Pages

Monday 28 June 2010

28 RAJAB 1342: The Day the Muslim Ummah lost her leadership, the Khilafah

NB:

Khilafah Conference & Global Activism



How the Islamic state (and rule) was destroyed (Rajab Campaign 2008)



The recent unleashing of Israeli state terrorism leading to the killing of 9 innocent Turkish Muslim civilians on board the Gaza bound flotilla ship once again painfully demonstrated how the Muslim Ummah has no one to defend her or protect her.

The Turkish and Arab rulers responded in their usual spineless manner. Not a single ruler had the courage to sever all relations with the illegitimate Israeli state and release the Muslim armies to defend the Muslims.

Whether it is in Gaza or on the Afghanistan Pakistan border, the Muslim Ummah continues to be mercilessly massacred by the vicious Western powers. This situation begun the day the Muslim Ummah lost her shield, her leader, the Khalifah. It was 89 years ago this month on the 28th Rajab 1342 (3rd March 1924) that the last Islamic Khilafah was destroyed. A meeting of the National Assembly in Ankara passed a resolution that turned the Uthmaniyah Khilafah in Turkey into a secular state. The institution that represented the leadership and unity of the Muslim Ummah from the time of the Prophet (salallahu alaihi wasallam) for 1300 years was finally abolished.

Allah Subhanu wa Ta’ala ordered ‘And hold fast all of you to the rope of Allah and do not be divided’ [Translated Meaning Quran Surah 3:103]. But, since that day we have been divided into over 50 states, weak and preyed upon by foreign powers.

Allah’s Messenger (salallahu alaihi wasallam) said “the Imam is a shield” [Muslim] – but since the destruction of the Khilafah we have had no Imam to be that shield – allowing every type of predator to devour the flesh of the Muslim Ummah.

The abolition of the Khilafah followed years of decay, and decades of decline – the final act in a much longer process where Muslims stopped referring to their Deen (Ahkam Shariah) to solve life’s affairs, instead becoming infatuated with Western secular ideas.

The Khilafah had been a great state for centuries. It was a superpower on the world stage. It was a leading state in science, technology, commerce, architecture and jurisprudence.

But during the period of decline Western colonial states -Britain, France and Germany – made plans to weaken, divide and plunder it. First Napoleon occupied Egypt in 1798. Then Britain occupied it and also worked with rebellious traitors like Sharif Hussain and Ibn Saud to detach the Hijaz, Yemen, Kuwait and Iraq from the Khilafah. Palestine was occupied by the British at the end of the First World War, which laid the grounds to concede the land to Zionist terrorists in 1948. The Khilafah had been slowly cut to pieces before it was finally destroyed on 28th Rajab 1342 (3rd March 1924) with the help of the traitor Mustapha Kamal in Turkey.

The Muslims immediately knew the implications of this, particularly in the Indian sub-continent. In a letter to the Times newspaper on 5th March 1924, Ameer Ali, one of the leaders of the Khilafat movement in India wrote: “it will prove a disaster to Islam and to civilisation”.

After the eventual destruction of the Khilafah State the Western colonial powers installed puppet rulers in our countries who would continue to serve the interests of the Western powers, rather than obey Allah and His Messenger, and serve the Muslim Ummah. Decades later, it is little wonder that crooks and gangsters who usurp power such as Karzai, Zardari, Mubarak, Gaddafi, the house of Saud etc have the red carpet laid out for them in Western capitals.
Today, the Western powers who sense the growing call to remove these corrupt rulers and re-establish the Islamic Khilafah state are desperately trying to prevent this by occupying our lands and spreading malicious propaganda against the call for Khilafah. In February 2009 the Guardian newspaper revealed that the British government held the colonialist view that it is ‘extremism’ to believe in the re-establishment of the Khilafah. Only recently the retired UK army chief, Richard Dannat when asked about the occupation of Afghanistan, said; “there is an Islamist agenda which if we don’t oppose it and face it off in Southern Afghanistan, or Afghanistan, or in South Asia, then frankly that influence will grow. It could well grow, and this is an important point, we could see it moving from South Asia to the Middle East to North Africa, and to the high water mark of the Islamic Caliphate in the 14th, 15th century.”

Despite all the propaganda and war in the Muslim lands, the reality is that the Ummah is awakening and realising the true message of Islam. After the massacres in Gaza, Iraq and Afghanistan, torture and detention in Guantanamo Bay, Abu Ghraib and Bagram, Muslims can see the destruction wrought in the name of ‘freedom and democracy’ and are rushing to work for the re-establishment of the Khilafah.

