Pages

Thursday, 10 February 2011

கவிதை; ‘மாற்றம் தேடும் மனிதர்கள் நாம்’

இஸ்லாம்  பாடல் ,கவிதை , நடனம் , நகைச் சுவை , அழகு உணர்ச்சி என்று பல பரிமாணங்களை கொண்டது அல்லாஹ்வின் தூதர் பாடல்களை பாடினார்கள் பாடல்களை, கவிதைகளை பாடுமாறு கூறினார்கள் அழககை ரசித்தார்கள் நடனமாட அனுமதித்தார்கள் முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போதும், துன்பமாக இருக்கும்போதும், குடும்பமாக, சமூகமா இருக்கும்போதும் பாடல்களை கவிதைகளை பாடினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் பற்றி அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸில்’  ஹபஸாத் தோழர்களுக்கு விளையாடவும் ரக்ஸ் என்னும் போர்ப்பறை நடனம் ஆடவும் தனது மஸ்ஜிதில் அனுமதி வழங்கினார்.  ஒரு முறை இதைத் தடுக்க முற்பட்ட போது நபிகள் அவரைத் தடுத்து நிறுத்தினார். ஹபஸிக்களைத் தொடர்ந்தும் அந்நடனத்தை ஆடுமாறு கட்டளை பிறப்பித்தார்  விரிவாக  பனு அர்பிதாக்களே ஆடுங்கள், எமது மார்க்கத்திலுள்ள தாராளத் தன்மையை யூதர்கள் அறிந்து கொள்ளட்டும் -முஸ்னத் அல் ஹுமைதி-என்று சப்தமிட்டுக் கூறினார்.  என்ற அறிவிப்புகள் இஸ்லாத்தின் பல பரிமாணங்களை எமக்கு காட்டுகின்றது அன்று முஸ்லிம்கள் பாட்டியும் ஆடியும் இருக்கின்றார்கள் , கவிதைகள் படியிருக்கின்றார்கள் எதிரிகளின் கையில் சிக்கி உயிர் போகும் வேளையிலும் அழகாக கவி பாடியுள்ளார்கள்
‘-நான் இறக்குமிடத்தில் சூழ்ந்துள்ள இராணுவம் இவையனைத்தையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன் இறைவனை நான் நிராகரிக்கவேண்டுமென பெரிதும் விரும்பினர் மரணம் எனக்கு அதைவிட மிக எளிது என் கண்கள் அழுகின்றன, நீர் ஓட இடமில்லை எனக்கிழைத்த துன்பத்தைத் தாங்கஅர்ஷின் அதிபதி எனக்குப் பொறுமையளித்தான் அணு அணுவாக அவர்கள் என்னைக் கொல்கின்றனர் நான் முஸ்லிமாகக் கொலையுறுவதால் மரணம் ஒரு பொருட்டல்லவே!’ - குபைப் றலியல்லாஹு அன்ஹு அவர்களைக் எதிரிகள் கொலைசெய்ய கழுவிலேற்றிய தறுவாயில் அவர் பாடிய கவிதையின் சில வரிகள் அவை – இஸ்லாம் பல பரிமாணங்களை கொண்டதை போன்று கவிதைகளும் பல பக்க பரிமாணங்கள் கொண்டது என்ற வகையில் ஹாரூன் மூஸாவின் இரண்டாவது கவிதையை இங்கு பதிவு செய்கின்றோம்
ஹாரூன் மூஸா
‘கிலாபத்’ வீழ்த்தப்பட்டது,
தாங்க முடியாத சோகத்தால்
இதயம் நிறைந்தது.
‘பலஸ்தீன்’ ஆக்கிரமிக்கப்பட்டது,
அங்கத்தை துண்டாக்கிய வேதனை
உடலெங்கும் பரவியது.
‘ஆப்கான்’ அழிக்கப்பட்டது,
வார்த்தைக்குள் வராத துயரம்
கண்களை ஆறாக்கியது.
‘ஈராக்’ இடிக்கப்பட்டது,
கனவிலும் காணாத கவலை
தூக்கத்தை அபகரித்தது.
‘ஷரி அத்’ தை சாடினார்கள்,
முழு ‘ஷரிஅத்தை’யும் அமுலாக்கும்
‘கிலாபத்தே’ இலக்கென்றோம்..
குர்ஆனை மிதித்தார்கள்,
ஒருவருக்கும் தயங்காமல்
குரல் கொடுத்தோம்.
ஓதி செயற்பட்டோம்.
தூதரை அவமதித்தார்கள்,
ஒரு கணமும் ஓயாமல்
பதில் கொடுத்தோம்.
நபி வழியில் நாம் நடந்தோம்.
ஈமானை மறுக்கலாம்,
இஸ்லாத்தை மறைக்கலாம்,
முஸ்லிமை வெறுக்கலாம்,
பல போர்கள் தொடுக்கலாம்,
எமது இறுதி மூச்சும்
இஸ்லாத்துக் கென்றோம் நாம்.
‘அபூ குரைப்’பின் சித்திரவதையும்,
‘குவன்தனா மோபே’யின் சிறை வைப்பும்,
அதிகார வர்க்கத்தின் அநீதியும்,
முகவர் ஆட்சியிpன் அட்டூழியமும்,
உளவுப்படையின் துன்புறுத்தலும்,
மேற்குலகின் தலையீடும்,
மீடியாவின் அபாண்டமும்,
உச்ச கட்ட ஈமானின் …
பரீட்சைகள் என்றோம் நாம்..
புனித பூமியை மீட்கவும்..
ஆக்கிரமிப்பை அகற்றவும்..
ஓன்று பட்டோம் நாம்.
குர்ஆனாய் நடமாடி..
நபிவழியில் நாம் ஆள ..
இன்றே உழைப்போம் வாருங்கள்.
09-02-2011
(Plus*; The holy quran says; ...man was created weak...TMQ 4:28)

No comments:

Post a Comment