Pages

Saturday 5 March 2011

பயிற்றுவித்தலுக்கான சமூக நிறுவனங்கள் முக்கியத்துவமும் சிந்திக்க வேண்டிய பக்கங்களும்

இஸ்லாமிய பணியில் அடிப்படையானது தர்பிய்யத் - பயிற்றுவித்தல். பயிற்றுவித்தல் என்பது ஒரு விரிந்த சொல். அறிவு, ஆன்மீகம் , ஒழுக்கப் பண்பாடுகள் , சமூக நடத்தை போன்ற அனைத்து வகையிலும் இஸ்லாமியரீதியாகப் பயிற்றுவித்தலை அது குறிக்கும். இப்பயிற்றுவித்தலே சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் இஸ்லாத்தைப் நடைமுறைப்படுத்தலுக்கான அடிப்படையாகும். தண்டனையும் , அரச கண்கானிப்பும் இங்கு கிடையாது. பெரும்பான்மை சமூகத்திற்கு முன்னால் இஸ்லாமிய ஆளுமையை காத்துக் கொள்ளவும் இதுவே முதன்மையான வழியாகும்.



பயிற்றுவித்தலுக்கான எமது ஸ்தாபன அமைப்புக்கள் பள்ளி, குடும்பம் , பாலர் முன் பாடசாலை, அஹதிய்யா அமைப்பு, அரச பாடசாலை, என்பனவாகும். இவையே முழு சமூகத்தையும் பயிற்றுவிக்கும் ஸ்தாபன ஒழுங்குகள். இயக்கங்கள் என்பவை முழு சமூகத்தையும் பயிற்றுவிக்கும் ஸ்தாபனங்களல்ல. அவை அடிப்படையில் இஸ்லாத்திற்கெதிரான சக்திகளோடு போராடும் அமைப்புக்கள். இஸ்லாம் நடைமுறையாவதற்குத் தடையாக உள்ளவற்றை நீக்க உழைக்கும் ஸ்தாபனங்கள் என சுருக்கமாக சொல்லலாம். இலங்கை போன்றதொரு சிறுபான்மை சமூகத்தில் அவை வித்தியாசமானதொரு வடிவத்தை எடுக்க வேண்டுமென்பதிலபயிற்றுவித்தலுக்கான எமது ஸ்தாபன அமைப்புக்கள் பள்ளி, குடும்பம் , பாலர் முன் பாடசாலை, அஹதிய்யா அமைப்பு, அரச பாடசாலை, என்பனவாகும். இவையே முழு சமூகத்தையும் பயிற்றுவிக்கும் ஸ்தாபன ஒழுங்குகள். இயக்கங்கள் என்பவை முழு சமூகத்தையும் பயிற்றுவிக்கும் ஸ்தாபனங்களல்ல. அவை அடிப்படையில் இஸ்லாத்திற்கெதிரான சக்திகளோடு போராடும் அமைப்புக்கள். இஸ்லாம் நடைமுறையாவதற்குத் தடையாக உள்ளவற்றை நீக்க உழைக்கும் ஸ்தாபனங்கள் என சுருக்கமாக சொல்லலாம். இலங்கை போன்றதொரு சிறுபான்மை சமூகத்தில் அவை வித்தியாசமானதொரு வடிவத்தை எடுக்க வேண்டுமென்பதில்

சந்தேகமில்லை. இக்கருத்தை இங்கு விளக்குவது எமது நோக்கமல்ல. எமது தலைப்புக்கு வருவோம்.
பயிற்றுவித்தலுக்கான ஸ்தாபன ஒழுங்குகள் இருந்தாலும் எமது இஸ்லாமிய ரீதியான வாழ்வமைப்பை நாம் பெறவில்லை. நிறைய தீமைகள் கொண்டதாகவும் , இஸ்லாத்தை விட்டுத் தூரமாகியுமே அது வாழ்கிறது. அந்த ஸ்தாபனங்களில் காணப்படும் பாரிய பலவீனங்களும் , குறைபாடுகளுமே இதற்குக் காரணம்.
இங்கு நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய முதலாவது உண்மை என்னவெனில் குறிப்பிட்ட அவ்விஸ்தாபனங்களுக்கு இஸ்லாமிய வளத்தை எங்கிருந்து பெற முடியும்?

இங்கு தான் இஸ்லாமிய கல்லூரிகளின் பங்களிப்பு பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. எமக்கு ஏன் மத்ரஸாக்கள்? அவை சிறுபான்மை சமூகத்தில் என்ன பங்கை ஆற்ற முடியும்?