The Prophet (sallallahu alaihi wasallam) said “whosoever dies without a bayah (to a Khalifah) on his neck dies the death of jahiliyyah” [Muslim].

The Prophet (sallallahu alaihi wasallam) said “A single day under a just ruler is better than 60 years of ibadah” [Bayhaqi / Tabarani].

Hizb ut-Tahrir is working night and day across the Muslim world for the re-establishment of the Islamic Khilafah. Our work has steadily grown over more than 50 years such that our presence is increasingly felt in Palestine, Pakistan, Afghanistan, Bangladesh, Indonesia, Central Asia and the Arab Muslim countries.

This Rajab Hizb ut-Tahrir is holding a landmark international conference in Beirut, Lebanon. This conference will bring Muslims from all over the world, including politicians, journalists, thinkers, academics and other influential people to call for the historic return of the Islamic Khilafah State. This conference will aim to raise the issue of establishing the Khilafah State to the top of the agenda in the Muslim world.

We urge you, brothers and sisters, to make a pledge to join this global effort this Rajab to re-establish the Deen of Allah Subhanu wa Ta’ala, the Khilafah, so that the long awaited Islamic leadership for this Ummah returns. A leadership that will have the backbone to stand up against the atrocities committed by Israel and other Western powers, a leadership that will end the corruption, looting and incompetence of our rulers and a leadership that will stand for Islam, conveying the Dawah of Islam to the peoples of the world.

Re-establishing the Khilafah is not an issue amongst issues. It is THE most important issue for the Muslim Ummah. Every day our blood is spilt cheaply in Palestine, Afghanistan, Pakistan, Kashmir and Iraq. The Muslim Ummah is crying out for a leader who will take a stand against these brutal occupations and stand up to the oppressors. To re-establish the Khilafah we need to build an overwhelmingly strong movement within our countries that will overthrow the corrupt rulers from their thrones and bring into place a Khalifah who will implement the Shariah and stand up for the affairs of the Muslim Ummah. Join us in building this global
movement.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَنصُرُوا اللَّهَ يَنصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ

“O you who believe, if you support the cause of Allah, He will support you and plant your feet firmly” (Surah Muhammad 47:7) (Ends/)

Home               Sri Lanka Think Tank-UK(main Link)

Saturday 12 June 2010

இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு - இஸ்லாமிய முறைமை - System of Islam - Nidam Al Islam

