பரஸ் பர உறவு பாதிக் கப் படும்; உதவி, ஒத் தா சைகள் இடம் பெ றாது. சமூக வாழ்வில் விரி சல்கள் ஏற் பட்டு ஈற்றில் அது வன் மு றை க ளுக்கு இட்டுச் செல்லும். இலங் கையில் நாம் அந்தக் கட் டத் துக்கு வந் தி ருக் கிறோம் எனலாம்.

பெரும் பான்மை பெளத் தர்கள் முஸ் லிம் களைப் பற்றி மனதில் கொண் டி ருக்கும் கருத் துக்கள் பார தூ ர மா ன வை யாகும். இஸ் லாத்தில் பெண் க ளுக்கு உரிமை கிடை யாது. இஸ்லாம் வாளால் பரப் பப் பட் டது; இஸ் லா மிய சட் டங்கள் காட் டு மி ராண் டித் த ன மா னவை; இஸ் லாத்தில் சக வாழ்வு, மத நல் லி ணக்கம் என்ற பேச் சுக்கே இட மில்லை. ஏற் க னவே பெளத்த நாடு க ளாக இருந்த பல நாடு களின் மக்கள் படு மோ ச மாகக் கொல் லப் பட்ட பின் னரே அங்கு இஸ்லாம் நுழைந் தது போன்ற கருத் துக் களை சர் வ தேச ரீதி யாக இஸ் லா மிய எதி ரிகள் திட் ட மிட்டுப் பரப்பி வரு கி றார்கள். இந்த சந் தே கங்கள் நமது நாட் டுக் குள்ளும் நுழைந் து விட் டன. இந்த பின் ன ணி யி லி ருந் துதான் பெளத் தர்கள் முஸ் லிம் களை பார்க்க ஆரம் பித் தி ருக் கி றார்கள்.

இது அவர் க ளது தவ றாகும் என்று நாம் கூறி னாலும் போதிய தெளிவை நாம் இது வரை வழங் கா தி ருப் பது நிலை மையை மோச ம டையச் செய் தி ருக் கி றது. பாமியான் புத்தர் சிலை உடைப்பு, பங் க ளா தேஷில் சிலைகள் உடைப்பு, ரிஸானா நபீக் மரண தண் டனை, தலி பான் க ளதும் அல்- கொய் தாக் க ளதும் நட வ டிக் கைகள், Innocence of Muslim, விஸ் வ ரூபம் போன்ற திரைப் ப டங்கள், சாத் தா னிய வச னங்கள், லஜ்ஜா போன்ற நூல்கள் , டென்மார்க் காட் டூன்கள் என் பன வெளி வந் தன. பின்னால் இந்த நாட்டில் இஸ் லாத் திற் கெ தி ரான வெறித் த ன மான சூறா வளிச் சிந் த னைகள் பரப் பப் பட்டு வரு கின் றன.

இஸ்லாம் அறி வுக்கு முக் கி யத் து வ ம ளிக்கும் மார்க்கம் என்ற வகை யிலும் கலந் து ரை யா ட லுக்கு அது தூண் டுதல் வழங் கி யி ருக் கி றது என்ற வகை யிலும் தூய மார்க் கத்தை காப் பாற்றும் பொறுப்பை நாம் சுமந் தி ருக் கிறோம்.