மத்ரஸாக்கள் யாரை உருவாக்க முனைகின்றன? அவர்கள் பள்ளிகளில் கதீப்களாகவும் , தொழுவிக்கும் இமாம்களாகவும் இருப்பார்கள். அதுவே அவர்களது பணி என்பதா? அத்தோடு சமூகத்தில் எழும் மார்க்கப் பிரச்சினைகளுக்கு பத்வா வழங்கும் பணியையும் செய்பவர் என்பதா?

மத்ரஸாக்களில் பாடத்திட்டம் ஒரு உபதேசிப்பவர் - (வாயில்) – உருவாக்கப்படும் அமைப்பைக் கொண்டுள்ளதா? அல்லது ஆன்மீக ரீதியாக பயிற்றுவிக்கத்தக்க முரப்பியை அப்பாடத்திட்டம் உருவாக்குமா? அல்லது ஒரு ஆலிமை, இஸ்லாமிய அறிவு ஜீவியை உருவாக்கும் தரத்தில் அப்பாடத்திட்டம் உள்ளதா? முஸ்லிம்களை அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக வழி நடாத்தத்தக்க தலைமைகளை அப்பாடத்திட்டம் உருவாக்குமா? மார்க்கத் தீர்ப்புக்களை வழங்கத்தக்க ஒரு சாதாரண சட்ட அறிஞரை பகீஹை உருவாக்குமா?
இவற்றில் எத்தகைய பாடத்திட்டத்தை கொண்டுள்ளன? மேற் சொன்னவர்களில் எல்லா வகையினர்களும் எமது சமூகத்திற்கு தேவையானவர்களா? அல்லது குறிப்பிட்ட நபர்கள் மட்டும் தேவையா?

இவை மத்ரஸாக்கள் சிந்திக்க வேண்டிய கேள்விகள் தமது பாடத்திட்டம் குறித்து மேற்சொன்னவரெல்லாம் அவர்கள் சிந்திக்க வேண்டும். அவற்றை விரிவாக விளக்க நாம் வரவில்லை. இங்கு நாம் விளக்க வந்த விடயம் சமூகத்தை இஸ்லாமியமயப்படுத்துவதில் பெரும் பங்குவகிக்கும் பயிற்றுவித்தலில் தர்பிய்யத்தில் மத்ரஸாக்கள் பிரதான பங்கு வகிக்க வேண்டும் என்ற உண்மையாகும்.

இந்த வகையில் குடும்பம் என்ற நிறுவனத்தில் வழிகாட்டிகளாக மத்தரஸாக்களிலிருந்து பட்டம் பெற்று வெளியாவோர் அமைய வேண்டும்.

நல்ல கணவன், நல்ல மனைவி, சிறந்த தாய், சிறந்த தந்தை என்பவர்களை உருவாக்குவது அடிப்படைப் பணி. இப்பகுதியில் உரிய வழிகாட்டல்களையும், பயிற்சிகளையும் அவர்கள் வழங்க வேண்டும்.

இஸ்லாமிய சீர்திருத்தப் பகுதியில் அடிப்படையானதும், முதன்மையானதும் சிறுபிள்ளைகளை பயிற்றுவித்தலாகும். பருவ வயதடைந்ததன் பின்னர் பயிற்றுவிப்பதென்பது மிகவும் சிரமமானது. மனமும், அறிவும் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் உருவானதன் பின்பு அதனைமாற்றி இன்னொரு அமைப்புக்குக் கொண்டுவரல் மிகவும் சிரமமானது. கட்டமைந்த ஆளுமையை வேறொரு அமைப்பில் மீள் ஒழுங்கு படுத்தல் மிகக் கடினம். இந்நிலையில் தான் சிறுபிள்ளைகளில் கவனம் செலுத்துதல் மிகவும் முதன்மையாகிறது.

அடுத்த நிறுவனம் பள்ளி இஸ்லாமிய அறிவைப் பரப்புவதிலும், பயிற்றுவிப்பதிலும் அது பிரதான இடத்தை வகிக்க வேண்டும். ஜூம்மா குத்பா கிராமத்தில், அல்லது நகரத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் குறிப்பிட்ட செய்தியை அறிய, அனுப்ப மிகச் சிறந்த சாதனம். கதீப் மிகவும் கவர்ச்சிகரமான பேச்சாளராகவும், விடயதானங்களை கவனமாகத் தெரிவுசெய்பவராகவும், அவற்றை ஆதாரபூர்வமாகவும் சிறந்த முறையில் முன்வைக்கும் திறமை மிக்கவராகவும் இருக்க வேண்டும். இந்நிலையில் வருடத்திற்கு 52 கிழமைகள் ஓதும் குத்பா மூலம் குறிப்பிட்ட ஊரில் அல்லது ஓதும் குத்பா மூலம் குறிப்பிட்ட ஊரில் அல்லது நகரத்தில் ஒரு கருத்து மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம். இத்தோடு பள்ளி இமாமின் பணி முடிவடைவதில்லை. பல்வேறு நிகழ்ச்சிகளுடாக அவர் ஊர்மக்களைத் திட்டமிட்டுப் பயிற்றுவிக்கவும் வேண்டும்.