முஹம்மது(ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்(சுபு) அருளிய மார்க்கம்தான் இஸ்லாம். அது மனிதர்களுக்கும் படைப்பாளனான அல்லாஹ்(சுபு)வுக்கும் இடையிலுள்ள உறவையும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள உறவையும் ஒழுங்குபடுத்துகிறது. மனிதர்களுக்கும் படைப்பாளனுக்கும் இடையிலுள்ள உறவு அகீதா என்ற அடிப்படை கோட்பாடு மற்றும் வணக்க வழிபாட்டு (IBADAH) செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆகவே வாழ்வியல் குறித்த அனைத்து விவகாரங்களையும் பற்றி பேசக்கூடிய ஒரு சித்தாந்தமாக இஸ்லாம் விளங்குகிறது. எந்த வகையான புரோகித சடங்கு சம்பிரதாய விவகாரங்கள் குறித்து விவாதிக்கின்ற சமய தத்துவமாக அது விளங்கவில்லை. ஏகாதிபத்தியம் என்ற எதேச்சதிகாரத்திலிருந்து அது தன்னை தூரமாக்கிக் கொண்டுவிட்டது. ஏனெனில் புரோகிதர்கள் குழுவோ அல்லது வாழ்வியல் விவகாரங்களை மட்டும் கவனிக்கின்ற உலகாயுத குழுவோ இங்கு கிடையாது. இஸ்லாத்தை தழுவுகின்ற அனைவரும் முஸ்லிம்கள் என்றே கருதப்படுகிறார்கள். இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் கடமையிலும் உரிமையிலும் அனைவரும் சமமே. ஆகவே மதகுரு என்பவரோ அல்லது மதசார்பற்றவர் என்பவரோ இங்கு கிடையாது. ஏனெனில், இஸ்லாத்தின் ஆன்மீக அம்சம் என்பதன் பொருள் என்னவெனில், அனைத்துப் பொருட்களும் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டு அவனுடைய கட்டளைப்படி ஒழுங்குபடுத்தப்படுகிறது என்பதாகும். மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றியும் அவைகளை சூழ்ந்துள்ளது எது என்பது பற்றியும் அவைகளோடு தொடர்புடையது எது என்பது பற்றியும் விளக்கும் இந்த மகத்தான கருத்து, கண்ணோட்டம் நமக்கு காண்பிப்பது என்னவென்றால் இந்த அனைத்துப் பொருட்களும் குறையுள்ளவை (Naaqis) முழுமையற்றவை (a’ajiz) தேவையுள்ளவை (Multtaj) என்பதைத்தான். இவை அனைத்தும் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டு அவனுடைய கட்டளைப்படி நிர்வகிக்கப்படுகின்றன என்பதையும் மனிதன் இந்த வாழ்க்கையில் அவனுடைய உள்ளார்ந்த விருப்பங்களையும் (Instinct) உடல்சார்ந்த தேவைகளையும் (Organic Needs) நிறைவு செய்து கொள்ளும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு செயலாக்க அமைப்பு (System- Nidam) தேவை என்பதையும் எந்தவித சந்தேகமுமின்றி உறுதிப்படுத்துகிறது. மனிதன் முழுமையற்றவனாக இருப்பதாலும் நிறைவான அறிவற்றவனாக இருப்பதாலும் இந்த செயலாக்க அமைப்பு அவனிடமிருந்து உருவாக முடியாது. மேலும் இந்த அமைப்பை உருவாக்கும் மனிதனது ஆற்றல் வேறுபாடுகளுக்கும் மாறுபாடுகளுக்கும் முரண்பாடுகளுக்கும் உட்பட்டதாக இருக்கும். இது இந்த அமைப்பில் முரண்பாடுகளை உருவாக்குவதற்கும் மனிதனை துயரத்தில் ஆழ்த்துவதற்கும் வழிவகுத்துவிடும். ஆகவே செயலாக்க அமைப்பு அல்லாஹ்(சுபு)விடமிருந்துதான் வரவேண்டும். எனினும் இஸ்லாமிய செயலாக்க அமைப்புக்கு (System of Islam) இணக்கமாக இருக்கும் மனிதன் அது அல்லாஹ்(சுபு)விடமிருந்து வந்துள்ளது என்பதை கருத்திற்கொள்வதைவிட இந்த அமைப்பின் உலகாயுத பயன்களை அடைந்து கொள்வதை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டால், அங்கே ஆன்மீக அம்சம் அற்றுப்போகிறது. ஆகவே மனிதன் செயல்பாடுகளை மேற்கொள்ளும் போது, ஆன்மா (RUH) அவனிடத்தில் இருக்கும் வகையில், அல்லாஹ்(சுபு)வுடம் அவனுக்குள்ள உறவை விளங்கிக் கொண்ட அடிப்படையில், அவனுடைய (சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக தன்னுடைய செயல்பாடுகளை கண்டிப்பாக ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். இது ஏனெனில், ரூஹ் என்பது அல்லாஹ் (சுபு)வுடன் மனிதனுக்கு உள்ள உறவை அவன் உணர்ந்து கொள்வதாகும். செயல்பாடுகளை மேற்கொள்ளும் தருணத்தில் அல்லாஹ்(சுபு)வுடன் மனிதனுக்கு உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வு மனிதனுக்கு ஏற்படுவதுதான் இயற்பொருட்களையும் (Matter) ஆன்மாவையும் (RUH) ஒன்று கலப்பது என்பதாகும். ஆகவே அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வின் அடிப்படையில் மனிதன் அவனுடைய (சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக செயல்படுகிறான். செயல் என்பது இயற்பொருளாகும் (Matter). அந்த செயலை மேற்கொள்ளும்போது அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை மனிதன் விளங்கிக் கொள்ளும் உணர்வுதான் ஆன்மாவாகும் (Spirit). எனவே அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வோடு அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் விளங்கிக்கொண்ட உணர்வோடு அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளின்படி ஒருவரின் செயல் வழி நடத்தப்படுவதுதான் இயற்பொருளை ஆன்மாவுடன் கலப்பது என்பதாகும். இதனடிப்படையில் குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்தும் கொண்டு வரப்பட்ட அஹ்காம் ஷரிஆவின் அடிப்படையில் ஒரு முஸ்லிம் அல்லாதவர் செயல்படும் போது அவரது செயல் ஆன்மாவினால் வழிநடத்தப்படுவதில்லை. மேலும் இயற்பொருளையும் ஆன்மாவையும் ஒன்று கலக்கும் அம்சமும் அவரது செயலில் இடம் பெறுவதில்லை. அவர் இஸ்லாத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை அவர் விளங்கிக் கொள்ளவில்லை என்ற உண்மைதான் இதற்கு காரணம். அவர் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பை (System of Islam) மட்டும் பாராட்டி ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் தன் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்திக் கொண்டார்.

அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வுடன் அவனது(சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு முஸ்லிமின் நிலைக்கு இது நேர் மாறானது. அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு ஒரு முஸ்லிம் இணங்கி நடப்பதன் நோக்கம் அவனுடைய(சுபு) உவப்பை பெறுவதற்கே தவிர அமைப்பின் உலக பயன்களை பெற்றுக் கொள்வதற்காக அல்ல. ஆகவே இயற்பொருட்களில் ஆன்மீக விஷயங்கள் இடம்பெற்றிருப்பதும் செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது மனிதனிடம் ஆன்மா இடம் பெற்றிருப்பதும் அவசியமாகும். அனைவருக்கும் தெளிவாக விளங்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆன்மீக விஷயம் (Spiritual Aspects) என்பதன் அர்த்தம் அனைத்துப் பொருட்களும் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டிருக்கிறது என்பதாகும். அதாவது, படைப்பினங்கள் படைப்பாளனுடன் உள்ள உறவை உணர்வது என்பதுதான் ஆன்மா எனப்படும். ஆகவே ஆன்மா என்பது படைப்பாளனுடன் உள்ள உறவை மனிதன் விளங்கிக் கொள்வது, அதாவது அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை மனிதன் விளங்கிக் கொள்வது. இதுதான் ஆன்மா (ரூஹ்), ஆன்மீகம் (ரூஹான்யா), ஆன்மீக விஷயங்கள் (நாஹியத் ரூஹ்யா) ஆகியவற்றைப் பற்றிய மிகச்சரியான சிந்தனையாகும். மற்ற சிந்தனைகள் தவறானவை. மனிதன் வாழ்வு பிரபஞ்சம் ஆகியவற்றைப் பொருத்த தீர்க்கமான மற்றும் பிரகாசமான (Spiritual Aspects) கண்ணோட்டம் இதுதான். இந்த சரியான கண்ணோட்டம் சரியான விளைவுகளை நோக்கியும் சரியான சிந்தனையின் பாலும் இட்டுச் சென்றுள்ளது.

சில மதங்கள் (Religion) பிரபஞ்சத்தில் புலன் உணர்வுக்கு உட்பட்டது (Mahsoos) புலன் உணர்வுக்கு மறைவானது (Mughayyah) ஆகிய இரண்டு அம்சங்கள் இருப்பதாக வாதிடுகின்றன. ஆன்மீக உயர்வு மற்றும் உடல்சார்ந்த விளைவு ஆகிய இரண்டையும் கொண்டவனாக மனிதன் இருக்கிறான் என்றும், மனித வாழ்வு இயற்பொருள் அம்சத்தையும் (Meterialistic) ஆன்மீக அம்சத்தையும் உடையதாக இருக்கிறது என்றும் கூறுகின்றன. புலன் உணர்வுக்கு உட்பட்டவைகள் புலன் உணர்வுக்கு மறைவானவைகளோடு முரண்படக்கூடியவை என்றும், ஆன்மீக உயர்தன்மை உடல்சார்ந்த விளைவுகளோடு இருக்க முடியாது என்றும், இயற்பொருட்கள் ஆன்மாவிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன என்றும் இந்த மதங்கள் கூறுகின்றன. அவை இரண்டின் தன்மையின் காரணமாக ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணிக் கொள்வதில் இம்மதங்கள் திருப்தியடைகின்றன. ஆகவே அவை இரண்டும் ஒன்று கலக்க முடியாதது என்றும், ஒன்றின் மிகுதி மற்றொன்டின் குறைவுக்கு வழிகோலும் என்றும் கூறுகின்றன. இதன் முடிவாக மறுமையை விழைபவர்கள் ஆன்மீக பரிமாணத்தை பெற்றிருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்த கருத்தின் அடிப்படையில் கிருஸ்தவத்தில் இரண்டு அதிகார அமைப்புகள் உருவாகின. “சீஸருக்கு கொடுக்க வேண்டியதை சீஸருக்கு கொடு, தேவனுக்கு கொடுக்க வேண்டியதை தேவனுக்கு கொடு” என்பதாக கிருஸ்தவம் கூறுகிறது. இதன்படி ஆன்மீக அதிகார அமைப்பை கையில் வைத்துக் கொண்டிருந்த கிருஸ்தவ பாதிரிகளும், மதகுருமார்களும் ஆன்மீக விஷயங்களுக்கு முன்னுரிமை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வாழ்வியல் அதிகார அமைப்பை கையில் எடுத்துக் கொள்ள கடும் முயற்சி மேற்கொண்டார்கள். இதன் விளைவாக இவ்விரு சாரர்களுக்கும் இடையில் கடும் போராட்டம் உருவாகியது. இதன் உச்சகட்ட நிகழ்வாக கிருஸ்தவச் திருச்சபை ஆன்மீக அதிகாரத்தோடு மட்டும் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் வாழ்வியல் விவகாரங்களில் தலையீடு செய்வதை விட்டும் தடுக்கப்பட்டது. மதம் புரோகிதத்தைச் சார்ந்தது என்றபடியால் அது வாழ்வியலிலிருந்து பிரிக்கப்பட்டது.