சர்வ உல கங் க ளது இரட் சகன் அல் லாஹ் வி ட மி ருந்து வந்த இஸ் லாத்தில் அணு வ ள வேனும் பிழைகள் இல்லை என்றும் அதனை அமுல் நடத்தும் மக்கள் விடும் தவறு, இஸ் லாத்தின் தவறால் பார்க் கப் ப டா லா காது என்றும் நாம் விரி வாகத் தெளி வு ப டுத்த வேண்டும். சகல தொடர்பு சாத னங் க ளையும் நாம் பயன் ப டுத்த வேண்டும். ''''அவர் க ளோடு நீங்கள் மிக வுமே அழ கிய வழி மு றையைப் பயன் ப டுத்தி கருத்துப் பரி மாறல் செய் யுங்கள்’’ என்று உரை யா டலின் (Dialogue) அவ சி யத்தை அல்லாஹ் வலி யு றுத் தினான். இஸ் லாத் திற்கும் முஸ் லிம் க ளுக்கும் எதி ராக குறை ஷி யர்கள் வசைக் கவி பா டிய போது இஸ் லாத்தின் தரப்பை பலப் டு பத்த ஹஸ்ஸான் பின் தாபித் போன்ற கவி ஞர் களை நபி (ஸல்) அவர்கள் நிய மித் தார்கள். யூதர் க ளுடன் கடிதத் தொடர்பு வைக் கவும் அவர் க ளி ட மி ருந்து வரும் கடி தங் களை வாசிக் கவும் வச தி யாக யூதர் க ளது ஸுரி யானி மொழியைக் கற் கும் படி ஸைத் பின் தாபித் (ரழி) அவர் களை நபி (ஸல்) அவர்கள் பணிக்க அவர் இரு வாரங் களில் அம் மொ ழியைக் கற் ற தாக வர லாறு கூறு கி றது. வலீத் இப்னு முகாரா முன் வைத்த வாதங் களை முறி ய டிக்க அல்லாஹ் சூறதுல் கலமில் சிறந்த அணு கு மு றை களைக் கையா ளு கிறான்.

மதக் கலந் து ரை யா டல் க ளது (Interfaith Dialogue) யுகத்தில் நாம் வாழு கிறோம். பிற ருக்கு கூறு வ தற்கு மட் டு மின்றி, பிற ரி ட மி ருந்து செவி ம டுக் கவும் நாம் பழக வேண்டும்.

ஆயு தத்தால் செய் யப் படும் யுத் தத்தை விட பேனாவால் சிந் த னையால் செய் யப் படும் யுத்தம் தாக் க மிக் கதும் நீடித்த விளை வு களை தர வல் ல து மாகும். எனவே சிங் கள மொழி யி லான நூல்கள், மத் ர ஸாக்கள், வெப் த ளங்கள் சஞ் சி கைகள், ஆய் வுகள், உபந் நி யா சங் க ளுக் கான தேவை உள் ளது. பெளத்த முஸ்லிம் சக வாழ் வுக் கான அடித் த ளங் களில் ஒன் றா கவும் இது அமையும்.
சிங் கள மொழியில் தேர்ச் சி மிக்க தாஇக் களை உரு வாக் கவும் தர மான ஆய்வு ரீதி யான நூல் களை வெளி யி டவும் மனம் கவர் இஸ் லா மிய உபந் நி யா சங் களை சிங் க ளத்தில் நிகழ்த்தும் பேச் சா ளர் களை உரு வாக் கவும் சகல ஊடக சாத னங் களை பயன் ப டுத்தி இஸ் லாத்தை தெளி வு ப டுத் தவும் முஸ் லிம் க ளது பணம் செல வி டப் ப ட வேண் டிய தேவை எழுந் தி ருக் கி றது.

சுன் னத் தான காரி யங் க ளுக்கு அனு ம திக் கப் பட்ட அள வை விட அதி க மாக செல வ ளிப் பதும் ஆடம் ப ர மான வைப வங் க ளுக் காக செலவளிப்பதும் இடைநிறுத்தப்பட்டு நாம் மேற்சொன்ன அறிவு மற்றும் தஃவா பணிகளில் மறுமையின் கூலியை எதிர்பார்த்து பயன்மிக்க அறிவுக்காவும் ஸதகதுல் ஜாரியாவுக்காகவும் எமது சொத்து செல்வங்கள் செலவளிக்கப்பட வேண்டும்.
அறிவை அறிவால் வெல்வது;கருத்தைக் கருத்தால் எதிர்ப்பது; ஆதாரங்களை ஆதாரங்களால் முறியடிப்பது என்ற நிலைப்பாடுகளுக்கு இலங்கை முஸ்லிம் சமூகம் வரும்போது மாத்திரமே முஸ்லிம் முஸ்லிமல்லாதவர்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை கட்டியெழுப்ப முடியும். (vidivelli)


Home    ||  Sri Lanka Think Tank-UK (Main Link) ||  Empowered by; FB Page  (Like us) ||  FB Group  (Request)   || FB Wall (Add)    ||

No comments:

Post a Comment