பாலர் பாடசாலை, அஹதிய்யா அமைப்பு என்பன சிறுபிள்ளைகளை பயிற்றுவிப்பதற்கான நிறுவன ஒழுங்குகள். இவை இப்போது நிறைய குறைபாடுகளுடனும், பலவீனங்களுடனும் இயங்குகின்றன. இவற்றைப் பலப்படுத்தி சீரிய முழுமையான நிறுவன அமைப்புக்கு கொண்டுவருதல் அவசியம். இப்பகுதியும் மத்ரஸாக்களில் பட்டம்பெற்றோர் ஏற்க வேண்டிய முக்கிய பொறுப்பாகும்.

அடுத்து வருவது பாடசாலை. இது இஸ்லாமிய வட்டத்தில் இயங்குவதில்லை. எனினும் இஸ்லாம் பாடத்தின் ஊடாகவும், பாடவிதானத்திற்கு வெளியே குறிப்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஊடாக பாடசாலையில் இஸ்லாமிய நடத்தையையும், இஸ்லாமிய போக்கையும் உருவாக்கிவிட முடியும். இந்த வகையில் மத்ரஸாவில் பட்டம் பெற்று வெளியாவோர் இத்தகைய பணிக்கு தயார்படுத்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  
முஸ்லிம் சமூகத்தில் இந்தப் பயிற்றுவித்தல் என்பது அடிப்படையான பணி. அதனைச் செய்வதற்கான ஸ்தாபன ஒழுங்குகளும் ஏதோ ஒரு வகையில் காணப்படுகின்றன என்ற இந்த விடயங்கள் தெளிவு அல்குர்ஆன் மத்ரஸாவையும், அஹதிய்யாவையும் பொறுத்தவரையில் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களான மத்ரஸாக்களில் பட்டம் பெற்று வெளியானோரின் பங்களிப்பு ஓரளவு உள்ளது. ஆனால் அது முழுமை பெற்றதாகவோ, முழுமையான ஸ்தாபன ஒழுங்குகளையும், சிறந்த நிர்வாக ஒழுங்குகளைப் பெற்றதாகவோ இல்லை. இதற்கு இரு காரணங்கள்.
1.            இந்த நோக்கத்தை இலக்காகக் கொண்டு மத்ரஸாக்கள் தமது மாணவர்களைப் பயிற்றுவிக்கவில்லை.
2.            குர்ஆன் மத்ரஸாக்களும், அஹதிய்யா பாடசாலை அமைப்பும் சமூகத்தில் உரிய அந்தஸ்த்தைப் பெறவில்லை.

பொருளாதார ரீதியாக மிகவும் தாழ்ந்த நிலையிலேயே அவை காணப்படுகின்றன். வகுப்பு ஒழுங்குகள், வரவு பரீட்சை, திறமை, திறமையற்ற மாணவர்கள் என்ற நிர்வாக ரீதியான ஒழுங்குகளும் அங்கு சீராக இல்லை.
அத்தோடு இவற்றிற்காக இட வசதிகளும் மிகவும் எளிமையாகவே காணப்படுகின்றன. இவ்வாறு சமூகம் இந்த நிறுவனங்களுக்கு உரிய பெறுமானத்தை கொடுக்கவில்லை.
பள்ளிகளில் இயங்குவோர் மத்ரஸாக்களில் பட்டம் பெற்று வெளியானோரே. ஆயினும் பள்ளிகளில் 5 நேரங்கள் தொழுவித்தல், குத்பா நடாத்தல் என்ற இரண்டோடும் மட்டும் அவர்களது பணி நின்றுவிடுகிறது. மிகப் பெரும்பாலான பள்ளிகள் ஊரைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாக இயங்குவதில்லை. அத்தோடு குத்பாக்களும் கூட மிகச்சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தப்படுகின்றன என்று கூற முடியாதுள்ளது.