வாழ்வியலிலிருந்து மார்க்கத்தை பிரித்து வைக்கும் இந்த கொள்கைதான் முதலாளித்துவ சித்தாந்தத்தின் அடிப்படை கோட்பாடாக இருக்கிறது. மேற்கத்திய நாகரீகத்திற்கும், அறிவார்ந்த தலைமைக்கும் இதுதான் அடித்தளமாக விளங்குகிறது. மேற்கத்திய காலனி ஆதிக்கவாதிகள் அழைப்பு விடுப்பதும் உலகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்வதும் இந்த கொள்கையைத்தான். அதன் கலாச்சாரத்தின் பிரதான தூணாக இந்த சிந்தனை விளங்குகிறது. இந்த கோட்பாட்டின் அடித்தளத்தில் நின்று கொண்டுதான் மேற்கத்தியர்கள் முஸ்லிம்கள் இஸ்லாத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையை அசைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். கிருஸ்தவத்துடன் ஒப்புநோக்கி இஸ்லாத்தை அவர்கள் கணக்கிடுகிறார்கள். இவை இரண்டையும் மதங்கள் என்று எண்ணுகிறார்கள். எனவே வாழ்வியலிலிருந்து மார்க்கத்தை பிரிக்க வேண்டும் என்ற இந்த கருத்தை எவர் கொண்டிருக்கின்றாரோ அவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மேற்கத்திய அறிவார்ந்த தலைமையினால் இயக்கப்படும் முகவர் (Agent) ஆவார். அறிந்த நிலையிலோ அல்லது அறியாத நிலையிலோ மேற்கத்திய காலணி ஆதிக்கத்தின் முகவராகவே அவர் பணியாற்றுகின்றார்.

நமது புலனறிவு விளங்கிக் கொண்ட பொருட்களை இயற்பொருள் (Matter) என்றும், அவைகள் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டுள்ளன என்ற உண்மை அவைகளிடமுள்ள ஆன்மீக அம்சத்தை தீர்மானிக்கிறது என்றும் இஸ்லாம் கருதுகிறது. ஆன்மா என்பது அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை மனிதன் விளங்கிக் கொள்வதாகும். ஆகவே இயற்பொருளிலிருந்து அதன் ஆன்மீக அம்சம் எப்போதும் பிரியாதிருக்கின்றது. எனவே ஆன்மீக உயர்தன்மை என்ற ஒன்றோ அல்லது உடல்சார்ந்த விருப்பம் என்ற ஒன்றோ இங்கே இருப்பதில்லை. மாறாக, மனிதனுக்கு உடல்சார்ந்த தேவையும், உள்ளார்ந்த உணர்வுகளும் இருக்கின்றன. அவைகளை அவன் நிறைவு செய்ய வேண்டும். மனிதனிடம் இடம் பெற்றுள்ள உள்ளார்ந்த உணர்வுகளில், அடிபணியும் உள் உணர்வு (Reverence Instinct) ஒன்றாகும். இதன் அர்த்தம் அவனுக்கு ஒழுங்குபடுத்தும் (Organiser) ஒரு படைப்பாளன் தேவை என்பதாகும். இந்த உணர்வு அவனிடம் இயல்பாக இடம்பெற்றுள்ள உள்ளார்ந்த பலவீனத்தின் விளைவாகும். உள்ளார்ந்த உணர்வுகளை நிறைவு செய்து கொள்வதை இயற்பொருள் அம்சமாகவோ (Meterial Aspect) அல்லது ஆன்மீக அம்சமாகவோ (Spiritual Aspect) அழைக்க முடியாது. மாறாக, அதை நிறைவேற்றுதல் என்றே கருத வேண்டும். அல்லாஹ்(சுபு) அருளியுள்ள செயலாக்க அமைப்புக்கும் அவனோடு(சுபு) உள்ள உறவுக்கும் இணக்கமான முறையில் உடல் சார்ந்த தேவைகளையும் உள்ளார்ந்த உணர்வுகளையும் மனிதன் நிறைவு செய்து கொண்டால், இந்த நிறைவு செய்தல் ரூஹ்ஹினால் இயக்கப்படுகிறது என்று பொருள். அதே சமயத்தில் இந்த நிறைவு செய்தல் ஒரு செயலாக்க அமைப்பு இன்றியோ அல்லது அல்லாஹ்(சுபு)விடமிருந்து அருளப்படாத ஒரு செயலாக்க அமைப்பின் அடிப்படையிலோ நிறைவு செய்யப்பட்டால் அது இயற்பொருள் (Meteialistic) அடிப்படையில் நிறைவு செய்யப்படதாக இருக்கும். அது மனிதனின் துன்பத்திற்கு வழி வகுத்துவிடும். இனவிருத்தி உள்ளார்ந்த உணர்வு (procreation instinct) ஒரு செயலாக்க அமைப்பின்றியோ அல்லது அல்லாஹ்(சுபு)விடமிருந்து அருளப்படாத ஒரு செயலாக்க அமைப்பின்படியோ நிறைவு செய்யப்பட்டால் அது மனிதனை துன்பத்திற்கு உள்ளாக்கிவிடும். இதற்கு மாறாக அல்லாஹ்(சுபு) அருளிய திருமணம் என்னும் செயலாக்க அமைப்பின்படி அதாவது இஸ்லாத்தின் அஹ்காம் ஷரிஆவின்படி நிறைவு செய்யப்பட்டால் அது மன அமைதியை விளைவிக்கின்ற திருமணமாக இருக்கும். அடிபணியும் உள்ளார்ந்த உணர்வு ஒரு செயலாக்க அமைப்பு இன்றியோ அல்லது மனிதர்களையும் சிலைகளையும் வணங்கி வழிபடுவது போன்ற அல்லாஹ்(சுபு)விடமிருந்து அருளப்படாத செயலாக்க அமைப்பின்படியோ நிறைவு செய்யப்பட்டால் அது இணைவைத்தல் (ஷிர்க்) அல்லது நிராகரித்தலாகவே (குஃப்ர்) இருக்கும். இஸ்லாத்தின் அஹ்காம் ஷரிஆவின்படி அது நிறைவு செய்யப்பட்டால் அது இபாதத் ஆகும். ஆகவே மனிதனுக்கு அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வின் அடிப்படையில் ஒவ்வொரு பொருட்களிலும் ஆன்மீக அம்சத்தை அவசியம் உணர வேண்டும். மேலும் அனைத்து செயல்பாடுகளையும் அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக மேற்கொள்ள வேண்டும். வேறு வகையில் கூறினால் செயல்கள் யாவும் ஆன்மாவினால் இயக்கப்பட வேண்டும். ஆகவே செயல்பாடுகளில் இரண்டு பகுதி என்பது கிடையாது. உண்மையில் அது ஒன்றே ஒன்றுதான். அதுதான் செயல் (Action). ஒரு செயலை இயற்பொருள் அம்சத்தை மட்டும் உடையது என்றோ அல்லது ஆன்மாவினால் இயக்கப்பட்டது என்றோ விளக்குவது அந்த செயல்பாட்டைக் கொண்டு அல்ல, மாறாக இஸ்லாத்தின் விதிமுறைகளுக்கு (அஹ்காம் ஷரிஆ) ஏற்றபடி அது இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை பொறுத்ததுதான். உதாரணமாக ஒரு முஸ்லிம் எதிரியை போர்க்களத்தில் கொல்லும்போது அது ஜிஹாத் என்று கருதப்படுகிறது. அந்தச் செயலுக்கு நற்கூலி