குடும்பங்கள் மகிப் பெரும்பாலும் இஸ்லாமியப் பயிற்றுவித்தலுக்கான நிறுவனங்களாக இயங்குவதில்லை. குடும்பத்தலைவர்களுக்கோ, தலைவிகளுக்கோ, குடும்பப் பயிற்றுவித்தல், நிர்வாகம் சம்பந்தமான அறிவையும், பயிற்சிகளையும் வழங்குவதற்கான எந்த ஸ்தாபன ஒழுங்குகளும் எம்மிடமில்லை. குடும்ப நல ஸ்தாபனம், சிறுவர் பராமரித்தல் பயிற்றுவித்தல் ஸ்தாபனம் என்ற இரண்டும் மிக அடிப்படையானவை எனினும் அவற்றிற்கான எந்த ஒழுங்கும் எம்மிடம் கிடையாது.

பயிற்றுவித்தலில் எமது இஸ்லாமிய ஆளுமையைக் காப்பாற்றிக் கொள்ளவும், சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான அடிப்படையான வழிமுறை அத்தகைய பயிற்றுவித்தலுக்கான ஓரளவிலான ஸ்தாபனங்களும் எம்மிடம் உள்ளன. இங்கு ஏற்கனவே நாம் விளக்கியதன் படி தேவைப்படுபவன கீழ்வருமாறு:

1.            இத்தகைய பயிற்சி நிறுவன ஒழுங்குகளின் முக்கியத்துவம் பற்றி சமூகத்திற்கு அறிவூட்டல். அவர்களின் கவனயீர்ப்பைப் பெறச் செய்தல்.
2.            இஸ்லாமிய கல்வி நிறுவனங்களான மத்ரஸாக்கள் தமது மாணவர்களின் பணிகளில் முதன்மையான பணி இத்தகைய நிறுவனங்களை இயக்குதல் என்ற உண்மையைக் கவனத்திற் கொண்டு அதற்குத் தேவையான பயிற்சிகளை வழங்கல்.

இவ்விரு விடயங்களில் வெற்றி பெற்றால் இத்தகைய பயிற்றுவித்தல் நிறுவனங்களில் காணப்படும் பலவீனங்களையும் குறைபாடுகளையும் நீக்குவது இலகுவாகும்.

பயிற்றுவித்தலில் எமது இஸ்லாமிய ஆளுமையைக் காப்பாற்றிக் கொள்ளவும், சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான அடிப்படையான வழிமுறை அத்தகைய பயிற்றுவித்தலுக்கான ஓரளவிலான ஸ்தாபனங்களும் எம்மிடம் உள்ளன. இங்கு ஏற்கனவே நாம் விளக்கியதன் படி தேவைப்படுபவன கீழ்வருமாறு:

1.            இத்தகைய பயிற்சி நிறுவன ஒழுங்குகளின் முக்கியத்துவம் பற்றி சமூகத்திற்கு அறிவூட்டல். அவர்களின் கவனயீர்ப்பைப் பெறச் செய்தல்.
2.            இஸ்லாமிய கல்வி நிறுவனங்களான மத்ரஸாக்கள் தமது மாணவர்களின் பணிகளில் முதன்மையான பணி இத்தகைய நிறுவனங்களை இயக்குதல் என்ற உண்மையைக் கவனத்திற் கொண்டு அதற்குத் தேவையான பயிற்சிகளை வழங்கல்.

இவ்விரு விடயங்களில் வெற்றி பெற்றால் இத்தகைய பயிற்றுவித்தல் நிறுவனங்களில் காணப்படும் பலவீனங்களையும் குறைபாடுகளையும் நீக்குவது இலகுவாகும்.

இஸ்லாமிய இயக்கங்களும் குறிப்பிட்ட சிரிய வட்டத்தில் தமது பயிற்றுவித்தல் என்ற நிலைக்கு அப்பால் இப்படி ஒரு சமூகக்களத்திலான பயிற்றுவித்தல் குறித்துக் கவனம் செலுத்தல் அவசியம். அதற்கு தமது இறுகிய கட்டமைப்பைத் தளர்த்தி சமூகப் பொது நீரோட்டத்தோடு கலத்தல் அவசியமானது எனலாம். இயக்கங்கள் இவ்வாறு சிந்திக்குமானால் இப்பயிற்றுவித்தல் நிறுவனங்களை செயற்திறன் மிக்கதாக மாற்றுவதை மேலும் இலகுபடுத்த முடியும்.  By. Br. MAM மன்ஸூர் (Plus*)

Home           Sri Lanka Think Tank-UK (Main Link)           

No comments:

Post a Comment