உண்டு. ஏனெனில் அந்த செயல் இஸ்லாத்தின் அஹ்காம் ஷரிஆவினால் இயக்கப்பட்டது. அதே மனிதர் முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாத ஒரு அப்பாவி மனிதனைக் கொன்றால் அவரது செயல் ஒரு கொலையாக கருதப்படும். அதற்காக அவர் தண்டிக்கப்படுவார். ஏனெனில் அது அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு எதிரானது. இரண்டு செயல்களும் கொல்லுதல் என்ற ஒன்றுதான். மேலும் அவை மனிதனிடமிருந்தே வெளிப்படுகின்றன. எனினும் ஆன்மாவினால் இயக்கப்படும்போது கொல்லுதல் வணக்கமாகிவிடுகிறது (Worship - Ibadah). அவ்வாறு நடைபெறாத போது அது கொலையாகி விடுகிறது. ஆகவே ஒரு முஸ்லிம் தன்னுடைய செயல்களை ஆன்மாவின்படி இயக்குவதற்கு கட்டளையிடப்பட்டுள்ளான். இயற்பொருளையும் ஆன்மாவையும் ஒன்று கலப்பது சாத்தியமானது மட்டும் அல்ல, மாறாக கடமையானதும்கூட. ஆன்மாவிலிருந்து இயற்பொருளை பிரிப்பதற்கு அனுமதியில்லை. வேறு வகையில் கூறுவதென்றால் மனிதனுக்கு அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வின் அடிப்படையில்; அவனுடைய(சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகளின்படி செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் நிலையிலிருந்து எந்த செயலையும் பிரிப்பதற்கு அனுமதியில்லை. இதனடிப்படையில் இயற்பொருள் அம்சத்திலிருந்து ஆன்மீக அம்சத்தை பிரிப்பதை மறைமுகமாக குறிப்பிடும் அனைத்தையும் நீக்க வேண்டும். ஆகவே இஸ்லாத்தில் மதகுரு அல்லது மதப் புரோகிதர் என்பவர் கிடையாது. எந்தவிதமான புரோகித பணி செய்யும் ஆன்மீக அதிகார அமைப்பும் கிடையாது, மார்க்கத்திலிருந்து பிரிக்கப்பட்ட வாழ்வியல் விவகார அதிகார அமைப்பும் கிடையாது. மாறாக இஸ்லாம் என்பது ஒரு மார்க்கம். அதன் பிரிக்க முடியாத பகுதி இஸ்லாமிய அரசு ஆகும். தொழுகையைப் போன்ற அரசு என்பதும் அஹ்காம் ஷரிஆவின் ஒரு தொகுப்பு ஆகும். இஸ்லாத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும், இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு வழிமுறையாக அது இருக்கிறது. ஆகவே மார்க்கத்தை ஆன்மீக அச்சத்தோடு சுருக்கி, அதை அரசியலை விட்டும், ஆட்சியை விட்டும் பிரிக்கும் எந்த ஒன்றையும் கட்டாயம் அழித்துவிட வேண்டும். ஆகவே ஆன்மீக விவகாரங்களை மட்டும் பிரத்தியேகமாக கவனித்துக் கொள்ளும் அனைத்து அமைப்புகளையும் உடனே ஒழித்துவிட வேண்டும். இந்த வகையில் பள்ளிவாசல் திணைக்களங்கள் ஒழிக்கப்பட்டு பள்ளிவாசல்கள் கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். ஷரிஆ நீதிமன்றங்களும் உரிமையியல் நீதிமன்றங்களும் ஒழிக்கப்பட்டு இஸ்லாத்தின் அடிப்படையில் நீதித்துறை ஒன்றாக மாற வேண்டும். ஏனெனில் இஸ்லாத்தின் அதிகார அமைப்பு ஒன்றுதான். இஸ்லாம் என்பது அகீதாவும் அதன் செயலாக்க அமைப்பும் (System-Nidam) கொண்டது. அகீதா என்பது அல்லாஹ்(சுபு) மீதும், மலக்குகள் மீதும் வேதங்கள் மீதும், தூதர்கள் மீதும், நியாயத்தீர்ப்பு நாள் மீதும் நன்மை தீமை அல்லாஹ்(சுபு)விடமிருந்து வருகின்றன எனக்கூறும் அல்களாவல்கத்ர் மீதும் நம்பிக்கை கொள்வதாகும். பகுத்தறிவைக் கொண்டு அறிந்து கொள்ளும் விதத்தில் இஸ்லாம் அகீதாவை அறிவின் மீது கட்டமைத்து இருக்கிறது. இதில் அல்லாஹ்(சுபு)வின் உள்ளமை (Existence of God) முஹம்மது(ஸல்) அவர்களின் தூதுத்துவம் மற்றும் இறைமறை குர்ஆன் ஆகியவை அடங்குகின்றன. நியாயத்தீர்ப்பு நாள், மலக்குகள், சுவனம், நரகம் ஆகிய புலன் அறிவுக்கு அப்பாலுள்ள அகீதாவின் விஷயங்கள் சங்கைமிக்க குர்ஆன் மற்றும் ஹதீஸ் முத்தவாத்திர் ஆகிய திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்ட ஆதார மூலங்களின் அடிப்படையில் நம்பப்படுகின்றன. இவை இரண்டும் அறிவார்ந்த ஆதாரத்தின் மீது நிறுவப்பட்டவைகள். இஸ்லாம், அறிவை (சட்ட ரீதியான) பொறுப்புக்கு அடிப்படையாக ஆக்கியிருக்கிறது.

இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு (System - Nidam) அஹ்காம் ஷரிஆவாகும். அது மனிதர்களின் விவகாரங்களை ஒழுங்குபடுத்துகிறது. இஸ்லாமிய செயலாக்க அமைப்பு பொதுவான முறையிலும் பொதுவான அர்த்தங்களிலும் மனிதனின் அனைத்து விவகாரங்களையும் கையாண்டுள்ளது. இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தும்போது, இந்த பொது அர்த்தங்களிலிருந்து அதன் விரிவான சட்டங்களை ஒருவர் பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே குர்ஆனும் சுன்னாவும் பொதுவான அர்த்தங்களைக் கொண்டது. மனிதன் என்ற அந்தஸ்த்தில் அது அவனது பிரச்சினைகளை கையாள்கிறது. இந்த பொது அர்த்தங்களிலிருந்து வெவ்வேறு காலகட்டங்களிலும் வெவ்வேறு இடங்களிலும் உருவாகும் அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை முஜ்தஹிதீன்கள் கொண்டு வருவார்கள்.

மனிதர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் இஸ்லாம் வேறுபாடு இல்லாத ஒரே அணுகுமுறையைக் கொண்டதாக இருக்கிறது. விளங்கிக் கொள்ளும்வரை பிரச்சினையை முழுமையாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்து, சரியாக அதை விளங்கிக் கொண்டு பிறகு அதனோடு தொடர்புடைய ஷரிஆ ஆதாரங்களை ஆய்வு செய்து இறுதியில் அந்த ஆதாரங்களின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை கொண்டு வருவதற்காக முஜ்தஹீதுகளை இஸ்லாம் வரவேற்கிறது. இவ்வாறுதான் ஒரு முஜ்தஹீத் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதற்காக ஷரிஆ ஆதாரங்களிலிருந்து குக்கும் ஷரிஆவை முடிவு செய்கிறார். வேறு எந்த வழிமுறைகளும், இஸ்லாத்திற்கு பயன்படாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் மனிதன் எதிர்கொள்கின்ற எந்த பிரச்சினையாக இருந்தாலும், அதை மனித வர்க்கத்தின் பிரச்சினையாகவே ஆய்வு செய்ய வேண்டும். பொருளாதாரம், சமூகம், அரசியல் அல்லது வேறு எந்த வகை பிரச்சினையாக இருந்தாலும் அதை தனிப்பட்ட துறைக்கு சார்புடையதாக ஆய்வு செய்யக்கூடாது. மாறாக, பிரச்சினைக்கு தொடர்புடைய அல்லாஹ்(சுபு)வின் குக்குமை அறிந்து கொள்ளும் பொருட்டு குக்கும் ஷரிஆ தேவைப்படும் மனித இனத்தின் ஒரு பிரச்சினையாகவே அதை ஆய்வு செய்ய வேண்டும். (‘விடுதலை’/Ends)